Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም አንቀጽ: (164) ምዕራፍ: አል-በቀራህ
اِنَّ فِیْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافِ الَّیْلِ وَالنَّهَارِ وَالْفُلْكِ الَّتِیْ تَجْرِیْ فِی الْبَحْرِ بِمَا یَنْفَعُ النَّاسَ وَمَاۤ اَنْزَلَ اللّٰهُ مِنَ السَّمَآءِ مِنْ مَّآءٍ فَاَحْیَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِیْهَا مِنْ كُلِّ دَآبَّةٍ ۪— وَّتَصْرِیْفِ الرِّیٰحِ وَالسَّحَابِ الْمُسَخَّرِ بَیْنَ السَّمَآءِ وَالْاَرْضِ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّعْقِلُوْنَ ۟
2.164. வானங்கள் மற்றும் பூமியின் படைப்பிலும், அவற்றிலுள்ள அபுர்வ படைப்புக்களிலும், இரவும் பகலும் மாறிமாறி வருவதிலும், மக்களுக்குப் பயனளிக்கக்கூடிய உணவுப்பொருட்கள், வியாபாரப் பொருட்கள் மற்றும் தேவையான பொருட்களை சுமந்துகொண்டு கடலில் செல்கின்ற கப்பல்களிலும், வானத்திலிருந்து அல்லாஹ் இறக்கி, விளையும் பயிா்கள் மூலம் பூமியை உயிர்ப்பிக்கும் நீரிலும், இந்த உலகத்தில் அல்லாஹ் ஏற்படுத்திய உயிரினங்களிலும், ஒரு திசையிலிருந்து மற்றொரு திசைக்கு அவன் காற்றை வீசச் செய்வதிலும், வானத்திற்கும் பூமிக்குமிடையே கட்டுப்படுத்தப்பட்டுள்ள மேகங்களிலும் ஆதாரங்களைப் புரிந்துகொள்ளும் மக்களுக்கு, அல்லாஹ் ஒருவனே என்பதை அறிவிக்கக்கூடிய தெளிவான சான்றுகள் இருக்கின்றன.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• المؤمنون بالله حقًّا هم أعظم الخلق محبة لله؛ لأنهم يطيعونه على كل حال في السراء والضراء، ولا يشركون معه أحدًا.
1. அல்லாஹ்வின்மீது உண்மையாகவே நம்பிக்கைகொண்டவர்களே அல்லாஹ்வை அதிகம் நேசிக்கும் மக்கள். ஏனெனில் அவர்கள் இன்பத்திலும் துன்பத்திலும் அவனுக்கே கட்டுப்படுவார்கள். அவனுக்கு இணையாக யாரையும் ஆக்க மாட்டார்கள்.

• في يوم القيامة تنقطع كل الروابط، ويَبْرَأُ كل خليل من خليله، ولا يبقى إلا ما كان خالصًا لله تعالى.
2. மறுமைநாளில் தொடர்புகள் அனைத்தும் அறுந்துவிடும். நெருங்கிய நண்பன் தன் நெருங்கிய நண்பனை விட்டும் விலகிவிடுவான். அல்லாஹ்வுக்காக செய்யப்பட்ட செயல்கள் மட்டுமே நிலைத்திருக்கும்.

• التحذير من كيد الشيطان لتنوع أساليبه وخفائها وقربها من مشتهيات النفس.
3. சைதானின் சூழ்ச்சிகள் பலதரப்பட்டவை, மறைவானவை, மனோஇச்சைகளுக்கு நெருக்கமானவை என்பதனால் அதிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

 
የይዘት ትርጉም አንቀጽ: (164) ምዕራፍ: አል-በቀራህ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት