Check out the new design

قرآن کریم کے معانی کا ترجمہ - المختصر فی تفسیر القرآن الکریم کا تمل ترجمہ * - ترجمے کی لسٹ


معانی کا ترجمہ سورت: شوریٰ   آیت:
وَالَّذِیْنَ یُحَآجُّوْنَ فِی اللّٰهِ مِنْ بَعْدِ مَا اسْتُجِیْبَ لَهٗ حُجَّتُهُمْ دَاحِضَةٌ عِنْدَ رَبِّهِمْ وَعَلَیْهِمْ غَضَبٌ وَّلَهُمْ عَذَابٌ شَدِیْدٌ ۟
42.16. மக்கள் முஹம்மதின் அழைப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் அவர் மீது இறக்கப்பட்ட மார்க்கத்தில் தவறான ஆதாரங்களைக் கொண்டு தர்க்கம் புரிபவர்களின் தர்க்கம் இறைவனிடத்திலும் நம்பிக்கையாளர்களிடத்திலும் வீணானதேயாகும். அதற்கு எந்த பிரதிபலிப்பும் இல்லை. அவர்கள் அல்லாஹ்வை நிராகரித்து சத்தியத்தை மறுத்ததனால் அவர்களின் மீது அவனது கோபம் உண்டாகும். மறுமை நாளில் அவர்களுக்குக் கடுமையான வேதனை காத்திருக்கின்றது.
عربی تفاسیر:
اَللّٰهُ الَّذِیْۤ اَنْزَلَ الْكِتٰبَ بِالْحَقِّ وَالْمِیْزَانَ ؕ— وَمَا یُدْرِیْكَ لَعَلَّ السَّاعَةَ قَرِیْبٌ ۟
42.17. நிராகரிப்பாளர்களின் வாதங்கள் தவறானவை என்பதைத் தெளிவுபடுத்திய இறைவன் முஸ்லிம் ஆதாரமாகக்கொளளும் ஆதாரங்களின் அடிப்படையான அல்குர்ஆனைப் பற்றித் தெளிவுபடுத்துகிறான். அவன் கூறுகிறான்: அல்லாஹ்தான் சந்தேகமற்ற உண்மையைக் கொண்டு குர்ஆனை இறக்கியுள்ளான். மக்களிடையே நியாயமாகத் தீர்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக நீதியை இறக்கியுள்ளான். இந்த நிராகரிப்பாளர்கள் பொய் எனக் கூறும் மறுமை நாள் சமீபத்தில் நிகழ்ந்துவிடலாம். உண்மையில் வரக்கூடிய ஒவ்வொன்றும் நெருங்கிவிட்டவையே.
عربی تفاسیر:
یَسْتَعْجِلُ بِهَا الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِهَا ۚ— وَالَّذِیْنَ اٰمَنُوْا مُشْفِقُوْنَ مِنْهَا ۙ— وَیَعْلَمُوْنَ اَنَّهَا الْحَقُّ ؕ— اَلَاۤ اِنَّ الَّذِیْنَ یُمَارُوْنَ فِی السَّاعَةِ لَفِیْ ضَلٰلٍۢ بَعِیْدٍ ۟
42.18. அதன்மீது நம்பிக்கைகொள்ளாதவர்கள் அதனை விரைவாக வேண்டுகிறார்கள். ஏனெனில் நிச்சயமாக அவர்கள் கேள்வி கணக்கையோ, நற்கூலி தண்டனை வழங்கப்படுவதையோ நம்புவதில்லை. அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டவர்கள் தங்களின் முடிவின் மீதுள்ள அச்சத்தினால் அதனைக்குறித்து அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். திட்டமாக அது சந்தேகமற்ற உண்மை என்பதை அவர்கள் உறுதியாக அறிவார்கள். அறிந்துகொள்ளுங்கள், நிச்சயமாக மறுமை நாளைக்குறித்து தர்க்கம் செய்பவர்கள், அது நிகழும் என்பதில் சந்தேகம் கொள்பவர்கள் சத்தியத்தைவிட்டும் தூரமான வழிகேட்டில் இருக்கின்றார்கள்.
عربی تفاسیر:
اَللّٰهُ لَطِیْفٌ بِعِبَادِهٖ یَرْزُقُ مَنْ یَّشَآءُ ۚ— وَهُوَ الْقَوِیُّ الْعَزِیْزُ ۟۠
42.19. அல்லாஹ் தன் அடியார்களுடன் பெரும் கிருபையாளனாக இருக்கின்றான். அவன் தான் நாடியவர்களுக்கு தாராளமாக வாழ்வாதாரம் வழங்குகிறான். தான் நாடியவர்களுக்கு தனது ஞானம் மற்றும் நுணுக்கத்தின் பிரகாரம் நெருக்கடியை ஏற்படுத்துகிறான். அவனை யாராலும் மிகைக்க முடியாத பலமுள்ளவன். தன் எதிரிகளைத் தண்டிக்க வல்லமையுள்ளவன்.
عربی تفاسیر:
مَنْ كَانَ یُرِیْدُ حَرْثَ الْاٰخِرَةِ نَزِدْ لَهٗ فِیْ حَرْثِهٖ ۚ— وَمَنْ كَانَ یُرِیْدُ حَرْثَ الدُّنْیَا نُؤْتِهٖ مِنْهَا ۙ— وَمَا لَهٗ فِی الْاٰخِرَةِ مِنْ نَّصِیْبٍ ۟
42.20. யார் மறுமைக்காகச் செயல்பட்டு அதன் நன்மையை விரும்புவாரோ நாம் அவருக்கு பலமடங்கு நன்மையை அளிப்போம். ஒரு நன்மை பத்திலிருந்து எழுநூறு நன்மைகளாக, பன்மடங்காகப் பெருகுகிறது. யார் உலகத்தை மட்டும் விரும்புவாரோ நாம் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட பங்கினை அளித்துவிடுவோம். மறுமையைவிட உலகைத் தேர்ந்தெடுத்ததனால் மறுமையில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை.
عربی تفاسیر:
اَمْ لَهُمْ شُرَكٰٓؤُا شَرَعُوْا لَهُمْ مِّنَ الدِّیْنِ مَا لَمْ یَاْذَنْ بِهِ اللّٰهُ ؕ— وَلَوْلَا كَلِمَةُ الْفَصْلِ لَقُضِیَ بَیْنَهُمْ ؕ— وَاِنَّ الظّٰلِمِیْنَ لَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
42.21. அல்லது இந்த இணைவைப்பாளர்களுக்கு அல்லாஹ்வைத் தவிர இருக்கும் தெய்வங்கள் அவன் அனுமதியளிக்காத இணைவைப்பு, ஹலாலை ஹராமாக்கி, ஹராத்தை ஹலால் ஆக்கிவிட்டனவா? அல்லாஹ் முரண்பட்டவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்கு குறிப்பிட்ட தவணையை நிர்ணயித்து அதுவரைக்கும் அவர்களுக்கு அவகாசம் வழங்காவிட்டால் அவர்களிடையே தீர்ப்பு செய்திருப்பான். நிச்சயமாக அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கியும் பாவங்கள் புரிந்தும் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டவர்களுக்கு மறுமை நாளில் வேதனைமிக்க தண்டனை காத்திருக்கின்றது.
عربی تفاسیر:
تَرَی الظّٰلِمِیْنَ مُشْفِقِیْنَ مِمَّا كَسَبُوْا وَهُوَ وَاقِعٌ بِهِمْ ؕ— وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فِیْ رَوْضٰتِ الْجَنّٰتِ ۚ— لَهُمْ مَّا یَشَآءُوْنَ عِنْدَ رَبِّهِمْ ؕ— ذٰلِكَ هُوَ الْفَضْلُ الْكَبِیْرُ ۟
42.22. -தூதரே!- இணைவைத்தும் பாவங்கள் புரிந்தும் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டவர்கள் தாங்கள் சம்பாதித்த பாவங்களினால் தங்களின் மீது வேதனை சந்தேகம் இல்லாமல் இறங்கிவிடுமோ என்று பயந்து கொண்டிருப்பார்கள். பாவமன்னிப்புக் கோராமல் வெறும் பயத்தினால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அதற்கு மாறாக அவர்களில் அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர்களின் மீதும் நம்பிக்கைகொண்டு நற்செயல்களில் ஈடுபட்டவர்கள் சுவனப் பூங்காக்களில் இன்பம் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் தங்கள் இறைவனிடம் தாங்கள் விரும்புகின்ற என்றும் முடிவடையாத நிலையான இன்பங்களையெல்லாம் பெறுவார்கள். இது மாபெரும் அருளாகும். இதற்கு இணையான வேறு அருள் இல்லை.
عربی تفاسیر:
حالیہ صفحہ میں آیات کے فوائد:
• خوف المؤمن من أهوال يوم القيامة يعين على الاستعداد لها.
1. மறுமை நாளின் பயங்கரங்களுக்கு நம்பிக்கையாளன் அஞ்சுவது அவனை அதற்காக தயார்படுத்திக் கொள்ள உதவுகின்றது.

• لطف الله بعباده حيث يوسع الرزق على من يكون خيرًا له، ويضيّق على من يكون التضييق خيرًا له.
2. அடியார்களுடனான அல்லாஹ்வின் அன்பு. எனவேதான் வாழ்வாதாரம் தாராளமாகக் கிடைப்பது யாருக்கு நலவோ அவருக்கு விசாலப்படுத்தியும் நெருக்கடி யாருக்கு நலவோ அவருக்கு நெருக்கடியையும் வழங்குகின்றான்.

• خطر إيثار الدنيا على الآخرة.
3. மறுமையை விட இவ்வுலகத்திற்கு முன்னுரிமை அளிப்பதால் ஏற்படும் விபரீதம்.

 
معانی کا ترجمہ سورت: شوریٰ
سورتوں کی لسٹ صفحہ نمبر
 
قرآن کریم کے معانی کا ترجمہ - المختصر فی تفسیر القرآن الکریم کا تمل ترجمہ - ترجمے کی لسٹ

مرکز تفسیر للدراسات القرآنیۃ سے شائع ہوا ہے۔

بند کریں