የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም አንቀጽ: (216) ምዕራፍ: ሱረቱ አል-በቀራህ
كُتِبَ عَلَیْكُمُ الْقِتَالُ وَهُوَ كُرْهٌ لَّكُمْ ۚ— وَعَسٰۤی اَنْ تَكْرَهُوْا شَیْـًٔا وَّهُوَ خَیْرٌ لَّكُمْ ۚ— وَعَسٰۤی اَنْ تُحِبُّوْا شَیْـًٔا وَّهُوَ شَرٌّ لَّكُمْ ؕ— وَاللّٰهُ یَعْلَمُ وَاَنْتُمْ لَا تَعْلَمُوْنَ ۟۠
2.216. நம்பிக்கையாளர்களே! போரில் உயிரையும் உடலையும் அர்ப்பணம் செய்ய வேண்டும் என்பதால் மனதிற்கு வெறுப்பாக இருந்தபோதிலும் அல்லாஹ்வின் பாதையில் போர்புரிவது உங்கள்மீது கடமையாக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் பாதையில் போர்புரிவது போன்ற உங்களுக்குப் பயனுள்ள ஒரு விஷயத்தை நீங்கள் வெறுக்கலாம், அதற்குக் கிடைக்கும் அபரிமிதமான கூலிகளுடன் எதிரிகளை வென்றுவிடுதல், அல்லாஹ்வின் வார்த்தையை மேலோங்கச் செய்தல் போன்ற நன்மைகளையும் அதில் நீங்கள் பெறலாம். போர் புரியாமல் இருப்பதைப் போன்ற உங்களுக்குத் தீங்கிழைக்கக்கூடிய ஒரு விஷயத்தை நீங்கள் விரும்பலாம். ஆனால் அதன் மூலம் இழிவும் எதிரிகளின் ஆதிக்கமும் ஏற்படும். நன்மைகளையும் தீங்குகளையும் அல்லாஹ்வே ஒவ்வொரு விடயத்தின் சாதக பாதகங்களை முழுமையாக அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள். எனவே அவனது கட்டளைகளுக்கு அடிபணியுங்கள். அதில்தான் நன்மை அடங்கியுள்ளது.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• الجهل بعواقب الأمور قد يجعل المرء يكره ما ينفعه ويحب ما يضره، وعلى المرء أن يسأل الله الهداية للرشاد.
1. விஷயங்களின் பின்விளைவுகளைப் பற்றிய அறியாமையினால் மனிதன் தனக்குப் பயனளிக்கக்கூடியதை வெறுக்கிறான், தனக்குத் தீங்கிழைக்கக்கூடியதை விரும்புகிறான். மனிதன் அல்லாஹ்விடம் நேர்வழியைக் கோரி பிரார்த்திக்க வேண்டும்.

• جاء الإسلام بتعظيم الحرمات والنهي عن الاعتداء عليها، ومن أعظمها صد الناس عن سبيل الله تعالى.
2. இஸ்லாம் சில விஷயங்களைக் கண்ணியப்படுத்தி அவற்றில் வரம்புமீறுவதைத் தடைசெய்துள்ளது. அவற்றில் மிகப் பெரிய பாவம், அல்லாஹ்வின் பாதையை விட்டும் மக்களைத் தடுப்பதாகும்.

• لا يزال الكفار أبدًا حربًا على الإسلام وأهله حتَّى يخرجوهم من دينهم إن استطاعوا، والله موهن كيد الكافرين.
3. நிராகரிப்பாளர்கள் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக அவர்களை மார்க்கத்தை விட்டு வெளியேற்றும் வரை ஓயாமல் போரிட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆயினும் அல்லாஹ் நிராகரிப்பாளர்களின் சூழ்ச்சியைப் பலவீனப்படுத்திவிடுவான்.

• الإيمان بالله تعالى، والهجرة إليه، والجهاد في سبيله؛ أعظم الوسائل التي ينال بها المرء رحمة الله ومغفرته.
4. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொள்வது, அவன் பக்கம் புலம்பெயர்ந்து செல்வது, அவனுடைய பாதையில் ஜிஹாது செய்வது மனிதன் அல்லாஹ்வின் கருணையையும் மன்னிப்பையும் பெறுவதற்கான மிகச் சிறந்த வழிகளாகும்.

• حرّمت الشريعة كل ما فيه ضرر غالب وإن كان فيه بعض المنافع؛ مراعاة لمصلحة العباد.
5. அடியார்களின் நன்மையைக் கவனத்தில்கொண்டு குறைவான பயனையும் அதிகமான தீங்குளையும் பெற்ற அனைத்தையும் ஷரீஆ தடைசெய்துள்ளது.

 
የይዘት ትርጉም አንቀጽ: (216) ምዕራፍ: ሱረቱ አል-በቀራህ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - የትርጉሞች ማዉጫ

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

መዝጋት