قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

بەت نومۇرى:close

external-link copy
43 : 23

مَا تَسْبِقُ مِنْ اُمَّةٍ اَجَلَهَا وَمَا یَسْتَاْخِرُوْنَ ۟ؕ

எந்த ஒரு சமுதாயம் தனது தவணையை முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
44 : 23

ثُمَّ اَرْسَلْنَا رُسُلَنَا تَتْرَا ؕ— كُلَّ مَا جَآءَ اُمَّةً رَّسُوْلُهَا كَذَّبُوْهُ فَاَتْبَعْنَا بَعْضَهُمْ بَعْضًا وَّجَعَلْنٰهُمْ اَحَادِیْثَ ۚ— فَبُعْدًا لِّقَوْمٍ لَّا یُؤْمِنُوْنَ ۟

பிறகு நாம் நமது தூதர்களை தொடர்ச்சியாக அனுப்பினோம். ஒரு சமுதாயத்திற்கு, அதன் தூதர் வந்தபோதெல்லாம் அவர்கள் அவரை பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்களில் சிலரை (அழித்து) சிலரை பின்னர் கொண்டு வந்தோம். அவர்களை (மக்களுக்கு) படிப்பினை நிறைந்த நிகழ்வுகளாக நாம் ஆக்கிவிட்டோம். நம்பிக்கை கொள்ளாத மக்கள் தொலைந்து போகட்டும். info
التفاسير:

external-link copy
45 : 23

ثُمَّ اَرْسَلْنَا مُوْسٰی وَاَخَاهُ هٰرُوْنَ ۙ۬— بِاٰیٰتِنَا وَسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟ۙ

பிறகு நாம் மூஸாவையும் அவருடைய சகோதரர் ஹாரூனையும் நமது அத்தாட்சிகளைக் கொண்டும் தெளிவான ஆதாரத்தைக் கொண்டும் நாம் அனுப்பினோம். info
التفاسير:

external-link copy
46 : 23

اِلٰی فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهٖ فَاسْتَكْبَرُوْا وَكَانُوْا قَوْمًا عَالِیْنَ ۟ۚ

ஃபிர்அவ்னிடமும் அவனுடைய சமுதாயத் தலைவர்களிடமும் (நாம் அவ்விருவரையும் அனுப்பினோம்). அவர்கள் பெருமையடித்தனர். அவர்கள் ஆதிக்கம் செலுத்தக்கூடிய மக்களாக இருந்தனர். info
التفاسير:

external-link copy
47 : 23

فَقَالُوْۤا اَنُؤْمِنُ لِبَشَرَیْنِ مِثْلِنَا وَقَوْمُهُمَا لَنَا عٰبِدُوْنَ ۟ۚ

“எங்களைப் போன்ற இரு மனிதர்களை நாங்கள் நம்பிக்கை கொள்வோமா? அவ்விருவரின் சமுதாயமோ எங்களுக்கு பணிந்தவர்களாக இருக்கின்றனர்” என்று கூறினர். info
التفاسير:

external-link copy
48 : 23

فَكَذَّبُوْهُمَا فَكَانُوْا مِنَ الْمُهْلَكِیْنَ ۟

அவர்கள் (-ஃபிர்அவ்னும் அவனுடைய மக்களும்) அவ்விருவரையும் (-மூஸாவையும் ஹாரூனையும்) பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்கள் அழிக்கப்பட்டவர்களில் ஆகிவிட்டனர். info
التفاسير:

external-link copy
49 : 23

وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ لَعَلَّهُمْ یَهْتَدُوْنَ ۟

திட்டவட்டமாக மூஸாவிற்கு நாம் (ஒரு) வேதத்தைக் கொடுத்தோம், அவர்கள் (மூஸாவின் சமுதாயத்தினர்) நேர்வழி பெறுவதற்காக. info
التفاسير:

external-link copy
50 : 23

وَجَعَلْنَا ابْنَ مَرْیَمَ وَاُمَّهٗۤ اٰیَةً وَّاٰوَیْنٰهُمَاۤ اِلٰی رَبْوَةٍ ذَاتِ قَرَارٍ وَّمَعِیْنٍ ۟۠

