قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

بەت نومۇرى:close

external-link copy
36 : 27

فَلَمَّا جَآءَ سُلَیْمٰنَ قَالَ اَتُمِدُّوْنَنِ بِمَالٍ ؗ— فَمَاۤ اٰتٰىنِ اللّٰهُ خَیْرٌ مِّمَّاۤ اٰتٰىكُمْ ۚ— بَلْ اَنْتُمْ بِهَدِیَّتِكُمْ تَفْرَحُوْنَ ۟

அவர் (-அவளின் தூதர்) ஸுலைமானிடம் வந்தபோது, அவர் (ஸுலைமான்) கூறினார்: செல்வத்தை எனக்கு நீங்கள் தருகிறீர்களா? அல்லாஹ் எனக்கு தந்திருப்பது அவன் உங்களுக்கு தந்திருப்பதை விட மிகச் சிறந்தது. மாறாக, நீங்கள் உங்கள் அன்பளிப்புகளைக் கொண்டு பெருமிதம் அடைவீர்கள். (நான் அடைய மாட்டேன்.) info
التفاسير:

external-link copy
37 : 27

اِرْجِعْ اِلَیْهِمْ فَلَنَاْتِیَنَّهُمْ بِجُنُوْدٍ لَّا قِبَلَ لَهُمْ بِهَا وَلَنُخْرِجَنَّهُمْ مِّنْهَاۤ اَذِلَّةً وَّهُمْ صٰغِرُوْنَ ۟

நீ அவர்களிடம் திரும்பிப் போ! நாம் அவர்களிடம் (பல) இராணுவங்களைக் கொண்டு வருவோம். அவர்களை அவர்களுக்கு அறவே வலிமை இருக்காது. இன்னும் நிச்சயமாக அவர்களை அதிலிருந்து (அவர்களின் ஊரிலிருந்து) இழிவானவர்களாக நாம் வெளியேற்றுவோம். அவர்கள் (இஸ்லாமை ஏற்கவில்லை என்றால்) சிறுமைப்படுவார்கள். info
التفاسير:

external-link copy
38 : 27

قَالَ یٰۤاَیُّهَا الْمَلَؤُا اَیُّكُمْ یَاْتِیْنِیْ بِعَرْشِهَا قَبْلَ اَنْ یَّاْتُوْنِیْ مُسْلِمِیْنَ ۟

அவர் (தன் அவையோரிடம்) கூறினார்: “பிரமுகர்களே! உங்களில் யார் அவளுடைய அரச கட்டிலை -அவர்கள் என்னிடம் பணிந்தவர்களாக வருவதற்கு முன்னர் -கொண்டு வருவார்.” info
التفاسير:

external-link copy
39 : 27

قَالَ عِفْرِیْتٌ مِّنَ الْجِنِّ اَنَا اٰتِیْكَ بِهٖ قَبْلَ اَنْ تَقُوْمَ مِنْ مَّقَامِكَ ۚ— وَاِنِّیْ عَلَیْهِ لَقَوِیٌّ اَمِیْنٌ ۟

ஜின்களில் சாதுர்யமான ஒன்று கூறியது: நீர் உமது (இந்த) இடத்திலிருந்து எழுவதற்கு முன்னர் நான் அதை உம்மிடம் கொண்டு வருவேன். நிச்சயமாக நான் அதற்கு ஆற்றல் உள்ளவன், (அதில் உள்ள பொருள்களுக்கு) நம்பிக்கைக்குரியவன். info
التفاسير:

external-link copy
40 : 27

قَالَ الَّذِیْ عِنْدَهٗ عِلْمٌ مِّنَ الْكِتٰبِ اَنَا اٰتِیْكَ بِهٖ قَبْلَ اَنْ یَّرْتَدَّ اِلَیْكَ طَرْفُكَ ؕ— فَلَمَّا رَاٰهُ مُسْتَقِرًّا عِنْدَهٗ قَالَ هٰذَا مِنْ فَضْلِ رَبِّیْ ۫— لِیَبْلُوَنِیْۤ ءَاَشْكُرُ اَمْ اَكْفُرُ ؕ— وَمَنْ شَكَرَ فَاِنَّمَا یَشْكُرُ لِنَفْسِهٖ ۚ— وَمَنْ كَفَرَ فَاِنَّ رَبِّیْ غَنِیٌّ كَرِیْمٌ ۟

தன்னிடம் வேதத்தின் ஞானம் இருந்த ஒருவர் கூறினார்: “(நீர் தூரமாக ஒன்றை பார்த்த பின்னர், அந்த) உமது பார்வை உன் பக்கம் திரும்புவதற்கு முன்னர் நான் அதை உம்மிடம் கொண்டு வருவேன்.” அவர் (-ஸுலைமான்) அதை (-அந்த அரசகட்டிலை) தன்னிடம் (-தனக்கு முன்னால்) நிலையாகி விட்டதாக பார்த்த போது, இது (-இந்த ஆட்சி, அதிகாரம், படை பலம், அறிவு, எல்லாம்) என் இறைவனின் அருளாகும். நான் நன்றி செலுத்துகிறேனா? அல்லது நன்றி கெடுகிறேனா? என்று அவன் என்னை சோதிப்பதற்காக (தந்துள்ளான்). யார் நன்றி செலுத்துகிறாரோ அவர் நன்றி செலுத்துவதெல்லாம் அவருக்குத்தான் நன்மையாகும். யார் நிராகரிப்பாரோ ஏனெனில், என் இறைவன் முற்றிலும் தேவை அற்றவன் (-தன்னில் நிறைவானவன், எல்லோருக்கும் வாரி கொடுக்கும்) பெரும் தயாளன். info
التفاسير:

external-link copy
41 : 27

قَالَ نَكِّرُوْا لَهَا عَرْشَهَا نَنْظُرْ اَتَهْتَدِیْۤ اَمْ تَكُوْنُ مِنَ الَّذِیْنَ لَا یَهْتَدُوْنَ ۟

அவர் கூறினார்: நீங்கள் அவளுக்கு அவளுடைய அரச கட்டிலை மாற்றி விடுங்கள். நாம் பார்ப்போம், “அவள் அறிந்து கொள்கிறாளா? அல்லது அவள் அறியாதவர்களில் ஆகிவிடுகிறாளா?” என்று. info
التفاسير:

external-link copy
42 : 27

فَلَمَّا جَآءَتْ قِیْلَ اَهٰكَذَا عَرْشُكِ ؕ— قَالَتْ كَاَنَّهٗ هُوَ ۚ— وَاُوْتِیْنَا الْعِلْمَ مِنْ قَبْلِهَا وَكُنَّا مُسْلِمِیْنَ ۟

அவள் வந்தபோது, “இது போன்றா உனது அரச கட்டில்?” என்று கேட்கப்பட்டது. அவள் கூறினாள்: “இது அதைப் போன்றுதான்.” இவளுக்கு முன்னரே நாம் (அல்லாஹ்வைப் பற்றியும் அவனுடைய ஆற்றலைப் பற்றியும்) அறிவு கொடுக்கப்பட்டோம். இன்னும், முஸ்லிம்களாக இருக்கிறோம். info
التفاسير:

external-link copy
43 : 27

وَصَدَّهَا مَا كَانَتْ تَّعْبُدُ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ— اِنَّهَا كَانَتْ مِنْ قَوْمٍ كٰفِرِیْنَ ۟

அவள் அல்லாஹ்வை அன்றி (சூரியனை) வணங்கிக்கொண்டு இருந்தது (அவள் அல்லாஹ்வை வணங்குவதை விட்டும்) அவளைத் தடுத்து விட்டது. நிச்சயமாக, அவள் நிராகரிக்கின்ற மக்களில் இருந்தாள். info
التفاسير:

external-link copy
44 : 27

قِیْلَ لَهَا ادْخُلِی الصَّرْحَ ۚ— فَلَمَّا رَاَتْهُ حَسِبَتْهُ لُجَّةً وَّكَشَفَتْ عَنْ سَاقَیْهَا ؕ— قَالَ اِنَّهٗ صَرْحٌ مُّمَرَّدٌ مِّنْ قَوَارِیْرَ ؕ۬— قَالَتْ رَبِّ اِنِّیْ ظَلَمْتُ نَفْسِیْ وَاَسْلَمْتُ مَعَ سُلَیْمٰنَ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟۠

அவளுக்கு கூறப்பட்டது: “நீ மாளிகையில் நுழை!” அவள் அதைப் பார்த்த போது அதை அலை அடிக்கும் நீராகக் கருதி, தன் இரு கெண்டைக் கால்களை விட்டும் (தன் ஆடையை) அகற்றினாள். (அப்போது ஸுலைமான்) கூறினார்: நிச்சயமாக இது கண்ணாடிகளால் சமப்படுத்தப்பட்ட மாளிகை(யின் தரை)யாகும்.அவள், கூறினாள்: என் இறைவா! நிச்சயமாக நான் எனக்கே அநீதி செய்து கொண்டேன். இன்னும், அகிலங்களின் இறைவனான அல்லாஹ்விற்கு ஸுலைமானுடன் நானும் முஸ்லிமாகி விட்டேன். info
التفاسير: