قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

external-link copy
87 : 2

وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ وَقَفَّیْنَا مِنْ بَعْدِهٖ بِالرُّسُلِ ؗ— وَاٰتَیْنَا عِیْسَی ابْنَ مَرْیَمَ الْبَیِّنٰتِ وَاَیَّدْنٰهُ بِرُوْحِ الْقُدُسِ ؕ— اَفَكُلَّمَا جَآءَكُمْ رَسُوْلٌۢ بِمَا لَا تَهْوٰۤی اَنْفُسُكُمُ اسْتَكْبَرْتُمْ ۚ— فَفَرِیْقًا كَذَّبْتُمْ ؗ— وَفَرِیْقًا تَقْتُلُوْنَ ۟

திட்டவட்டமாக மூஸாவிற்கு வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப் பின்னர் தொடர்ச்சியாக(ப் பல) தூதர்களை அனுப்பினோம். மர்யமுடைய மகன் ஈஸாவிற்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; அவரை (ஜிப்ரயீல் எனும்) பரிசுத்த ஆத்மாவைக் கொண்டு பலப்படுத்தினோம்; உங்கள் மனங்கள் விரும்பாததை (நம்) தூதர் எவரும் உங்களுக்குக் கொண்டு வந்த போதெல்லாம் நீங்கள் பெருமையடித்(து மறுத்)தீர்களல்லவா? (அத்தூதர்களில்) ஒரு பிரிவினரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள், ஒரு பிரிவினரைக் கொலை செய்கிறீர்கள். info
التفاسير: