Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም ምዕራፍ: አን-ነሕል   አንቀጽ:
اَلَّذِیْنَ كَفَرُوْا وَصَدُّوْا عَنْ سَبِیْلِ اللّٰهِ زِدْنٰهُمْ عَذَابًا فَوْقَ الْعَذَابِ بِمَا كَانُوْا یُفْسِدُوْنَ ۟
16.88. அல்லாஹ்வை நிராகரித்து மற்றவர்களையும் அவனுடைய பாதையை விட்டும் திருப்பியவர்களான- அவர்கள் தாமும் வழிகெட்டு, மற்றவர்களையும் வழிகெடுத்ததன் காரணமாக - அவர்களின் நிராகரிப்பினால் அவர்கள் பெற வேண்டிய வேதனையோடு இன்னும் வேதனையை அதிகப்படுத்துவோம்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَیَوْمَ نَبْعَثُ فِیْ كُلِّ اُمَّةٍ شَهِیْدًا عَلَیْهِمْ مِّنْ اَنْفُسِهِمْ وَجِئْنَا بِكَ شَهِیْدًا عَلٰی هٰۤؤُلَآءِ ؕ— وَنَزَّلْنَا عَلَیْكَ الْكِتٰبَ تِبْیَانًا لِّكُلِّ شَیْءٍ وَّهُدًی وَّرَحْمَةً وَّبُشْرٰی لِلْمُسْلِمِیْنَ ۟۠
16.89. -தூதரே!- நாம் ஒவ்வொரு சமூகத்திலிருந்தும் ஒரு தூதரை அவர்களது நிராகரிப்பு அல்லது நம்பிக்கை என்பவற்றுக்கு சாட்சி கூறுவதற்கு எழுப்பும் நாளை நினைவு கூர்வீராக! இந்த தூதர் அவர்களின் இனத்தைச் சார்ந்தவராக, அவர்களின் மொழியைப் பேசக்கூடியவராக உள்ளார். -தூதரே!- சமூகங்கள் அனைத்திற்கும் உம்மை சாட்சியாளராகக் கொண்டுவருவோம். ஆகுமானது, தடைசெய்யப்பட்டது, நற்கூலி, தண்டனை, ஏனைய விளக்கம் தேவையான அனைத்தையும் தெளிவுபடுத்துவதற்காக நாம் உம்மீது குர்ஆனை இறக்கியுள்ளோம். சத்தியத்தின் பக்கம் மக்களுக்கு வழிகாட்டவும் நம்பிக்கைகொண்டு அதன்படி செயல்படக்கூடியவர்களுக்கு அருளாகவும் நம்பிக்கையாளர்களுக்கு நிலையான அருட்கொடைகள் உண்டு என்று அவர்களுக்கு நற்செய்தி கூறக்கூடியதாகவும் அதனை நாம் இறக்கியுள்ளோம்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
اِنَّ اللّٰهَ یَاْمُرُ بِالْعَدْلِ وَالْاِحْسَانِ وَاِیْتَآئِ ذِی الْقُرْبٰی وَیَنْهٰی عَنِ الْفَحْشَآءِ وَالْمُنْكَرِ وَالْبَغْیِ ۚ— یَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ ۟
16.90. நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுக்கு நீதியைக்கொண்டு கட்டளையிடுகிறான். அவர்கள் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் அடியார்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்றும் தீர்ப்பு சொல்வதில் சிறப்பிற்கான காரணமின்றி யாருக்கும் முன்னுரிமை வழங்கக் கூடாது என்றும் கட்டளையிடுகிறான். விரும்பிச் செலவளித்தல் அநீதி இழைத்தவரை மன்னித்தல் போன்ற அவர்கள் மீது கடமையாக்கப்படாத உபரியான நன்மைகளையும் அவர்கள் செய்ய வேண்டும் என்றும் தேவையுடைய உறவினர்களுக்கு வழங்கும்படியும் அவன் கட்டளையிடுகிறான். மானக்கேடான கெட்ட வார்த்தைகள், விபச்சாரம் போன்ற தீய செயல்கள், மார்க்கம் தடுத்த அனைத்து பாவமான காரியங்கள், அநீதியிழைத்தல், கர்வம் கொள்ளுதல் ஆகியவற்றை விட்டும் அவன் உங்களைத் தடுக்கிறான். அவன் உங்களுக்கு உபதேசித்ததைக் கொண்டு நீங்கள் படிப்பினை பெற்றுக்கொள்ளும் பொருட்டு அவனுடைய கட்டளைகளை நிறைவேற்றும்படியும் அவன் தடுத்தவற்றிலிருந்து விலகியிருக்கும்படியும் அல்லாஹ் உங்களுக்கு அறிவுறுத்துகிறான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَاَوْفُوْا بِعَهْدِ اللّٰهِ اِذَا عٰهَدْتُّمْ وَلَا تَنْقُضُوا الْاَیْمَانَ بَعْدَ تَوْكِیْدِهَا وَقَدْ جَعَلْتُمُ اللّٰهَ عَلَیْكُمْ كَفِیْلًا ؕ— اِنَّ اللّٰهَ یَعْلَمُ مَا تَفْعَلُوْنَ ۟
16.91. அல்லாஹ்விடம் செய்த அல்லது மக்களிடம் செய்த எல்லா ஒப்பந்தங்களையும் முழுமையாக நிறைவேற்றுங்கள். அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து ஒப்பந்தங்களை உறுதிப்படுத்திய பிறகு அதனை முறித்து விடாதீர்கள். நீங்கள் சத்தியம் செய்ததை நிறைவேற்றுவதாக அல்லாஹ்வையே சாட்சியாக ஆக்கியுள்ளீர்கள். நீங்கள் செய்யக் கூடியதை அல்லாஹ் நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَلَا تَكُوْنُوْا كَالَّتِیْ نَقَضَتْ غَزْلَهَا مِنْ بَعْدِ قُوَّةٍ اَنْكَاثًا ؕ— تَتَّخِذُوْنَ اَیْمَانَكُمْ دَخَلًا بَیْنَكُمْ اَنْ تَكُوْنَ اُمَّةٌ هِیَ اَرْبٰی مِنْ اُمَّةٍ ؕ— اِنَّمَا یَبْلُوْكُمُ اللّٰهُ بِهٖ ؕ— وَلَیُبَیِّنَنَّ لَكُمْ یَوْمَ الْقِیٰمَةِ مَا كُنْتُمْ فِیْهِ تَخْتَلِفُوْنَ ۟
16.92. ஒப்பந்தங்களை முறித்து மூடர்களாக, புத்தி குறைந்தவர்களாக ஆகிவிடாதீர்கள். அதற்கு உதாரணம், கஷ்டப்பட்டு நூல் நூற்று பின்னர் அதனை முன்பு இருந்தது போன்றே துண்டு துண்டாக ஆக்கிவிட்ட முட்டாள் பெண்ணைப் போன்றதாகும். அவள் நூற்பதிலும் அதனை பிரிப்பதிலும் சிரமப்பட்டு விட்டு எவ்வித பயனையும் அடையவில்லை. எதிரியின் சமூகத்தைவிட உங்களின் சமூகம் பெருகி பலமடைந்துவிட வேண்டும் என்பதற்காக உங்களின் சத்தியங்களை ஒருவரையொருவர் ஏமாற்றும் சாதனமாக ஆக்கி விடாதீர்கள். ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்றுவதைக்கொண்டு அல்லாஹ் உங்களை சோதிக்கிறான், நீங்கள் முழுமையாக நிறைவேற்றுகிறீர்களா அல்லது முறித்து விடுகிறீர்களா என்று.” நீங்கள் உலகில் முரண்பட்டுக் கொண்டிருந்த அனைத்தையும் அவன் மறுமை நாளில் உங்களுக்குத் நிச்சயம் தெளிவுபடுத்திவிடுவான். அசத்தியவாதிகளில் சத்தியவாதிகள் யார்? பொய்யர்களில் உண்மையாளர்கள் யார்? என்று அனைவரும் வெட்டவெளிச்சமாகி விடுவார்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَلَوْ شَآءَ اللّٰهُ لَجَعَلَكُمْ اُمَّةً وَّاحِدَةً وَّلٰكِنْ یُّضِلُّ مَنْ یَّشَآءُ وَیَهْدِیْ مَنْ یَّشَآءُ ؕ— وَلَتُسْـَٔلُنَّ عَمَّا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
16.93. அல்லாஹ் நாடியிருந்தால் உங்கள் அனைவரையும் சத்தியத்தின் மீது ஒன்றுபட்ட ஒரே சமூகமாக ஆக்கியிருப்பான். ஆயினும் அவன் தான் நாடியவர்களை தன் நீதியால் சத்தியத்துக்கு வழிகாட்டாமலும் ஒப்பந்தங்களை நிறைவேற்றாமலும் வழிதவறச் செய்து விடுகிறான். தான் நாடியவர்களுக்கு தன் அருளால் அதற்கு உதவுகிறான். நீங்கள் உலகில் செய்து கொண்டிருந்த செயல்களைக் குறித்து மறுமை நாளில் நிச்சயம் விசாரிக்கப்படுவீர்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• للكفار الذين يصدون عن سبيل الله عذاب مضاعف بسبب إفسادهم في الدنيا بالكفر والمعصية.
1. அல்லாஹ்வின் பாதையை விட்டும் மக்களைத் தடுக்கும் நிராகரிப்பாளர்களுக்கு, நிராகரித்து, பாவம் செய்து பூமியில் குழப்பம் விளைவித்ததன் காரணமாக பல மடங்கு வேதனை உண்டு.

• لا تخلو الأرض من أهل الصلاح والعلم، وهم أئمة الهدى خلفاء الأنبياء، والعلماء حفظة شرائع الأنبياء.
2. இந்த பூமி நல்லவர்கள் மற்றும் அறிஞர்கள் இன்றி ஒருபோதும் இருக்காது. அவர்கள்தாம் நேர்வழிகாட்டக்கூடியவர்கள்; நபிமார்களின் பிரதிநிதிகள்; நபிமார்கள் கொண்டுவந்த மார்க்கத்தைப் பாதுகாப்போரான அறிஞர்கள்.

• حدّدت هذه الآيات دعائم المجتمع المسلم في الحياة الخاصة والعامة للفرد والجماعة والدولة.
3. ஒரு முஸ்லிம் சமூகத்திலுள்ள தனி மனிதனும், சமூகமும் நாடும், தனி வாழ்விலும் பொது வாழ்விலும் கொண்டிருக்கக்கூடிய பண்புகளை இவ்வசனங்கள் குறிப்பிட்டுள்ளன.

• النهي عن الرشوة وأخذ الأموال على نقض العهد.
4. ஒப்பந்தங்களை முறிப்பதற்காக இலஞ்சம், பணம் பெறுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

 
የይዘት ትርጉም ምዕራፍ: አን-ነሕል
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት