የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም አንቀጽ: (54) ምዕራፍ: ሱረቱ አል ኢስራዕ
رَبُّكُمْ اَعْلَمُ بِكُمْ ؕ— اِنْ یَّشَاْ یَرْحَمْكُمْ اَوْ اِنْ یَّشَاْ یُعَذِّبْكُمْ ؕ— وَمَاۤ اَرْسَلْنٰكَ عَلَیْهِمْ وَكِیْلًا ۟
17.54. -மனிதர்களே!- உங்களின் இறைவன் உங்களைக்குறித்து நன்கறிந்தவன். உங்களில் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவன் நாடினால் உங்கள் மீது அருள் புரிந்து நம்பிக்கையின் பக்கமும் நற்செயல்களின் பக்கமும் உங்களுக்கு வழிகாட்டுவான். அவன் நாடினால் உங்களைக் கைவிட்டு, நிராகரித்த நிலையிலேயே உங்களை மரணிக்கச் செய்து உங்களை தண்டிப்பான். -தூதரே!- அவர்களை நம்பிக்கைகொள்ளும்படி நிர்ப்பந்திக்கக்கூடியவராக, நிராகரிப்பை விட்டும் தடுக்கக்கூடியவராக, அவர்களின் செயல்களைக் கணக்கிடக்கூடியவராக நாம் உம்மை அனுப்பவில்லை. நிச்சயமாக நீர் அல்லாஹ்விடமிருந்து எத்திவைக்குமாறு இட்ட கட்டளைகளை எடுத்துரைக்கக்கூடியவர் மட்டுமே ஆவீர்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• القول الحسن داع لكل خلق جميل وعمل صالح، فإنَّ من ملك لسانه ملك جميع أمره.
1. நல்ல வார்த்தை அனைத்து நற்பண்புகளையும் நற்செயல்களையும் வரவழைக்கக்கூடியதாகும். எவர் தம் நாவைக் கட்டுப்படுத்திக் கொண்டாரோ அவர் தம் அனைத்து விஷயங்களையும் கட்டுப்படுத்திக் கொண்டார்.

• فاضل الله بين الأنبياء بعضهم على بعض عن علم منه وحكمة.
2. அல்லாஹ் தன் அறிவு மற்றும் ஞானத்தின் அடிப்படையில் தூதர்களில் சிலரைவிட சிலரை சிறப்பித்துள்ளான்.

• الله لا يريد بعباده إلا ما هو الخير، ولا يأمرهم إلا بما فيه مصلحتهم.
3. அல்லாஹ் தன் அடியார்களுக்கு நன்மையைத் தவிர வேறொன்றும் நாட மாட்டான். அவர்களுக்கு நன்மை அடங்கியுள்ள விஷயத்தைத் தவிர வேறெதையும் அவர்களுக்குக் கட்டளையிட மாட்டான்.

• علامة محبة الله أن يجتهد العبد في كل عمل يقربه إلى الله، وينافس في قربه بإخلاص الأعمال كلها لله والنصح فيها.
4. அடியான் அல்லாஹ்விடம் நெருங்கச் செய்யும் அனைத்துவிதமான செயல்களிலும் கூடுதலாக ஈடுபடுவதும் அனைத்து செயற்பாடுகளையும் அல்லாஹ்வுக்காகவே செய்து, அவற்றில் விசுவாசமா இருந்து அவனது நெருக்கத்துக்கு போட்டியிடுவதும் அல்லாஹ்வை விரும்புவதின் அடையாளமாகும்.

 
የይዘት ትርጉም አንቀጽ: (54) ምዕራፍ: ሱረቱ አል ኢስራዕ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - የትርጉሞች ማዉጫ

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

መዝጋት