የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም አንቀጽ: (103) ምዕራፍ: ሱረቱ አን-ነሕል
وَلَقَدْ نَعْلَمُ اَنَّهُمْ یَقُوْلُوْنَ اِنَّمَا یُعَلِّمُهٗ بَشَرٌ ؕ— لِسَانُ الَّذِیْ یُلْحِدُوْنَ اِلَیْهِ اَعْجَمِیٌّ وَّهٰذَا لِسَانٌ عَرَبِیٌّ مُّبِیْنٌ ۟
16.103. “இந்தக் குர்ஆனை ஒரு மனிதன்தான் முஹம்மதுக்குக் கற்றுக் கொடுக்கிறான்” என்று இணைவைப்பாளர்கள் கூறுவதை நாம் அறிவோம். தங்களின் வாதத்தில் அவர்கள் பொய்யர்கள். ஏனெனில் அவர்கள் அவருக்குக் கற்றுக்கொடுப்பதாகக் கூறும் மனிதனின் மொழி அரபி அல்லாத அந்நிய மொழியாகும். இந்தக் குர்ஆனோ தெளிவான அரபிமொழியின் உயர்ந்த இலக்கிய நடையில் இறக்கப்பட்டதாகும். இவ்வாறிருக்கும் போது அரபி அல்லாத ஒரு மனிதனிடமிருந்து அவர் இந்தக் குர்ஆனைப் பெற்றார் என்று எவ்வாறு அவர்கள் கூற முடியும்?
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• الترخيص للمُكرَه بالنطق بالكفر ظاهرًا مع اطمئنان القلب بالإيمان.
1. உள்ளம் ஈமானில் உறுதியுடன் இருக்கும் நிலையில் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டால் வெளிப்படையாக நிராகரிப்பின் வார்த்தையைக் கூறுவதற்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது.

• المرتدون استوجبوا غضب الله وعذابه؛ لأنهم استحبوا الحياة الدنيا على الآخرة، وحرموا من هداية الله، وطبع الله على قلوبهم وسمعهم وأبصارهم، وجعلوا من الغافلين عما يراد بهم من العذاب الشديد يوم القيامة.
2. இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கும் தண்டனைக்கும் ஆளாகிவிடுவார்கள். ஏனெனில் அவர்கள் மறுமையைவிட இவ்வுலகத்திற்கே முன்னுரிமை வழங்கினார்கள். அல்லாஹ்வின் நேர்வழியை இழந்துவிட்டார்கள். அல்லாஹ் அவர்களின் உள்ளங்களிலும் செவிகளிலும் பார்வைகளிலும் முத்திரையிட்டு விட்டான். மறுமை நாளில் அவர்களுக்குக் காத்திருக்கும் கடுமையான வேதனையை மறந்தவர்களில் அவர்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள்.

• كَتَبَ الله المغفرة والرحمة للذين آمنوا، وهاجروا من بعد ما فتنوا، وصبروا على الجهاد.
3. நம்பிக்கை கொண்டு சோதிக்கப்பட்ட பின் புலம்பெயர்ந்து போரில் பொறுமையாக இருந்தோருக்கு அல்லாஹ் மன்னிப்பையும், கருணையையும் எழுதியுள்ளான்.

 
የይዘት ትርጉም አንቀጽ: (103) ምዕራፍ: ሱረቱ አን-ነሕል
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - የትርጉሞች ማዉጫ

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

መዝጋት