የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ

external-link copy
51 : 29

اَوَلَمْ یَكْفِهِمْ اَنَّاۤ اَنْزَلْنَا عَلَیْكَ الْكِتٰبَ یُتْلٰی عَلَیْهِمْ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَرَحْمَةً وَّذِكْرٰی لِقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟۠

29.51. -தூதரே!- அவர்களிடம் ஓதிக்காட்டப்படக்கூடிய குர்ஆனை நாம் உம்மீது இறக்கியிருப்பது அற்புதங்களைக் கோருவோருக்கு போதுமானதில்லையா? நிச்சயமாக அவர்கள் மீது இறக்கப்பட்ட குர்ஆன் நம்பிக்கைகொள்ளும் மக்களுக்கு அருளாகவும் அறிவுரையாகவும் இருக்கின்றது. அவர்கள்தாம் அதிலுள்ளதன் மூலம் பயனடைவார்கள். முன்னைய தூதர்கள் மீது இறக்கப்பட்டது போன்ற அவர்கள் கோரும் அற்புதங்களை விட அவர்கள் மீது இறக்கப்பட்டது சிறந்ததாகும். info
التفاسير:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• مجادلة أهل الكتاب تكون بالتي هي أحسن.
1. வேதக்காரர்களுடன் அழகிய முறையில் விவாதம் புரியவேண்டும். info

• الإيمان بجميع الرسل والكتب دون تفريق شرط لصحة الإيمان.
2. தூதர்கள் அனைவரின் மீதும், அவர்கள் கொண்டுவந்த வேதங்கள் அனைத்தின் மீதும் பாகுபாடின்றி நம்பிக்கைகொள்வது ஈமான் செல்லுபடியாவதற்கான ஒரு நிபந்தனையாகும். info

• القرآن الكريم الآية الخالدة والحجة الدائمة على صدق النبي صلى الله عليه وسلم.
3. புனித குர்ஆன் நபியவர்களின் உண்மைத் தன்மைக்கான நிரந்தரமான சான்றாகும். info