Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም አንቀጽ: (25) ምዕራፍ: አል-በቀራህ
وَبَشِّرِ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ اَنَّ لَهُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ؕ— كُلَّمَا رُزِقُوْا مِنْهَا مِنْ ثَمَرَةٍ رِّزْقًا ۙ— قَالُوْا هٰذَا الَّذِیْ رُزِقْنَا مِنْ قَبْلُ وَاُتُوْا بِهٖ مُتَشَابِهًا ؕ— وَلَهُمْ فِیْهَاۤ اَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَّهُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
2.25. முன்னர் கூறப்பட்ட எச்சரிக்கை நிராகரிப்பாளர்களுக்குரியதாகும். தூதரே! அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரியும் நம்பிக்கையாளர்களுக்கு மகிழ்வூட்டும் சொர்க்கச் சோலைகள் உண்டு என்னும் நற்செய்தியைக் கூறுவீராக. அவற்றின் மாளிகைகள் மற்றும் மரங்களுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவற்றின் தூய்மையான பழங்களிலிருந்து அவர்களுக்கு உணவளிக்கப்படும்போதெல்லாம் அவை உலகிலுள்ள பழங்களை ஓத்திருப்பதைப்பார்த்து, இதற்கு முன்னரும் இதுபோன்றுதானே எங்களுக்கு வழங்கப்பட்டது என்று கூறுவார்கள். அவர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு வடிவத்திலும் பெயரிலும் ஒத்த, சுவையில் வேறுபட்ட பழங்கள் அவர்களுக்கு முன்னால் வைக்கப்படும். மனித மனமும் இயல்பும் வெறுக்கும் இவ்வுலகில் உள்ளோரிடம் காணப்படும் அனைத்துக் குறைகளிலிருந்தும் நீங்கிய தூய்மையான துணைகளும் சொர்க்கத்தில் அவர்களுக்கு உண்டு. முடிந்துவிடும் உலக இன்பத்திற்கு மாற்றமாக என்றும் முடிவடையாத நிரந்தரமான இன்பத்தில் அவர்கள் திளைத்திருப்பார்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• من كمال النعيم في الجنة أن ملذاتها لا يكدرها أي نوع من التنغيص، ولا يخالطها أي أذى.
1. சுவன இன்பத்தின் பரிபூரணத் தன்மையில் ஒன்று, அதன் இன்பங்களில் எவ்விதக் கலங்கமும் இருக்காது. அதனுடன் எவ்விதத் தொல்லையும் கலந்திடவும் செய்யாது என்பதாகும்.

• الأمثال التي يضربها الله تعالى لا ينتفع بها إلا المؤمنون؛ لأنهم هم الذين يريدون الهداية بصدق، ويطلبونها بحق.
2. அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே அவன் கூறும் உதாரணங்களிலிருந்து பலனடைவார்கள். ஏனெனில், உண்மையாகவே நேர்வழியை விரும்புவதோடு அதைத் தேடுபவர்களாகவும் உள்ளவர்கள் அவர்களே.

• من أبرز صفات الفاسقين نقضُ عهودهم مع الله ومع الخلق، وقطعُهُم لما أمر الله بوصله، وسعيُهُم بالفساد في الأرض.
3. அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை முறிப்பது, மனிதர்களுடன் செய்த வாக்குறுதியை முறிப்பது, அல்லாஹ் சேர்த்து வாழுமாறு கட்டளையிட்ட இரத்த உறவுகளைத் துண்டிப்பது, பூமியில் குழப்பம் விளைவிக்க முயற்சி செய்வது இவை அனைத்தும் பாவிகளின் பிரதான பண்புகளாகும்.

• الأصل في الأشياء الإباحة والطهارة؛ لأن الله تعالى امتنَّ على عباده بأن خلق لهم كل ما في الأرض.
4. அனைத்துப் பொருட்களும் அனுமதிக்கப்பட்டது, தூய்மையானது என்பதே அடிப்படை விதியாகும். ஏனெனில், அல்லாஹ் பூமியிலுள்ள அனைத்தையும் தனது அடியார்களுக்காகவே படைத்துள்ளதாக கூறிக்காட்டியுள்ளான்.

 
የይዘት ትርጉም አንቀጽ: (25) ምዕራፍ: አል-በቀራህ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት