Check out the new design

قرآن کریم کے معانی کا ترجمہ - المختصر فی تفسیر القرآن الکریم کا تمل ترجمہ * - ترجمے کی لسٹ


معانی کا ترجمہ سورت: صٓ   آیت:
وَقَالُوْا مَا لَنَا لَا نَرٰی رِجَالًا كُنَّا نَعُدُّهُمْ مِّنَ الْاَشْرَارِ ۟ؕ
38.62. அநியாயம் செய்து, கர்வம் கொண்டவர்கள் கூறுவார்கள்: “எங்களுக்கு என்னவாயிற்று! உலகில் நாங்கள் வேதனைக்குத் தகுதியான துர்பாக்கியசாலிகளாக எண்ணிக் கொண்டிருந்த ஆட்களை நரகில் எங்களுடன் காணவில்லையே!?
عربی تفاسیر:
اَتَّخَذْنٰهُمْ سِخْرِیًّا اَمْ زَاغَتْ عَنْهُمُ الْاَبْصَارُ ۟
38.63. அவர்கள் வேதனைக்குத் தகுதி பெறாமலிப்பதற்குக் காரணம், நாங்கள் அவர்களைப் பரிகாசம் செய்துகொண்டிருந்தது தவறு என்பதனாலா? அல்லது நாங்கள் அவர்களைப் பரிகாசம் செய்துகொண்டிருந்தது சரியானதாக இருந்து, அவர்கள் நரகத்தில் நுழைந்தும், எங்களின் பார்வைக்குத் தென்படவில்லையா?
عربی تفاسیر:
اِنَّ ذٰلِكَ لَحَقٌّ تَخَاصُمُ اَهْلِ النَّارِ ۟۠
38.64. நிச்சயமாக நாம் உங்களுக்குக் குறிப்பிட்ட மறுமை நாளில் நிராகரிப்பாளர்களிடையே ஏற்படக்கூடிய தர்க்கங்கள் சந்தேகமற்ற உண்மையாகும்.
عربی تفاسیر:
قُلْ اِنَّمَاۤ اَنَا مُنْذِرٌ ۖۗ— وَّمَا مِنْ اِلٰهٍ اِلَّا اللّٰهُ الْوَاحِدُ الْقَهَّارُ ۟ۚ
38.65. முஹம்மதே! உம் சமூகத்தைச் சேர்ந்த நிராகரிப்பாளர்களிடம் கூறுவீராக: “நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வை நிராகரித்து அவனுடைய தூதர்களை பொய்ப்பித்தால், அவனுடைய வேதனை உங்களைத் தாக்கிவிடும் என்று நான் உங்களை எச்சரிப்பவன்தான். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன் வேறுயாரும் இல்லை. அவன் தன் கண்ணியத்திலும் பண்புகளிலும் பெயர்களிலும் தனித்தவன். ஒவ்வொன்றையும் அடக்கியாள்பவன். ஒவ்வொன்றும் அவனுக்கே அடிபணிகின்றன.”
عربی تفاسیر:
رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا الْعَزِیْزُ الْغَفَّارُ ۟
38.66 வானங்கள், பூமி மற்றும் அவையிரண்டிற்கு இடையிலுள்ளவற்றிற்கும் அவனே இறைவன். அவன் ஆட்சியதிகாரத்தில் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை அவன் மன்னிக்கக்கூடியவன்.
عربی تفاسیر:
قُلْ هُوَ نَبَؤٌا عَظِیْمٌ ۟ۙ
38.67. -தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “நிச்சயமாக குர்ஆன் மகத்தான செய்தியாகும்.”
عربی تفاسیر:
اَنْتُمْ عَنْهُ مُعْرِضُوْنَ ۟