மர்யமுடைய மகனையும் அவருடைய தாயையும் ஓர் அத்தாட்சியாக நாம் ஆக்கினோம். இன்னும் அவ்விருவரையும் உறுதியான உயரமான சமமான இடத்திற்கும் ஓடும் நீரூற்றுக்கும் நாம் ஒதுங்க வைத்தோம். info
التفاسير:

external-link copy
51 : 23

یٰۤاَیُّهَا الرُّسُلُ كُلُوْا مِنَ الطَّیِّبٰتِ وَاعْمَلُوْا صَالِحًا ؕ— اِنِّیْ بِمَا تَعْمَلُوْنَ عَلِیْمٌ ۟ؕ

தூதர்களே! நல்லவற்றிலிருந்து சாப்பிடுங்கள். நல்ல செயலை செய்யுங்கள். நீங்கள் செய்வதை நிச்சயமாக நான் நன்கறிந்தவன். info
التفاسير:

external-link copy
52 : 23

وَاِنَّ هٰذِهٖۤ اُمَّتُكُمْ اُمَّةً وَّاحِدَةً وَّاَنَا رَبُّكُمْ فَاتَّقُوْنِ ۟

நிச்சயமாக இதுதான் உங்களது ஒரே ஒரு மார்க்கம். நான்தான் உங்கள் இறைவன். ஆகவே, என்னை அஞ்சிக் கொள்ளுங்கள். info
التفاسير:

external-link copy
53 : 23

فَتَقَطَّعُوْۤا اَمْرَهُمْ بَیْنَهُمْ زُبُرًا ؕ— كُلُّ حِزْبٍۭ بِمَا لَدَیْهِمْ فَرِحُوْنَ ۟

அவர்கள் தங்களது காரியத்தை (-மார்க்கத்தை) தங்களுக்கு மத்தியில் பல வேதங்களாக பிரித்துக் கொண்டனர். ஒவ்வொரு பிரிவும் தங்களிடம் உள்ளதைக் கொண்டு பெருமைப்படுகின்றனர். info
التفاسير:

external-link copy
54 : 23

فَذَرْهُمْ فِیْ غَمْرَتِهِمْ حَتّٰی حِیْنٍ ۟

ஆகவே, (நபியே!) அவர்களை அவர்களுடைய வழிகேட்டில் (சிறிது) காலம் வரை விட்டு விடுவீராக! info
التفاسير:

external-link copy
55 : 23

اَیَحْسَبُوْنَ اَنَّمَا نُمِدُّهُمْ بِهٖ مِنْ مَّالٍ وَّبَنِیْنَ ۟ۙ

அவர்கள் (-தங்களது வேதத்தை பிரித்துக் கொண்டவர்கள்) எண்ணுகின்றனரா, நாம் அவர்களுக்கு செல்வத்திலிருந்தும் ஆண் பிள்ளைகளிலிருந்தும் எதைக் கொடுக்கிறோமோ, info
التفاسير:

external-link copy
56 : 23

نُسَارِعُ لَهُمْ فِی الْخَیْرٰتِ ؕ— بَلْ لَّا یَشْعُرُوْنَ ۟

அவர்களுக்கு நாம் நன்மைகளில் விரைகிறோம். (-அவற்றை அதிகப்படுத்துகிறோம்) என்று (எண்ணுகின்றனரா?), மாறாக அவர்கள் (புரிந்து) உணர மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
57 : 23

اِنَّ الَّذِیْنَ هُمْ مِّنْ خَشْیَةِ رَبِّهِمْ مُّشْفِقُوْنَ ۟ۙ

நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனின் பயத்தால் அச்சம் கொண்டவர்கள். info
التفاسير:

external-link copy
58 : 23

وَالَّذِیْنَ هُمْ بِاٰیٰتِ رَبِّهِمْ یُؤْمِنُوْنَ ۟ۙ

அவர்கள் தங்கள் இறைவனின் வசனங்களை நம்பிக்கை கொள்பவர்கள். info
التفاسير:

external-link copy
59 : 23

وَالَّذِیْنَ هُمْ بِرَبِّهِمْ لَا یُشْرِكُوْنَ ۟ۙ

அவர்கள் தங்கள் இறைவனுக்கு இணைவைக்காதவர்கள். info
التفاسير: