Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም ምዕራፍ: አል ከህፍ   አንቀጽ:
اِنَّا مَكَّنَّا لَهٗ فِی الْاَرْضِ وَاٰتَیْنٰهُ مِنْ كُلِّ شَیْءٍ سَبَبًا ۟ۙ
18.84. நிச்சயமாக நாம் அவருக்குப் பூமியில் அதிகாரம் வழங்கினோம். அவர் தம் நோக்கத்தை அடைவதற்கான அனைத்து வழிகளையும் அவருக்கு வழங்கினோம்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
فَاَتْبَعَ سَبَبًا ۟
18.85. நாம் அவருக்கு வழங்கிய சாதனங்களையும் வழிமுறைகளையும் பெற்றுக் கொண்டு தம் நோக்கத்தை அடைவதற்காக மேற்கு நோக்கிச் சென்றார்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
حَتّٰۤی اِذَا بَلَغَ مَغْرِبَ الشَّمْسِ وَجَدَهَا تَغْرُبُ فِیْ عَیْنٍ حَمِئَةٍ وَّوَجَدَ عِنْدَهَا قَوْمًا ؕ۬— قُلْنَا یٰذَا الْقَرْنَیْنِ اِمَّاۤ اَنْ تُعَذِّبَ وَاِمَّاۤ اَنْ تَتَّخِذَ فِیْهِمْ حُسْنًا ۟
18.86. அவர் பூமியில் சென்றார். கண் பார்வைக்கு சூரியன் மறையும் திசையில் பூமியின் இறுதிப் பகுதியை அடைந்தபோது களிமண்ணாலான சூடான ஊற்றில் சூரியன் மறைவதைப்போல் கண்டார். சூரியன் மறையும் திசையில் நிராகரிக்கும் ஒரு சமூகத்தைக் கண்டார். நாம் அவருக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்கி கூறினோம்: “துல்கர்னைனே! நீர் விரும்பினால் கொலை செய்தோ வேறு வழியிலோ இவர்களைத் தண்டிக்கலாம். அல்லது விரும்பினால் அவர்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ளலாம்.”
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
قَالَ اَمَّا مَنْ ظَلَمَ فَسَوْفَ نُعَذِّبُهٗ ثُمَّ یُرَدُّ اِلٰی رَبِّهٖ فَیُعَذِّبُهٗ عَذَابًا نُّكْرًا ۟
18.87. துல்கர்னைன் கூறினார்: “அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கி அல்லாஹ்வை வணங்குமாறு நாம் அவரை அழைத்த பின்பும் அதில் உறுதியாக நிலைத்திருப்பவர்களை நாம் இவ்வுலகில் கொலைசெய்து தண்டிப்போம். பின்னர் அவர்கள் மறுமை நாளில் தம் இறைவனிடம் வருவார்கள். அவன் அவர்களை மிகவும் மோசமாக தண்டிப்பான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَاَمَّا مَنْ اٰمَنَ وَعَمِلَ صَالِحًا فَلَهٗ جَزَآءَ ١لْحُسْنٰی ۚ— وَسَنَقُوْلُ لَهٗ مِنْ اَمْرِنَا یُسْرًا ۟ؕ
18.88. அவர்களில் நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிபவர்களுக்கு சுவனம் இருக்கின்றது. இது அவருடைய நம்பிக்கைக்கும் நற்செயலுக்கும் இறைவன் வழங்கும் கூலியாகும். நாம் நம் கட்டளையில் மென்மையான, இலகுவானதையே அவருக்குக் கூறுவோம்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ثُمَّ اَتْبَعَ سَبَبًا ۟
18.89. பின்னர் அவர் வேறொரு வழியைப் பின்பற்றி சூரியன் உதிக்கும் திசையை நோக்கிச் சென்றார்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
حَتّٰۤی اِذَا بَلَغَ مَطْلِعَ الشَّمْسِ وَجَدَهَا تَطْلُعُ عَلٰی قَوْمٍ لَّمْ نَجْعَلْ لَّهُمْ مِّنْ دُوْنِهَا سِتْرًا ۟ۙ
18.90. அவர் சூரியன் உதிக்கும் இடம் கண்ணுக்கு தெரியும் வரை சென்றுகொண்டேயிருந்தார். அங்கு சூரியன் சில சமூகங்களின் மீது உதித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். நாம் சூரியனிடமிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்காக வீடுகளையோ மர நிழல்களையோ ஏற்படுத்தியிருக்கவில்லை.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
كَذٰلِكَ ؕ— وَقَدْ اَحَطْنَا بِمَا لَدَیْهِ خُبْرًا ۟
18.91. அவ்வாறுதான் துல்கர்னைனின் விடயமாகும். அவரிடம் இருக்கும் பலம், அதிகாரம் ஆகியவற்றைக் குறித்த விளக்கமான தகவல்களையும் நாம் முழுமையாக அறிந்துள்ளோம்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ثُمَّ اَتْبَعَ سَبَبًا ۟
18.92. பின்னர், முன்னர் சென்ற இரு பாதைகளையும் தவிர்த்து கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடைப்பட்ட வேறொரு பாதையில் சென்றார்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
حَتّٰۤی اِذَا بَلَغَ بَیْنَ السَّدَّیْنِ وَجَدَ مِنْ دُوْنِهِمَا قَوْمًا ۙ— لَّا یَكَادُوْنَ یَفْقَهُوْنَ قَوْلًا ۟
18.93. இரு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியை அடைந்தார். அங்கு மற்றவர்களின் பேச்சை புரிந்துகொள்ளாத ஒரு சமூகத்தைக் கண்டார்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
قَالُوْا یٰذَا الْقَرْنَیْنِ اِنَّ یَاْجُوْجَ وَمَاْجُوْجَ مُفْسِدُوْنَ فِی الْاَرْضِ فَهَلْ نَجْعَلُ لَكَ خَرْجًا عَلٰۤی اَنْ تَجْعَلَ بَیْنَنَا وَبَیْنَهُمْ سَدًّا ۟
18.94. அவர்கள் கூறினார்கள்: “துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜுஜ், மஃஜுஜ் என்னும் கூட்டத்தினர் (இவர்கள் ஆதமுடைய சந்ததியில் தோன்றிய மிகப் பெரும் இரு கூட்டத்தினர்) கொலை செய்தல் மற்றும் பல்வேறு வகையில் பூமியில் குழப்பம் விளைவிப்பவர்களாக இருக்கின்றார்கள். உம்மால் எங்களுக்கும் அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பை ஏற்படுத்துவதற்கு நாங்கள் உமக்கு ஒரு தொகையை வழங்கட்டுமா?
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
قَالَ مَا مَكَّنِّیْ فِیْهِ رَبِّیْ خَیْرٌ فَاَعِیْنُوْنِیْ بِقُوَّةٍ اَجْعَلْ بَیْنَكُمْ وَبَیْنَهُمْ رَدْمًا ۟ۙ
18.95. துல்கர்னைன் கூறினார்: “என் இறைவன் எனக்கு அளித்த ஆட்சியும், அதிகாரமும் நீங்கள் எனக்கு வழங்கும் செல்வத்தைவிட சிறந்தது. மனிதர்களையும் கருவிகளையும் கொண்டு எனக்கு உதவி செய்யுங்கள். நான் உங்களுக்கும் அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பை ஏற்படுத்துகிறேன்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
اٰتُوْنِیْ زُبَرَ الْحَدِیْدِ ؕ— حَتّٰۤی اِذَا سَاوٰی بَیْنَ الصَّدَفَیْنِ قَالَ انْفُخُوْا ؕ— حَتّٰۤی اِذَا جَعَلَهٗ نَارًا ۙ— قَالَ اٰتُوْنِیْۤ اُفْرِغْ عَلَیْهِ قِطْرًا ۟ؕ
18.96. இரும்புப் பாளங்களைக் கொண்டுவாருங்கள். அவர்கள் அவற்றைக் கொண்டுவந்தார்கள். அவர் அவற்றை இரு மலைகளுக்கிடையே வைத்து கட்டிக்கொண்டேயிருந்தார். இரு மலைகளுக்கு நேராக அக்கட்டிடம் வந்தபோது பணியாளர்களிடம் கூறினார்: “இந்தப் இரும்புப் பாளங்களில் நெருப்பை மூட்டுங்கள். இரும்பு சிவப்பு நிறத்தை அடைந்ததும் “செம்பைக்கொண்டு வாருங்கள். அதனை இதன்மீது ஊற்றுகிறேன்” என்றார்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
فَمَا اسْطَاعُوْۤا اَنْ یَّظْهَرُوْهُ وَمَا اسْتَطَاعُوْا لَهٗ نَقْبًا ۟
18.97. யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரால் அதன் உயரத்தின் காரணமாக அதன்மீது ஏறவும் முடியவில்லை. அதன் உறுதியின் காரணமாக கீழிருந்து அதனைத் துளையிடவும் முடியவில்லை.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• أن ذا القرنين أحد الملوك المؤمنين الذين ملكوا الدنيا وسيطروا على أهلها، فقد آتاه الله ملكًا واسعًا، ومنحه حكمة وهيبة وعلمًا نافعًا.
1. துல்கர்னைன் உலகை, அதன் மக்களை ஆட்சி செய்த நம்பிக்கைகொண்ட அரசர்களில் ஒருவராக இருந்தார். அல்லாஹ் அவருக்கு பரந்த ஆட்சியதிகாரத்தையும், மதிநுட்பத்தையும், கண்ணியத்தையும், பயனுள்ள கல்வியையும் வழங்கியிருந்தான்.

• من واجب الملك أو الحاكم أن يقوم بحماية الخلق في حفظ ديارهم، وإصلاح ثغورهم من أموالهم.
2. மக்களின் செல்வத்தைக் கொண்டு அவர்களின் வீடுகளைப் பாதுகாப்பதும் குறைகளைச் சீர்செய்வதும் அரசர் அல்லது கவர்னரின் கடமைகளில் ஒன்றாகும்.

• أهل الصلاح والإخلاص يحرصون على إنجاز الأعمال ابتغاء وجه الله.
3. நற்செயலும், உளத்தூய்மையும் உள்ளோர், அல்லாஹ்வின் திருப்திக்காகவே காரியங்களைச் சாதிப்பதில் ஆர்வம் கொள்வார்கள்.

 
የይዘት ትርጉም ምዕራፍ: አል ከህፍ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት