Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም ምዕራፍ: ኣሊ-ኢምራን   አንቀጽ:
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ اُوْتُوْا نَصِیْبًا مِّنَ الْكِتٰبِ یُدْعَوْنَ اِلٰی كِتٰبِ اللّٰهِ لِیَحْكُمَ بَیْنَهُمْ ثُمَّ یَتَوَلّٰی فَرِیْقٌ مِّنْهُمْ وَهُمْ مُّعْرِضُوْنَ ۟
3.23. தூதரே! தவ்ராத்தில் உமது நபித்துவத்தைக் குறித்த அறிவு வழங்கப்பட்ட யூதர்களின் நிலையை நீர் பார்க்கவில்லையா? அவர்கள் கருத்துவேறுபட்டுள்ளவற்றில் தீர்வு வழங்கப்படுவதற்காக அல்லாஹ்வின் வேதமான தவ்ராத்தின் பக்கம் அழைக்கப்படுகிறார்கள். ஆயினும் அவர்களிலுள்ள அறிஞர்களிலும் தலைவர்களிலும் ஒரு பிரிவினர் அது தங்களின் மனஇச்சையுடன் ஒத்துப்போகவில்லை என்பதற்காக அதன் தீர்ப்பைப் புறக்கணித்துவிடுகிறார்கள். தவ்ராத்தைப் பின்பற்றுவதாகக் கருதிக்கொள்ளும் அவர்கள், தீர்வு வழங்கப்படுவதற்காக அதன் பக்கம் அழைக்கப்பட்டால் அவர்கள் விரைந்து வரக்கூடியவர்களாகவல்லவா இருக்க வேண்டும்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ذٰلِكَ بِاَنَّهُمْ قَالُوْا لَنْ تَمَسَّنَا النَّارُ اِلَّاۤ اَیَّامًا مَّعْدُوْدٰتٍ ۪— وَّغَرَّهُمْ فِیْ دِیْنِهِمْ مَّا كَانُوْا یَفْتَرُوْنَ ۟
3.24. அவர்களின் இந்தப் புறக்கணிப்பிற்கான காரணம், மறுமைநாளில் குறைவான நாட்களே அன்றி நரக நெருப்பு தங்களைத் தீண்டாது. பின்னர் சொர்க்கத்தில் தாங்கள் நுழைந்துவிடலாம் என்று அவர்கள் எண்ணி வந்ததேயாகும். அல்லாஹ்வின்மீது பொய்யாக கூறிவந்த அவர்களின் இந்த எண்ணம்தான் அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திவிட்டது. அதனால் அல்லாஹ்வின் மீதும் அவனது மார்க்கத்தின் மீதும் துணிவுகொண்டனர்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
فَكَیْفَ اِذَا جَمَعْنٰهُمْ لِیَوْمٍ لَّا رَیْبَ فِیْهِ ۫— وَوُفِّیَتْ كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟
3.25. சந்தேகமின்றி வரக்கூடிய ஒருநாளில் விசாரணை செய்வதற்காக அவர்கள் அனைவரையும் ஒன்றுசேர்க்கும்போது அவர்களின் நிலமையும் கைசேதமும் எவ்வாறு இருக்கும்? மிக மோசமானதாகவல்லவா இருக்கும். அங்கு ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்தவற்றுக்கேற்ப கூலி வழங்கப்படும். நன்மைகள் குறைக்கப்பட்டோ தீமைகள் அதிகரிக்கப்பட்டோ அவர்கள்மீது அநீதி இழைக்கப்படாது.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِی الْمُلْكَ مَنْ تَشَآءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ ؗ— وَتُعِزُّ مَنْ تَشَآءُ وَتُذِلُّ مَنْ تَشَآءُ ؕ— بِیَدِكَ الْخَیْرُ ؕ— اِنَّكَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
3.26. தூதரே! உம் இறைவனைப் புகழ்ந்தவாறும் கண்ணியப்படுத்தியவாறும் நீர் கூறுவீராக: “இவ்வுலகிலும் மறுவுலகிலும் நீதான் ஆட்சியதிகாரத்திற்கு அதிபதியாக இருக்கின்றாய். உன் படைப்புகளில் நீ நாடியவர்களுக்கு ஆட்சியதிகாரத்தை வழங்குகின்றாய். நீ நாடியவர்களிடமிருந்து அதனைப் பறித்து விடுகின்றாய். அவர்களில் நீ நாடியவர்களை கண்ணியப்படுத்துகின்றாய். நீ நாடியவர்களை இழிவுபடுத்துகின்றாய். இவையனைத்திலும் உன்னுடைய ஞானமும் நீதியும் அடங்கியுள்ளது. உன் கைவசம்தான் நன்மைகள் அனைத்தும் உள்ளன. நீ எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாவாய்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
تُوْلِجُ الَّیْلَ فِی النَّهَارِ وَتُوْلِجُ النَّهَارَ فِی الَّیْلِ ؗ— وَتُخْرِجُ الْحَیَّ مِنَ الْمَیِّتِ وَتُخْرِجُ الْمَیِّتَ مِنَ الْحَیِّ ؗ— وَتَرْزُقُ مَنْ تَشَآءُ بِغَیْرِ حِسَابٍ ۟
3.27. உன்னுடைய ஆற்றலின் வெளிப்பாடு, நீ பகலில் இரவைப் புகுத்துகின்றாய். எனவே பகலின் நேரம் அதிகமாகிவிடுகிறது. இரவில் பகலைப் புகுத்துகின்றாய். எனவே இரவின் நேரம் அதிகமாகிவிடுகிறது. நீ இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகிறாய். (உதாரணமாக விதையிலிருந்து செடி வெளிப்படுகிறது, நிராகரிப்பாளன் நம்பிக்கையாளனைப் பெற்றெடுக்கிறான்) உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றை வெளிப்படுத்துகிறாய். (உதாரணமாக நம்பிக்கையாளன் நிராகரிப்பாளனைப் பெற்றெடுக்கிறான். முட்டையிலிருந்து கோழி வருகிறது.) நீ நாடியவர்களுக்கு கணக்கின்றி தாராளமாக வழங்குகின்றாய்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
لَا یَتَّخِذِ الْمُؤْمِنُوْنَ الْكٰفِرِیْنَ اَوْلِیَآءَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِیْنَ ۚ— وَمَنْ یَّفْعَلْ ذٰلِكَ فَلَیْسَ مِنَ اللّٰهِ فِیْ شَیْءٍ اِلَّاۤ اَنْ تَتَّقُوْا مِنْهُمْ تُقٰىةً ؕ— وَیُحَذِّرُكُمُ اللّٰهُ نَفْسَهٗ ؕ— وَاِلَی اللّٰهِ الْمَصِیْرُ ۟
3.28. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டவர்களே! நீங்கள் நம்பிக்கையாளர்களை விடுத்து அவனை நிராகரித்தவர்களை நேசர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். யார் இவ்வாறு செய்வாரோ அவர் அல்லாஹ்விடமிருந்து நீங்கிவிட்டார். அல்லாஹ்வும் அவரைவிட்டு நீங்கிவிட்டான். ஆயினும் அவர்களின் ஆட்சியதிகாரத்தில் நீங்கள் இருந்து, அதனால் உங்கள் உயிருக்குப் பாதிப்பு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவர்களின் தீங்குகளிலிருந்து தப்பிப்பதற்காக பகைமையை மறைத்து,மென்மையான பேச்சையும், பணிவான நடத்தையையும் வெளிப்படுத்துவதில் உங்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் தன்னைக் கொண்டு உங்களை எச்சரிக்கிறான். எனவே அவனுக்குப் பயந்துகொள்ளுங்கள். பாவங்களில் உழன்று அவனுடைய கோபத்திற்கு ஆளாகிவிடாதீர்கள். அடியார்கள் அனைவரும் தமது செயல்களுக்கேற்ப கூலியைப் பெறுவதற்காக மறுமைநாளில் அவன் பக்கமே திரும்ப வேண்டும்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
قُلْ اِنْ تُخْفُوْا مَا فِیْ صُدُوْرِكُمْ اَوْ تُبْدُوْهُ یَعْلَمْهُ اللّٰهُ ؕ— وَیَعْلَمُ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ— وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
3.29. தூதரே! நீர் கூறுவீராக: “நிராகரிப்பாளர்களை நேசம் கொள்வது போன்ற அல்லாஹ் தடுத்தவற்றை உங்கள் உள்ளங்களில் மறைத்தாலும் அல்லது அதனை வெளிப்படுத்தினாலும் அல்லாஹ் அதனை அறிவான். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவன் வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றை அறிகிறான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின்மீதும் பேராற்றலுடையவன். எதுவும் அவனைவிட்டுத் தப்ப முடியாது.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• أن التوفيق والهداية من الله تعالى، والعلم - وإن كثر وبلغ صاحبه أعلى المراتب - إن لم يصاحبه توفيق الله لم ينتفع به المرء.
1. பாக்கியமும் நேர்வழியும் அல்லாஹ்விடமிருந்தே கிடைப்பதாகும். மனிதன் கல்வியில் எவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்துவிட்டாலும் அல்லாஹ்வின் அருள் இல்லையெனில் அவனால் அதிலிருந்து பயனடைய முடியாது.

• أن الملك لله تعالى، فهو المعطي المانع، المعز المذل، بيده الخير كله، وإليه يرجع الأمر كله، فلا يُسأل أحد سواه.
2. ஆட்சியதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வின் கைவசமே உள்ளது. அவன்தான் கொடுக்கக்கூடியவன், தடுக்கக்கூடியவன், கண்ணியமளிப்பவன், இழிவுபடுத்துபவன். அவன் கைவசமே நன்மைகள் அனைத்தும் உள்ளன. அனைத்தும் அவன் பக்கமே திரும்புகின்றன. அவனைத்தவிர யாரிடமும் கேட்கப்படக்கூடாது.

• خطورة تولي الكافرين، حيث توعَّد الله فاعله بالبراءة منه وبالحساب يوم القيامة.
3. நம்பிக்கையாளர்கள் நிராகரிப்பாளர்களை நேசர்களாக ஆக்கிக் கொள்வது பாரதூரமான தவறாகும். அவ்வாறு நேசம் கொள்வோரை விட்டு அல்லாஹ் விலகிக்கொள்வதாகவும் மறுமையில் கடுமையான விசாரணை செய்வதாகவும் அல்லாஹ் எச்சரித்துள்ளான்.

 
የይዘት ትርጉም ምዕራፍ: ኣሊ-ኢምራን
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት