Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም አንቀጽ: (107) ምዕራፍ: ዩኑስ
وَاِنْ یَّمْسَسْكَ اللّٰهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهٗۤ اِلَّا هُوَ ۚ— وَاِنْ یُّرِدْكَ بِخَیْرٍ فَلَا رَآدَّ لِفَضْلِهٖ ؕ— یُصِیْبُ بِهٖ مَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖ ؕ— وَهُوَ الْغَفُوْرُ الرَّحِیْمُ ۟
10.107. -தூதரே!- அல்லாஹ் உமக்கு எதேனும் துன்பத்தை அளித்து அது நீங்க வேண்டுமென நீர் வேண்டினால் அவனைத் தவிர யாராலும் அதனை நீக்க முடியாது. அவன் உமக்கு வளமான வாழ்க்கையை நாடினால் அவனது அருளை ஒருவராலும் தடுக்க முடியாது. அவன் தன் அடியார்களில் தான் நாடுவோருக்கு தன் அருளை வழங்குகிறான். அவனை யாரும் நிர்ப்பந்திக்க முடியாது. தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அவன் மன்னிக்கக் கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• إن الخير والشر والنفع والضر بيد الله دون ما سواه.
1. நலவும், கெடுதியும், பலனளிப்பதும் தீங்கிழைப்பதும் அல்லாஹ்வின் கையில்தான் உள்ளது. வேறுயாராலும் முடியாது.

• وجوب اتباع الكتاب والسُّنَّة والصبر على الأذى وانتظار الفرج من الله.
2. குர்ஆனையும் சுன்னாவையும் பின்பற்றுவதும் அதில் ஏற்படும் சிரமங்களைத் தாங்கிக் கொள்வதும் அல்லாஹ்விடம் விடுதலையை எதிர்பார்ப்பதும் கட்டாயமாகும்.

• آيات القرآن محكمة لا يوجد فيها خلل ولا باطل، وقد فُصِّلت الأحكام فيها تفصيلًا تامَّا.
3. குர்ஆனின் வசனங்கள் தீர்க்கமானவை. அதில் குறைகளோ அசத்தியமோ காணப்படாது. அதில் சட்டங்கள் மிகவும் விபரமாகத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

• وجوب المسارعة إلى التوبة والندم على الذنوب لنيل المطلوب والنجاة من المرهوب.
4.எதிர்பார்ப்பதை அடைந்து அஞ்சுவதை விட்டும் தப்புவதற்காக தவ்பாவின் பக்கமும் பாவங்களை விட்டு வருந்துவதன் பக்கமும் விரைவது அவசியமாகும்.

 
የይዘት ትርጉም አንቀጽ: (107) ምዕራፍ: ዩኑስ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት