የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም አንቀጽ: (265) ምዕራፍ: ሱረቱ አል-በቀራህ
وَمَثَلُ الَّذِیْنَ یُنْفِقُوْنَ اَمْوَالَهُمُ ابْتِغَآءَ مَرْضَاتِ اللّٰهِ وَتَثْبِیْتًا مِّنْ اَنْفُسِهِمْ كَمَثَلِ جَنَّةٍ بِرَبْوَةٍ اَصَابَهَا وَابِلٌ فَاٰتَتْ اُكُلَهَا ضِعْفَیْنِ ۚ— فَاِنْ لَّمْ یُصِبْهَا وَابِلٌ فَطَلٌّ ؕ— وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
2.265. அல்லாஹ்வின் திருப்தியை நாடியும் அவனுடைய வாக்குறுதியின் மீது திருப்தியடைந்தவர்களாகவும் வெறுப்பின்றி தங்கள் செல்வங்களை செலவு செய்பவர்களுக்கு உதாரணம் உயரமான வளமுள்ள இடத்தில் இருக்கும் தோட்டத்தைப் போன்றதாகும். அது நல்ல மழையைப் பெற்றதால் பலமடங்கு விளைச்சலைத் தந்தது. அது வளமான நிலம் என்பதால் நல்ல மழையைப் பெறாவிட்டாலும் அங்கு பெய்யக்கூடிய சிறுதூறலே அதற்குப் போதுமானதாகும். இவ்வாறே அல்லாஹ்வின் திருப்திக்காக மட்டும் செலவு செய்பவர்களின் தர்மங்களை அவன் ஏற்றுக்கொள்கிறான். அது குறைவாக இருந்தாலும் அதற்கு பன்மடங்கு கூலி வழங்குகிறான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். உளத்தூய்மையுடையவர்கள் முகஸ்துதியுடையோர் ஆகிய எவரது நிலமையும் அவனைவிட்டு மறைவாக இல்லை. ஒவ்வொருவருக்கும் உரிய கூலியை அவன் வழங்கிடுவான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• المؤمنون بالله تعالى حقًّا واثقون من وعد الله وثوابه، فهم ينفقون أموالهم ويبذلون بلا خوف ولا حزن ولا التفات إلى وساوس الشيطان كالتخويف بالفقر والحاجة.
1. அல்லாஹ்வின்மீது உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ் அளித்த வாக்குறுதியையும் நன்மையையும் உறுதியாக நம்புபவார்கள். அவர்கள் அச்சமோ கவலையோ இன்றி தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்கள். ஏழ்மை மற்றும் தேவை போன்றவற்றைக் கொண்டு அச்சமூட்டும் சைதானின் ஊசலாட்டங்களுக்கு அவர்கள் இடமளிக்கவும்மாட்டார்கள்.

• الإخلاص من أعظم ما يبارك الأعمال ويُنمِّيها.
2. நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வுக்காக மட்டும் செலவுசெய்தால் அவர்கள் செலவுசெய்தவற்றில் அவன் பரக்கத் செய்கிறான். இது அவனுடைய அருளில் உள்ளவையாகும்.

• أعظم الناس خسارة من يرائي بعمله الناس؛ لأنه ليس له من ثواب على عمله إلا مدحهم وثناؤهم.
3. தனது செயல்களை மக்களுக்குக் காட்டுவதற்காகச் செய்பவனே மிகப்பெரும் இழப்புக்குரியவர்கள். ஏனெனில் மனிதர்களது புகழைத் தவிர வேறு எந்த விதமான கூலியும் அவர்களது செயல்களுக்குக் கிடையாது.

 
የይዘት ትርጉም አንቀጽ: (265) ምዕራፍ: ሱረቱ አል-በቀራህ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - የትርጉሞች ማዉጫ

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

መዝጋት