Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም አንቀጽ: (19) ምዕራፍ: ዩኑስ
وَمَا كَانَ النَّاسُ اِلَّاۤ اُمَّةً وَّاحِدَةً فَاخْتَلَفُوْا ؕ— وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ لَقُضِیَ بَیْنَهُمْ فِیْمَا فِیْهِ یَخْتَلِفُوْنَ ۟
10.19. மனிதர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்ட ஒரே சமூகமாக இருந்தார்கள். பின்னர் கருத்து வேறுபாடு கொண்டார்கள். அவர்களில் சிலர் நம்பிக்கையில் நிலைத்திருந்தார்கள். சிலர் நிராகரித்துவிட்டார்கள். அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டவற்றில் இவ்வுலகில் அவர்களிடையே தீர்ப்பளிக்க மாட்டான், மறுமை நாளில்தான் தீர்ப்பளிப்பான் என்ற அல்லாஹ்வின் விதி முந்தியிராவிட்டால் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டவற்றில் இவ்வுலகிலேயே தீர்ப்பளித்திருப்பான், நேர்வழி பெற்றவர் யார் வழிகெட்டவர் யார் என்பது தெளிவாகியிருக்கும்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• عظم الافتراء على الله والكذب عليه وتحريف كلامه كما فعل اليهود بالتوراة.
1. யூதர்கள் தவ்ராத்தை திரித்தது போல அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக்கட்டி பொய்யுரைத்து அவனது வார்த்தையைத் திரிவுபடுத்துவது மாபெரும் தவறாகும்.

• النفع والضر بيد الله عز وجل وحده دون ما سواه.
2. பலனளிப்பதும் தீங்கிழைப்பதும் அல்லாஹ்வின் கைவசம் மாத்திரமே உள்ளது. அவனைத் தவிர வேறு யாாிடமும் இல்லை.

• بطلان قول المشركين بأن آلهتهم تشفع لهم عند الله.
3. தங்களின் சிலைகள் அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்யும் என்ற இணைவைப்பாளர்களின் வாதம் தவறானதாகும்.

• اتباع الهوى والاختلاف على الدين هو سبب الفرقة.
4. மனஇச்சையைப் பின்பற்றுவதும் மார்க்கத்தில் கருத்து வேறுபாடு கொள்வதும் பிரிவினைக்கான காரணங்களாகும்.

 
የይዘት ትርጉም አንቀጽ: (19) ምዕራፍ: ዩኑስ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት