Check out the new design

قرآن کریم کے معانی کا ترجمہ - المختصر فی تفسیر القرآن الکریم کا تمل ترجمہ * - ترجمے کی لسٹ


معانی کا ترجمہ سورت: مؤمنون   آیت:
فَاِذَا اسْتَوَیْتَ اَنْتَ وَمَنْ مَّعَكَ عَلَی الْفُلْكِ فَقُلِ الْحَمْدُ لِلّٰهِ الَّذِیْ نَجّٰىنَا مِنَ الْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟
23.28. நீரும் உம்முடன் உள்ள தப்பித்த நம்பிக்கையாளர்களும் கப்பலில் ஏறிவிட்டால் பின்வருமாறு கூறுவீராக: “நிராகரித்த இந்த சமூகத்திலிருந்து எங்களைக் காப்பாற்றி அவர்களை அழித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.”
عربی تفاسیر:
وَقُلْ رَّبِّ اَنْزِلْنِیْ مُنْزَلًا مُّبٰرَكًا وَّاَنْتَ خَیْرُ الْمُنْزِلِیْنَ ۟
23.29. “என் இறைவா! அருள் வளம் மிக்க இடத்தில் என்னை இறக்குவாயாக. நீயே மிகச்சிறந்த இடத்தை வழங்கக்கூடியவன்” என்றும் கூறுவீராக.
عربی تفاسیر:
اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ وَّاِنْ كُنَّا لَمُبْتَلِیْنَ ۟
23.30. நிச்சயமாக நூஹையும் நம்பிக்கையாளர்களையும் காப்பாற்றியதிலும் நிராகரிப்பாளர்களை அழித்ததிலும் நமது தூதர்களுக்கு உதவி செய்து அவர்களை மறுத்தவர்களை அழிப்பதற்கான நம்முடைய வல்லமையை எடுத்துரைக்கக்கூடிய தெளிவான ஆதாரங்கள் மேலே கூறியவற்றில் இருக்கின்றன. நிராகரிப்பாளர்கள் யார் நம்பிக்கையாளர் யார்? மாறு செய்பவர் யார் வழிப்படுபவர் யார்? என்பது தெளிவாவதற்காக நாம் நூஹின் சமூகத்தின்பால் அவரை அனுப்பி அவர்களைச் சோதிக்கக்கூடியவர்களாக இருந்தோம்.
عربی تفاسیر:
ثُمَّ اَنْشَاْنَا مِنْ بَعْدِهِمْ قَرْنًا اٰخَرِیْنَ ۟ۚ
23.31. நாம் நூஹின் சமூகத்தை அழித்த பிறகு வேறொரு தலைமுறையை உருவாக்கினோம்.
عربی تفاسیر:
فَاَرْسَلْنَا فِیْهِمْ رَسُوْلًا مِّنْهُمْ اَنِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ— اَفَلَا تَتَّقُوْنَ ۟۠
23.32. அவர்களை அல்லாஹ்வின் பக்கம் அழைக்க நாம் அவர்களிலிருந்தே ஒரு தூதரை அவர்களிடம் அனுப்பினோம். அவர் அவர்களிடம் கூறினார்: “நீங்கள் அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள். உங்களுக்கு உண்மையாக வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. நீங்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்ச மாட்டீர்களா?
عربی تفاسیر:
وَقَالَ الْمَلَاُ مِنْ قَوْمِهِ الَّذِیْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِلِقَآءِ الْاٰخِرَةِ وَاَتْرَفْنٰهُمْ فِی الْحَیٰوةِ الدُّنْیَا ۙ— مَا هٰذَاۤ اِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ ۙ— یَاْكُلُ مِمَّا تَاْكُلُوْنَ مِنْهُ وَیَشْرَبُ مِمَّا تَشْرَبُوْنَ ۟ۙ
23.33. அவருடைய சமூகத்தில் அல்லாஹ்வை நிராகரித்த மறுமை நாளையும் அங்குள்ள நற்கூலியையும் தண்டனையையும் பொய்ப்பித்த, நாம் அவர்களுக்கு உலக வாழ்வில் வழங்கிய தாராளமான அருட்கொடைகளினால் வரம்பு மீறிய தலைவர்கள் தங்களைப் பின்பற்றிய பொதுமக்களிடம் கூறினார்கள்: “இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர்தான். நீங்கள் உண்ணுவதையே உண்ணுகிறார். நீங்கள் பருகுவதையே பருகுகிறார். உங்களின்பால் தூதராக அனுப்பப்படுவதற்கு உங்களை விட எந்த வகையிலும் அவர் சிறந்தவர் இல்லை.
عربی تفاسیر:
وَلَىِٕنْ اَطَعْتُمْ بَشَرًا مِّثْلَكُمْ ۙ— اِنَّكُمْ اِذًا لَّخٰسِرُوْنَ ۟ۙ
23.34. நீங்கள் உங்களைப் போன்ற ஒரு மனிதருக்குக் கட்டுப்பட்டால் நிச்சயமாக நீங்கள் நஷ்டவாளிகளே. ஏனெனில் உங்கள் தெய்வங்களை விட்டுவிட்டு, அவருக்கு வழிபடுவதனாலும் உங்களைவிட எந்த சிறப்பையும் பெறாத ஒருவரைப் பின்பற்றுவதனாலும் நீங்கள் பயனடையமுடியாது.
عربی تفاسیر:
اَیَعِدُكُمْ اَنَّكُمْ اِذَا مِتُّمْ وَكُنْتُمْ تُرَابًا وَّعِظَامًا اَنَّكُمْ مُّخْرَجُوْنَ ۟
23.35. தன்னைத் தூதர் என்று கூறிக்கொள்ளும் இவர், நிச்சயமாக நீங்கள் இறந்து மண்ணாகவும் எலும்புகளாகவும் மக்கிப்போன பின்னரும் உங்களின் அடக்கஸ்த்தலங்களிலிருந்து உயிரோடு வெளியாக்கப்பட்டே ஆவீர்கள் என்று உங்களை எச்சரிக்கிறாரா? இது சாத்தியம்தானா?
عربی تفاسیر:
هَیْهَاتَ هَیْهَاتَ لِمَا تُوْعَدُوْنَ ۟
23.36. உங்களுக்கு எச்சரிக்கப்படும், மரணித்து, மண்ணாகவும் எலும்புகளாவும் மக்கி மாறிய பின்னர் உங்களின் அடக்கஸ்த்தலங்களிலிருந்து மீண்டும் உயிர்கொடுத்து வெளிப்படுத்தப்படுவது சாத்தியமற்ற ஒன்றாகும்.
عربی تفاسیر:
اِنْ هِیَ اِلَّا حَیَاتُنَا الدُّنْیَا نَمُوْتُ وَنَحْیَا وَمَا نَحْنُ بِمَبْعُوْثِیْنَ ۟
23.37. இவ்வுலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை இல்லை. மறுமை வாழ்க்கையும் இல்லை. நம்மில் உயிரோடு உள்ளவர்கள் மரணிப்பார்கள் மீண்டும் உயிர்பெற மாட்டார்கள். வேறு சிலர் பிறந்து வாழ்வார்கள். நாம் மரணித்த பிறகு மறுமை நாளில் விசாரணைக்காக வெளியேற்றப்படமாட்டோம்.
عربی تفاسیر:
اِنْ هُوَ اِلَّا رَجُلُ ١فْتَرٰی عَلَی اللّٰهِ كَذِبًا وَّمَا نَحْنُ لَهٗ بِمُؤْمِنِیْنَ ۟
23.38. ‘நிச்சயமாக நான் உங்களின் பால் அனுப்பப்பட்ட தூதர்’ என்று கூறும் இவர் இக்கூற்றின் மூலம் அல்லாஹ்வின் மீது புனைந்து பொய் கூறும் ஒருவரே. நாங்கள் அவரை நம்புவோர்களல்ல.
عربی تفاسیر:
قَالَ رَبِّ انْصُرْنِیْ بِمَا كَذَّبُوْنِ ۟
23.39. அந்த தூதர் கூறினார்: “என் இறைவா! அவர்கள் என்னை பொய்ப்பித்ததனால் அவர்களிடமிருந்து எனக்காகப் பழிதீர்த்து அவர்களுக்கு எதிராக எனக்கு உதவி புரிவாயாக.”
عربی تفاسیر:
قَالَ عَمَّا قَلِیْلٍ لَّیُصْبِحُنَّ نٰدِمِیْنَ ۟ۚ
23.40. அல்லாஹ் அவருக்குப் பின்வருமாறு கூறி பதிலளித்தான்: “நீர் கொண்டுவந்ததை மறுக்கும் இவர்கள் விரைவில் தமது நிராகரிப்பை எண்ணி வருத்தப்படத்தான் போகிறார்கள்.”
عربی تفاسیر:
فَاَخَذَتْهُمُ الصَّیْحَةُ بِالْحَقِّ فَجَعَلْنٰهُمْ غُثَآءً ۚ— فَبُعْدًا لِّلْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟
23.41. தமது பிடிவாதத்தினால் அவர்கள் தண்டனைக்கு உரியவர்களாகிவிட்டதால் பெரும் சப்தம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. அது வெள்ளத்தின் நுரைகளைப் போல அவர்களை அழிக்கப்பட்டவர்களாக ஆக்கிவிட்டது. அநியாயக்கார மக்களுக்கு அழிவு உண்டாகட்டும்.
عربی تفاسیر:
ثُمَّ اَنْشَاْنَا مِنْ بَعْدِهِمْ قُرُوْنًا اٰخَرِیْنَ ۟ؕ
23.42. அவர்களை அழித்த பிறகு லூத்தின் சமூகம், ஷுஐபின் சமூகம் மற்றும் யூனுஸின் சமூகத்தைப் போன்ற வேறு சமூகங்களை நாம் உருவாக்கினோம்.
عربی تفاسیر:
حالیہ صفحہ میں آیات کے فوائد:
• وجوب حمد الله على النعم.
1. அருட்கொடைகளுக்காக அல்லாஹ்வைப் புகழ்வது கட்டாயமாகும்.

• الترف في الدنيا من أسباب الغفلة أو الاستكبار عن الحق.
2. இவ்வுலகின் உல்லாச வாழ்வு சத்தியத்தை மறந்து அல்லது சத்தியத்தை ஏற்காமல் பெருமை கொள்வதற்குரிய காரணமாக அமைகிறது.

• عاقبة الكافر الندامة والخسران.
3. நிராகரிப்பாளனின் இறுதி முடிவு கைசேதப்படுவதும், நஷ்டமடைவதுமே.

• الظلم سبب في البعد عن رحمة الله.
4. அநீதி அல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமாவதற்கான காரணியாகும்.

 
معانی کا ترجمہ سورت: مؤمنون
سورتوں کی لسٹ صفحہ نمبر
 
قرآن کریم کے معانی کا ترجمہ - المختصر فی تفسیر القرآن الکریم کا تمل ترجمہ - ترجمے کی لسٹ

مرکز تفسیر للدراسات القرآنیۃ سے شائع ہوا ہے۔

بند کریں