Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም አንቀጽ: (233) ምዕራፍ: አል-በቀራህ
وَالْوَالِدٰتُ یُرْضِعْنَ اَوْلَادَهُنَّ حَوْلَیْنِ كَامِلَیْنِ لِمَنْ اَرَادَ اَنْ یُّتِمَّ الرَّضَاعَةَ ؕ— وَعَلَی الْمَوْلُوْدِ لَهٗ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوْفِ ؕ— لَا تُكَلَّفُ نَفْسٌ اِلَّا وُسْعَهَا ۚ— لَا تُضَآرَّ وَالِدَةٌ بِوَلَدِهَا وَلَا مَوْلُوْدٌ لَّهٗ بِوَلَدِهٖ ۗ— وَعَلَی الْوَارِثِ مِثْلُ ذٰلِكَ ۚ— فَاِنْ اَرَادَا فِصَالًا عَنْ تَرَاضٍ مِّنْهُمَا وَتَشَاوُرٍ فَلَا جُنَاحَ عَلَیْهِمَا ؕ— وَاِنْ اَرَدْتُّمْ اَنْ تَسْتَرْضِعُوْۤا اَوْلَادَكُمْ فَلَا جُنَاحَ عَلَیْكُمْ اِذَا سَلَّمْتُمْ مَّاۤ اٰتَیْتُمْ بِالْمَعْرُوْفِ ؕ— وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
2.233. தாய்மார்கள் இரண்டு வருடம் முழுமையாக தங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட வேண்டும். இது பால்குடியை முழுமையாக நிறைவேற்ற விரும்புவர்களுக்கானது. விவாகரத்துச் செய்யப்பட்ட தாய்மார்களுக்குத் தேவையான உணவு, உடை போன்ற தேவைகளுக்கு ஷரீஅத்திற்கு முரணில்லாத மக்களிடையே இருக்கும் வழக்கத்தின்படி தந்தையரே பொறுப்பெடுக்க வேண்டும். யார்மீதும் அல்லாஹ் அவரது சக்திக்குமீறி பொறுப்பு சாட்ட மாட்டான். தாய்தந்தையரில் யாரும் குழந்தையை மற்றவருக்குத் தீங்கிழைப்பதற்குப் பயன்படுத்தக்கூடாது. குழந்தையின் தந்தை இறந்து, அதற்கு எந்தவித சொத்தும் இல்லையென்றால் குழந்தையின் சொத்துக்கு வாரிசாக அமையக்கூடியவர் தந்தையின் கடமைகளைச் செய்யவேண்டும். இரண்டுவருடம் நிறைவடைவதற்கு முன்னரே குழந்தையின் நலனை கருத்தில்கொண்டு ஒருவருக்கொருவர் ஆலோசித்து குழந்தைக்குப் பால்குடியை நிறுத்த தாய்தந்தையர் விரும்பினால் அவர்கள்மீது எந்தக் குற்றமுமில்லை. உங்கள் குழந்தைக்கு செவிலித்தாய்மார்களை வைத்து பாலூட்ட விரும்பினாலும் - அவர்களுக்கு அளிக்க வேண்டியதை குறைவின்றி, தாமதமின்றி முறையாக அளித்துவிட்டால் - உங்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். அறிந்துகொள்ளுங்கள் !உங்களின் செயல்கள் அனைத்தையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. நீங்கள் சேர்த்துவைத்த செயல்களின் அடிப்படையிலேயே அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• نهي الرجال عن ظلم النساء سواء كان بِعَضْلِ مَوْلِيَّتِه عن الزواج، أو إجبارها على ما لا تريد.
1. தனது பொறுப்பின் கீழ் உள்ள பெண்ணை திருமணம் செய்யவிடாது தடுப்பதன் மூலமோ அவள் விரும்பாததின் மீது அவளை வற்புறுத்துவதன் மூலமோ பெண்களுக்கு ஆண்கள் அநீதி இழைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

• حَفِظَ الشرع للأم حق الرضاع، وإن كانت مطلقة من زوجها، وعليه أن ينفق عليها ما دامت ترضع ولده.
2. பாலூட்டும் உரிமையை மார்க்கம் தாய்க்கு அளிக்கிறது, அவள் விவாகரத்து அளிக்கப்பட்ட பெண்ணாக இருந்தாலும் சரியே. அவள் பாலூட்டும்வரை அவளுடைய செலவீனங்களைப் பொறுப்பெடுத்துக் கொள்வது குழந்தையின் தந்தை மீதுள்ள கடமையாகும்.

• نهى الله تعالى الزوجين عن اتخاذ الأولاد وسيلة يقصد بها أحدهما الإضرار بالآخر.
3. அல்லாஹ் கணவன் மனைவி இருவரையும் பிள்ளைகளைப் பயன்படுத்தி ஒருவர் மற்றவருக்குத் தீங்கிழைப்பதை விட்டும் தடுத்துள்ளான்.

• الحث على أن تكون كل الشؤون المتعلقة بالحياة الزوجية مبنية على التشاور والتراضي بين الزوجين.
4. திருமண வாழ்க்கை சம்பந்தப்பட்ட அனைத்து விடயங்களும் ஆலோசனை மற்றும் பரஸ்பரம் புரிந்துணர்வின் அடிப்படையிலேயே அமையவேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது.

 
የይዘት ትርጉም አንቀጽ: (233) ምዕራፍ: አል-በቀራህ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት