የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም አንቀጽ: (118) ምዕራፍ: ሱረቱ አን-ነሕል
وَعَلَی الَّذِیْنَ هَادُوْا حَرَّمْنَا مَا قَصَصْنَا عَلَیْكَ مِنْ قَبْلُ ۚ— وَمَا ظَلَمْنٰهُمْ وَلٰكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟
16.118. குறிப்பாக யூதர்கள் மீது நாம் உமக்கு ஏற்கனவே எடுத்துக்கூறியவற்றைத் தடைசெய்திருந்தோம். (பார்க்க, அல்அன்ஆம் என்ற அத்தியாயத்தின் 146 வது வசனம்) நாம் அவற்றைத் தடைசெய்து அவர்கள்மீது அநீதி இழைக்கவில்லை. ஆனால் அவர்கள்தாம் தமக்குத் தாமே அநீதி இழைத்து தண்டனைக்கான காரணிகளைத் தேடிக் கொண்டார்கள். நாம் அவர்களின் அநியாயத்திற்குத்தான் தண்டனை வழங்கினோம். அவர்களைத் தண்டிக்கும்பொருட்டே நாம் அவர்கள் மீது அவற்றைத் தடைசெய்தோம்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• الجزاء من جنس العمل؛ فإن أهل القرية لما بطروا النعمة بُدِّلوا بنقيضها، وهو مَحْقُها وسَلْبُها ووقعوا في شدة الجوع بعد الشبع، وفي الخوف والهلع بعد الأمن والاطمئنان، وفي قلة موارد العيش بعد الكفاية.
1. செயலுக்கேற்பவே கூலி வழங்கப்படும். அந்த ஊர்வாசிகள் அருட்கொடைகளுக்கு (நன்றி செலுத்தாமல்) கர்வம் கொண்டபோது அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த வயிறு நிறைய உணவு, அமைதி, நிம்மதி, பாதுகாப்பு, செழிப்பான வாழ்க்கை ஆகியவை கடுமையான பசி, பயம், வருமானப் பற்றாக்குறை மிகுந்த வாழ்க்கையாக மாற்றப்பட்டு, அழிக்கப்பட்டு விட்டது.

• وجوب الإيمان بالله وبالرسل، وعبادة الله وحده، وشكره على نعمه وآلائه الكثيرة، وأن العذاب الإلهي لاحقٌ بكل من كفر بالله وعصاه، وجحد نعمة الله عليه.
2. அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்களின் மீதும் நம்பிக்கைகொள்வதும் அவனை மட்டுமே வணங்குவதும் அவன் நம் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதும் கட்டாயக் கடமையாகும். அல்லாஹ்வை நிராகரிப்பவர்கள், அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்படுபவர்கள், அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்த மறுப்பவர்கள் ஆகியவர்களைத்தான் இறைவேதனை தாக்கும்.

• الله تعالى لم يحرم علينا إلا الخبائث تفضلًا منه، وصيانة عن كل مُسْتَقْذَر.
3. அல்லாஹ் தன் அருளின் காரணமாகவும் அறுவருக்கத்தக்கவற்றை விட்டும் பாதுகாப்பதற்காகவுமே நம்மீது தீயவைகளை மாத்திரம் தடைசெய்துள்ளான்.

 
የይዘት ትርጉም አንቀጽ: (118) ምዕራፍ: ሱረቱ አን-ነሕል
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - የትርጉሞች ማዉጫ

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

መዝጋት