38.68. இந்த மகத்தான செய்தியை நீங்கள் அலட்சியமாகப் புறக்கணிக்கின்றீர்கள். அதன்பால் திரும்பியும் பார்ப்பதில்லை.
عربی تفاسیر:
مَا كَانَ لِیَ مِنْ عِلْمٍ بِالْمَلَاِ الْاَعْلٰۤی اِذْ یَخْتَصِمُوْنَ ۟
38.69. நிச்சயமாக அல்லாஹ் எனக்கு வஹி அறிவிக்கவில்லை என்றால் ஆதமின் படைப்பைப் பற்றி வானவர்களிடையே நடந்த உரையாடலைக் குறித்து எனக்கு எதுவும் தெரிந்திருக்காது.
عربی تفاسیر:
اِنْ یُّوْحٰۤی اِلَیَّ اِلَّاۤ اَنَّمَاۤ اَنَا نَذِیْرٌ مُّبِیْنٌ ۟
38.70. நிச்சயமாக நான் உங்களை அவனுடைய வேதனையிலிருந்து தெளிவாக எச்சரிக்கை செய்பவனாக இருக்கின்றேன் என்பதனால்தான் அவன் எனக்கு வஹி அறிவிக்கின்றான்.
عربی تفاسیر:
اِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰٓىِٕكَةِ اِنِّیْ خَالِقٌۢ بَشَرًا مِّنْ طِیْنٍ ۟
38.71. உம் இறைவன் வானவர்களிடம் பின்வருமாறு கூறியதை நினைவுகூர்வீராக: “நிச்சயமாக நான் மண்ணிலிருந்து ஆதம் என்னும் மனிதனைப் படைக்கப் போகின்றேன்.
عربی تفاسیر:
فَاِذَا سَوَّیْتُهٗ وَنَفَخْتُ فِیْهِ مِنْ رُّوْحِیْ فَقَعُوْا لَهٗ سٰجِدِیْنَ ۟
38.72. நான் அவரது படைப்பை முழுமைப்படுத்தி அவரது வடிவத்தை செம்மையாக்கி அவருள் என் ஆன்மாவை ஊதினால் நீங்கள் அவருக்குச் சிரம்பணிய வேண்டும்.”
عربی تفاسیر:
فَسَجَدَ الْمَلٰٓىِٕكَةُ كُلُّهُمْ اَجْمَعُوْنَ ۟ۙ
38.73. வானவர்கள் அனைவரும் தங்கள் இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து அவரை, கண்ணியப்படுத்துவதற்காக அவருக்கு சிரம்பணிந்தார்கள். ஆதமுக்கு சிரம்பணியாமல் அவர்களில் யாரும் எஞ்சியிருக்கவில்லை.
عربی تفاسیر:
اِلَّاۤ اِبْلِیْسَ ؕ— اِسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكٰفِرِیْنَ ۟
38.74. ஆனால் இப்லீஸ் சிரம்பணியாமல் கர்வம் கொண்டான். அவன் கர்வத்தினால் தன் இறைவனின் கட்டளையை நிராகரித்துவிட்டான்.
عربی تفاسیر:
قَالَ یٰۤاِبْلِیْسُ مَا مَنَعَكَ اَنْ تَسْجُدَ لِمَا خَلَقْتُ بِیَدَیَّ ؕ— اَسْتَكْبَرْتَ اَمْ كُنْتَ مِنَ الْعَالِیْنَ ۟
38.75. அல்லாஹ் கேட்டான்: “இப்லீஸே! என் கையால் படைத்த ஆதமுக்கு சிரம்பணிவதைவிட்டும் உன்னைத் தடுத்தது எது? கர்வம் சிரம்பணியாமல் உன்னைத் தடுத்ததா? அல்லது ஏற்கனவே உன் இறைவனை விட நீ பெருமையுடையவனாகவும் உயர்ந்தவனாகவும் இருந்தாயா?”
عربی تفاسیر:
قَالَ اَنَا خَیْرٌ مِّنْهُ ؕ— خَلَقْتَنِیْ مِنْ نَّارٍ وَّخَلَقْتَهٗ مِنْ طِیْنٍ ۟
38.76. இப்லீஸ் கூறினான்: “நான் ஆதமைவிடச் சிறந்தவன். நீ என்னை நெருப்பால் படைத்துள்ளாய். அவரையோ மண்ணால்தான் படைத்துள்ளாய்.” நெருப்பு மண்ணை விட சிறந்த மூலக்கூறு என்பது அவனது எண்ணமாகும்.
عربی تفاسیر:
قَالَ فَاخْرُجْ مِنْهَا فَاِنَّكَ رَجِیْمٌ ۟ۙۖ
38.77. அல்லாஹ் இப்லீஸுக்கு கூறினான்: “நீ சுவனத்திலிருந்து வெளியேறு. நிச்சயமாக நீ ஏசப்பட்டு சபிக்கப்பட்டவன்,
عربی تفاسیر:
وَّاِنَّ عَلَیْكَ لَعْنَتِیْۤ اِلٰی یَوْمِ الدِّیْنِ ۟
38.78. கூலி வழங்கப்படும் மறுமை நாள் வரை நிச்சயமாக நீர் சுவனத்திலிருந்து விரட்டப்பட்டுவிட்டாய்.
عربی تفاسیر:
قَالَ رَبِّ فَاَنْظِرْنِیْۤ اِلٰی یَوْمِ یُبْعَثُوْنَ ۟
38.79. இப்லீஸ் கேட்டான்: “எனக்கு அவகாசம் அளிப்பாயாக! நீ உன் அடியார்களை மீண்டும் எழுப்பும் நாள் வரை என்னை மரணிக்கச்செய்யாதே .”
عربی تفاسیر:
قَالَ فَاِنَّكَ مِنَ الْمُنْظَرِیْنَ ۟ۙ
38.80. அல்லாஹ் கூறினான்: “நிச்சயமாக நீ அவகாசம் சொடுக்கப்பட்டவர்களில் உள்ளவனே.
عربی تفاسیر:
اِلٰی یَوْمِ الْوَقْتِ الْمَعْلُوْمِ ۟
38.81. உன்னை அழிப்பதற்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நேரம் குறிக்கப்பட நாள் வரை.”
عربی تفاسیر:
قَالَ فَبِعِزَّتِكَ لَاُغْوِیَنَّهُمْ اَجْمَعِیْنَ ۟ۙ
38.82. இப்லீஸ் கூறினான்: “உன் வல்லமை மற்றும் ஆதிக்கத்தின் மீது ஆணையாக, நான் ஆதமுடைய மக்கள் அனைவரையும் வழிகெடுப்பேன்.
عربی تفاسیر:
اِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِیْنَ ۟
38.83. என்னுடைய வழிகேட்டிலிருந்து நீ யாரைப் பாதுகாத்தாயோ அவர்களையும் இன்னும் உன்னை மட்டும் வணங்குவதற்காக நீ தெரிவுசெய்தோரையும் தவிர.”
عربی تفاسیر:
حالیہ صفحہ میں آیات کے فوائد:
• القياس والاجتهاد مع وجود النص الواضح مسلك باطل.
1. தெளிவான ஆதாரம் இருக்கும் நிலையில் ஒப்புநோக்குவதும் ஆய்வு செய்வதும் தவறான வழிமுறையாகும்.

• كفر إبليس كفر عناد وتكبر.
2. இப்லீஸின் நிராகரிப்பு பிடிவாதத்தினாலும் கர்வத்தினாலும் ஏற்பட்ட நிராகரிப்பாகும்.

• من أخلصهم الله لعبادته من الخلق لا سبيل للشيطان عليهم.
3. மக்களில் தனது வணக்கத்திற்காக அல்லாஹ் யாரைத் தேர்ந்தெடுத்தானோ அவர்களின் மீது ஆதிக்கம் செலுத்த ஷைதானுக்கு எவ்வித வழியும் இல்லை.

 
معانی کا ترجمہ سورت: صٓ
سورتوں کی لسٹ صفحہ نمبر
 
قرآن کریم کے معانی کا ترجمہ - المختصر فی تفسیر القرآن الکریم کا تمل ترجمہ - ترجمے کی لسٹ

مرکز تفسیر للدراسات القرآنیۃ سے شائع ہوا ہے۔

بند کریں