Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም አንቀጽ: (273) ምዕራፍ: አል-በቀራህ
لِلْفُقَرَآءِ الَّذِیْنَ اُحْصِرُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ لَا یَسْتَطِیْعُوْنَ ضَرْبًا فِی الْاَرْضِ ؗ— یَحْسَبُهُمُ الْجَاهِلُ اَغْنِیَآءَ مِنَ التَّعَفُّفِ ۚ— تَعْرِفُهُمْ بِسِیْمٰىهُمْ ۚ— لَا یَسْـَٔلُوْنَ النَّاسَ اِلْحَافًا ؕ— وَمَا تُنْفِقُوْا مِنْ خَیْرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِیْمٌ ۟۠
2.273. அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் (போர்) செய்வதனால் வாழ்வாதாரம் தேடுவதற்கு பயணம் மேற்கொள்ளமுடியாத ஏழைகளுக்குச் செலவுசெய்யுங்கள். அவர்கள் மக்களிடம் கையேந்தாமல் தன்மானத்தோடு இருப்பதால் அறியாதவன் அவர்களை செல்வந்தர்கள் என்று எண்ணிவிடுவான். அவர்களது உடலிலும் உடையிலும் தென்படும் வெளிப்புற அடையாளங்களைக் கொண்டு அவர்களைக் காண்பவர் அறிந்துகொள்ளலாம். அவர்கள் மற்ற ஏழைகளைப்போல மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். செல்வம் மற்றும் அது அல்லாத எதை நீங்கள் செலவுசெய்தாலும் அல்லாஹ் அதனை நன்கறிந்தவன். அதற்காக அவன் உங்களுக்குப் பெரும் கூலியை வழங்கிடுவான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• إذا أخلص المؤمن في نفقاته وصدقاته فلا حرج عليه في إظهارها وإخفائها بحسب المصلحة، وإن كان الإخفاء أعظم أجرًا وثوابًا لأنها أقرب للإخلاص.
1. நம்பிக்கையாளன் தான் செய்யும் தர்மங்களை அல்லாஹ்வுக்காக மட்டுமே ஆக்கிக் கொண்டால் பொதுநலவைக்கருத்திற்கொண்டு அவற்றை வெளிப்படையாகச் செய்வதிலோ மறைமுகமாகச் செய்வதிலோ எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆயினும் தர்மங்களை மறைவாகச் செய்வது அதிக நன்மையையும் கூலியையும் பெற்றுத்தரக்கூடிய ஒன்றாகும். ஏனெனில் அதுவே மனத்தூய்மைக்கு நெருக்கமானதாகும்.

• دعوة المؤمنين إلى الالتفات والعناية بالمحتاجين الذين تمنعهم العفة من إظهار حالهم وسؤال الناس.
2. தன்மானத்தால் மக்களிடம் கையேந்தாமல் தவிர்ந்திருக்கும் ஏழைகளின்பக்கம் கவனம் செலுத்தும்படி நம்பிக்கையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

• مشروعية الإنفاق في سبيل الله تعالى في كل وقت وحين، وعظم ثوابها، حيث وعد تعالى عليها بعظيم الأجر في الدنيا والآخرة.
3. அனைத்து நிலமைகளிலும் அல்லாஹ்வின் பாதையில் செலவளிப்பது அனுமதிக்கப்பட்டதாகும். அதற்கு இவ்வுலகிலும் மறுமையிலும் மிகப்பெரும் நன்மைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான்.

 
የይዘት ትርጉም አንቀጽ: (273) ምዕራፍ: አል-በቀራህ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት