የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ

external-link copy
65 : 11

فَعَقَرُوْهَا فَقَالَ تَمَتَّعُوْا فِیْ دَارِكُمْ ثَلٰثَةَ اَیَّامٍ ؕ— ذٰلِكَ وَعْدٌ غَیْرُ مَكْذُوْبٍ ۟

11.65. நிராகரிப்பில் மிகைத்துச் சென்று அந்த ஒட்டகத்தைக் கொன்றார்கள். ஸாலிஹ் அவர்களிடம் கூறினார்: “நீங்கள் ஒட்டகத்தைக் கொன்றதிலிருந்து மூன்று நாட்களுக்கு உங்களது இடத்தில் வாழ்க்கையை அனுபவித்துக் கொள்ளுங்கள். பின்னர் அல்லாஹ்வின் வேதனை நிச்சயமாக உங்களைத் தாக்கியே தீரும். அதற்குப் பின் வேதனை வருவது நிகழ்ந்தேறும் வாக்குறுதி அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அது பொய்யுமல்ல. மாறாக அது உண்மையான எச்சரிக்கையாகும்.” info
التفاسير: |
በዚህ ገፅ ያሉት አንቀፆች ከሚያስተላልፉት ጠቃሚ መልዕክት መካከል:
• عناد واستكبار المشركين حيث لم يؤمنوا بآية صالح عليه السلام وهي من أعظم الآيات.
1.ஸாலிஹ் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட சான்று மிகப் பெரிய சான்றாகும். ஆயினும் பிடிவாதத்திலே நிலைத்து, பெருமையடித்து இருந்த இணைவைப்பாளர்கள் அந்த சான்றுகளை நம்பிக்கை கொள்ளவில்லை. info

• استحباب تبشير المؤمن بما هو خير له.
2. நம்பிக்கையாளனுக்கு நலவான ஒன்றை கொண்டு நற்செய்தி கூறுவது விரும்பத்தக்கது. info

• مشروعية السلام لمن دخل على غيره، ووجوب الرد.
3. மற்றவர்களிடம் நுழையும் போது சலாம் கூற வேண்டும். அதற்குப் பதிலளிப்பது கட்டாயமாகும். info

• وجوب إكرام الضيف.
4. விருந்தாளியை உபசரிப்பது கடமையாகும். info