Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም አንቀጽ: (67) ምዕራፍ: አል ኢስራዕ
وَاِذَا مَسَّكُمُ الضُّرُّ فِی الْبَحْرِ ضَلَّ مَنْ تَدْعُوْنَ اِلَّاۤ اِیَّاهُ ۚ— فَلَمَّا نَجّٰىكُمْ اِلَی الْبَرِّ اَعْرَضْتُمْ ؕ— وَكَانَ الْاِنْسَانُ كَفُوْرًا ۟
17.67. -இணைவைப்பாளர்களே!- கடலில் உங்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டு, அதனால் அழிந்து விடுவீர்கள் என்று நீங்கள் அஞ்சும் போது அல்லாஹ்வை விடுத்து நீங்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்கள் எல்லாம் உங்களின் சிந்தனையை விட்டு அகன்று விடுகின்றன. நீங்கள் அப்போது அல்லாஹ்விடம் மட்டுமே நினைத்து அவனிடம் உதவி கோருகிறீர்கள். அவன் உங்களுக்கு உதவி செய்து, நீங்கள் அஞ்சும் விஷயத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கரைசேர்த்து விட்டால் நீங்கள் அவன் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதையும் அவனை மாத்திரமே அழைத்துப் பிரார்த்திப்பதையும் புறக்கணித்து, உங்களின் சிலைகளின்பால் திரும்பி விடுகிறீர்கள். மனிதன் அல்லாஹ்வின் அருட்கொடைகளை மிகவும் அதிகமாக மறுக்கக்கூடியவனாக இருக்கின்றான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• الإنسان كفور للنعم إلا من هدى الله.
1. மனிதன் அருட்கொடைகளை மிக அதிகமாக மறுக்கக்கூடியவனாக இருக்கின்றான். அல்லாஹ் நேர்வழிகாட்டியவர்களைத் தவிர.

• كل أمة تُدْعَى إلى دينها وكتابها، هل عملت به أو لا؟ والله لا يعذب أحدًا إلا بعد قيام الحجة عليه ومخالفته لها.
2. ஒவ்வொரு சமூகமும் அதனுடைய மார்க்கம் மற்றும் வேதத்தின்பால் அழைக்கப்படும். அவர்கள் அதனடிப்படையில் செயல்பட்டார்களா? இல்லையா? (என்று விசாரிக்கப்படுவார்கள்). அல்லாஹ் எந்த ஒரு மனிதரையும், ஆதாரம் கிடைத்த பின் அதற்கு மாற்றம் செய்தாலேயன்றி தண்டிக்க மாட்டான்.

• عداوة المجرمين والمكذبين للرسل وورثتهم ظاهرة بسبب الحق الذي يحملونه، وليس لذواتهم.
3. குற்றவாளிகளும் பொய்பித்தவர்களும் தூதர்களையும் அவர்களது வாரிசுகளையும் எதிர்ப்பது வெளிப்படையானது. அதற்குக் காரணம் அவர்கள் சுமந்திருக்கும் சத்தியமேயாகும். மாறாக அவர்களல்ல.

• الله تعالى عصم النبي من أسباب الشر ومن البشر، فثبته وهداه الصراط المستقيم، ولورثته مثل ذلك على حسب اتباعهم له.
4. அல்லாஹ் நபியை தீங்குகளின் காரணங்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் பாதுகாத்துள்ளான். அவரை உறுதிப்படுத்தி நேரான பாதைக்கு வழிகாட்டியுள்ளான். அவர்களது வாரிசுகள் அவர்களைப் பின்பற்றுவதற்கேற்ப அவற்றைப் பெறுவார்கள்.

 
የይዘት ትርጉም አንቀጽ: (67) ምዕራፍ: አል ኢስራዕ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት