Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም ምዕራፍ: ዩኑስ   አንቀጽ:
قُلْ هَلْ مِنْ شُرَكَآىِٕكُمْ مَّنْ یَّبْدَؤُا الْخَلْقَ ثُمَّ یُعِیْدُهٗ ؕ— قُلِ اللّٰهُ یَبْدَؤُا الْخَلْقَ ثُمَّ یُعِیْدُهٗ فَاَنّٰی تُؤْفَكُوْنَ ۟
10.34. -தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம் கேட்பீராக: “அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கும் உங்களின் இணைத் தெய்வங்களில் யாராவது முன்மாதிரியின்றி படைப்பைப் படைத்து பின்னர் அவை இறந்த பிறகு மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவார்களா?” நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே முன்மாதிரியின்றி ஆரம்பத்தில் படைத்தான். பின்னர் அவனே அவை இறந்த பிறகு மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவான். -இணைவைப்பாளர்களே!- சத்தியத்தை விட்டு விட்டு அசத்தியத்தின் பக்கம் எவ்வாறு நீங்கள் திருப்பப்படுகிறீர்கள்?”
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
قُلْ هَلْ مِنْ شُرَكَآىِٕكُمْ مَّنْ یَّهْدِیْۤ اِلَی الْحَقِّ ؕ— قُلِ اللّٰهُ یَهْدِیْ لِلْحَقِّ ؕ— اَفَمَنْ یَّهْدِیْۤ اِلَی الْحَقِّ اَحَقُّ اَنْ یُّتَّبَعَ اَمَّنْ لَّا یَهِدِّیْۤ اِلَّاۤ اَنْ یُّهْدٰی ۚ— فَمَا لَكُمْ ۫— كَیْفَ تَحْكُمُوْنَ ۟
10.35. -தூதரே!- அவர்களிடம் நீர் கேட்பீராக: “அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கும் உங்கள் இணைத்தெய்வங்களில் யாராவது உங்களுக்கு சத்தியத்தின்பால் வழிகாட்டுவார்களா? நீர் அவர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ்வே சத்தியத்தின்பால் வழிகாட்டுகிறான். மனிதர்களுக்கு சத்தியத்தின்பால் வழிகாட்டுபவன், அதன்பால் அவர்களை அழைப்பவன் பின்பற்றத்தகுதியானவனா? அல்லது மற்றவர்கள் வழிகாட்டா விட்டால் நேர்வழியடைய இயலாத உங்கள் தெய்வங்களா? உங்களுக்கு என்னவாயிற்று? அவை அல்லாஹ்வுக்கு இணையானவை என்பதாக எவ்வாறு தவறாக தீர்ப்பளிக்கிறீர்கள்? உங்களது கூற்றை விட்டும் அல்லாஹ் மிகவும் உயர்ந்து விட்டான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَمَا یَتَّبِعُ اَكْثَرُهُمْ اِلَّا ظَنًّا ؕ— اِنَّ الظَّنَّ لَا یُغْنِیْ مِنَ الْحَقِّ شَیْـًٔا ؕ— اِنَّ اللّٰهَ عَلِیْمٌۢ بِمَا یَفْعَلُوْنَ ۟
10.36. இணைவைப்பாளர்களில் பெரும்பாலோர் தங்களுக்கு எது குறித்து அறிவில்லையோ அதனையே பின்பற்றுகிறார்கள். அவர்கள் யூகங்களையும் சந்தேகங்களையுமே பின்பற்றுகிறார்கள். ஐயம் அறிவுக்கு சமனாகாது, அறிவுக்கு முன்னால் யூகம் எப்பயனையும் அளிக்காது. அவர்கள் செய்யக் கூடியதை அல்லாஹ் நன்கறிந்தவன். அவர்கள் செய்யும் எதுவும் அல்லாஹ்வை விட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَمَا كَانَ هٰذَا الْقُرْاٰنُ اَنْ یُّفْتَرٰی مِنْ دُوْنِ اللّٰهِ وَلٰكِنْ تَصْدِیْقَ الَّذِیْ بَیْنَ یَدَیْهِ وَتَفْصِیْلَ الْكِتٰبِ لَا رَیْبَ فِیْهِ مِنْ رَّبِّ الْعٰلَمِیْنَ ۟۫
10.37. இந்த அற்புதமான குர்ஆன் புனைந்துரைக்கப்படவோ அல்லாஹ்வைத் தவிர உள்ள யாருக்கும் சேர்க்கப்படவோ முடியாது. ஏனெனில் அது போன்ற ஒன்றை மனிதர்களால் கொண்டுவரவே முடியாது. ஆயினும் இது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மைப்படுத்தக் கூடியதாகவும் அவற்றில் சுருக்கமாக கூறப்பட்ட சட்டதிட்டங்களை சிறந்த முறையில் தெளிவுபடுத்தக் கூடியதாகவும் இருக்கின்றது. எனவே அது படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனிடமிருந்து இறங்கியது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
اَمْ یَقُوْلُوْنَ افْتَرٰىهُ ؕ— قُلْ فَاْتُوْا بِسُوْرَةٍ مِّثْلِهٖ وَادْعُوْا مَنِ اسْتَطَعْتُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
10.38. நிச்சயமாக “முஹம்மது இந்த குர்ஆனை சுயமாகப் புனைந்து கொண்டு அல்லாஹ்வின் வார்த்தை என்று பொய் கூறுகிறார்” என்று இந்த இணைவைப்பாளர்கள் கூறுகிறார்களா? -தூதரே!- நீர் அவர்களுக்கு மறுப்பாக கூறுவீராக: “நான் இதனை சுயமாகப் புனைந்து கொண்டுவந்திருந்தால் நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான்; எனவே இதுபோன்ற ஒரு அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள். குர்ஆன் புனைந்து கூறப்பட்டது என்று நீங்கள் கூறும் வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்களால் அழைக்க முடிந்தவர்களை உதவிக்கு அழைத்துக் கொண்டு அதனைச் செய்யுங்கள். உங்களால் ஒருபோதும் இவ்வாறு செய்ய முடியாது. நீங்கள் மொழிச் சொந்தக்காரர்களாகவும் இலக்கிய ஜாம்பவான்களாகவும் இருந்தும் உங்களால் அவ்வாறு கொண்டுவர முடியாமை குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டது என்பதற்கான சான்றாகும்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
بَلْ كَذَّبُوْا بِمَا لَمْ یُحِیْطُوْا بِعِلْمِهٖ وَلَمَّا یَاْتِهِمْ تَاْوِیْلُهٗ ؕ— كَذٰلِكَ كَذَّبَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الظّٰلِمِیْنَ ۟
10.39. அவர்கள் பதிலளிக்கவில்லை. மாறாக இந்த குர்ஆனை புரிந்து, சிந்திப்பதற்கு முன்னர் அவர்களுக்கு எச்சரிக்கப்பட்ட வேதனை நிகழ்வதற்கு முன்னர் விரைந்து அவர்கள் அதனை மறுத்து விட்டார்கள். அது வருவதற்கான நேரம் நெருங்கிவிட்டது. இதுபோன்றே முந்தைய சமூகத்தினரும் நிராகரித்தார்கள். வேதனை அவர்கள் மீது இறங்கியது. -தூதரே!- பொய்ப்பித்த சமூகங்களின் இறுதி முடிவு என்னவாயிற்று என்பதை சிந்தித்துப் பார்ப்பீராக. அல்லாஹ் அவர்களை அழித்துவிட்டான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَمِنْهُمْ مَّنْ یُّؤْمِنُ بِهٖ وَمِنْهُمْ مَّنْ لَّا یُؤْمِنُ بِهٖ ؕ— وَرَبُّكَ اَعْلَمُ بِالْمُفْسِدِیْنَ ۟۠
10.40. இணைவைப்பாளர்களில் சிலர் மரணிப்பதற்கு முன்னர் இந்த குர்ஆனின் மீது நம்பிக்கை கொண்டு விடுவார்கள். சிலர் பிடிவாதத்தினாலும் கர்வத்தினாலும் இந்த குர்ஆனின் மீது நம்பிக்கைகொள்ளாமலேயே மரணித்துவிடுவார்கள். -தூதரே!- நிராகரிப்பில் நிலைத்திருப்பவர்களை உம் இறைவன் நன்கறிவான். அவர்களின் நிராகரிப்பினால் அவர்களுக்குத் தண்டனையளிப்பான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَاِنْ كَذَّبُوْكَ فَقُلْ لِّیْ عَمَلِیْ وَلَكُمْ عَمَلُكُمْ ۚ— اَنْتُمْ بَرِیْٓـُٔوْنَ مِمَّاۤ اَعْمَلُ وَاَنَا بَرِیْٓءٌ مِّمَّا تَعْمَلُوْنَ ۟
10.41. -தூதரே!- உம் சமூகத்தினர் உம்மை பொய்யர் என்று கூறினால் அவர்களிடம் நீர் கூறுவீராக: “என் செயலுக்கான கூலியை நான் பெறுவேன். என் செயலுக்கான பொறுப்பை நான் சுமப்பேன். உங்களின் செயலுக்கான கூலியையும் தண்டனையையும் நீங்கள்தாம் பெறுவீர்கள். நான் செய்யும் செயல்களுக்கு நீங்கள் தண்டிக்கப்பட மாட்டீர்கள். நீங்கள் செய்யும் செயல்களுக்கு நான் தண்டிக்கப்படவும் மாட்டேன்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَمِنْهُمْ مَّنْ یَّسْتَمِعُوْنَ اِلَیْكَ ؕ— اَفَاَنْتَ تُسْمِعُ الصُّمَّ وَلَوْ كَانُوْا لَا یَعْقِلُوْنَ ۟
10.42. -தூதரே!- நீர் குர்ஆனை ஓதும் போது இணைவைப்பாளர்களில் சிலர் அதனை ஏற்றுக்கொள்ளும், கீழ்ப்படியும் எண்ணமின்றி உம் பக்கம் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். உம்மால் செவிடர்களுக்குச் செவியுறச் செய்ய முடியுமா? அதுபோன்று சத்தியத்தை செவியேற்பதை விட்டும் செவிடர்களாக இருப்பர்களுக்கு உம்மால் நேர்வழிகாட்ட முடியாது. ஏனெனில் அவர்கள் அதனை விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• الهادي إلى الحق هداية التوفيق هو الله وحده دون ما سواه.
1. சத்தியத்தைப் பின்பற்றும் பாக்கியம் அளிப்பவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே. அவனைத் தவிர வேறு யாரும் இல்லை

• الحث على تطلب الأدلة والبراهين والهدايات للوصول للعلم والحق وترك الوهم والظن.
2. (உறுதி மிக்க) அறிவு, சத்தியம் ஆகிவற்றை அடைவதற்கு ஆதாரங்களையும் அத்தாட்சிகளையும் தேடுமாறும் யூகத்தையும் சந்தேகத்தையும் தவிர்க்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

• ليس في مقدور أحد أن يأتي ولو بآية مثل القرآن الكريم إلى يوم القيامة.
3. மறுமை வரைக்கும் குர்ஆனைப் போன்ற ஒரு வசனத்தையேனும் யாராலும் கொண்டுவர முடியாது.

• سفه المشركين وتكذيبهم بما لم يفهموه ويتدبروه.
4. இணைவைப்பாளர்களின் அறியாமையும் புரியாததையும் சிந்திக்காததையும் மறுத்து விடும் தன்மையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
የይዘት ትርጉም ምዕራፍ: ዩኑስ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት