Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም ምዕራፍ: አር ሩም   አንቀጽ:

அர்ரூம்

ከመዕራፉ ዓላማዎች:
تأكيد تفرّد الله سبحانه بتصريف الأمور، وبيان سنن الله في خلقه.
காரியங்களை நடைபெறச்செய்வது அல்லாஹ் மாத்திரமே என்பதை உறுதிப்படுத்தலும் அவனது படைப்பினங்களில் காணப்படும் அவனது வழிமுறைகளைத் தெளிவுபடுத்தலும்

الٓمّٓ ۟ۚ
30.1. (الٓـمٓ) இது, இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
غُلِبَتِ الرُّوْمُ ۟ۙ
30.2. பாரசீகர்கள் ரோமானியர்களை வென்றுவிட்டார்கள்,
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
فِیْۤ اَدْنَی الْاَرْضِ وَهُمْ مِّنْ بَعْدِ غَلَبِهِمْ سَیَغْلِبُوْنَ ۟ۙ
30.3. ஷாம் தேசத்தின் பாரசீகத்திற்கு நெருக்கமான பிரதேசத்தில். ரோமானியர்கள் பாரசீகர்களால் தோற்கடிக்கப்பட்ட பிறகு விரைவில் வெற்றி பெறுவார்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
فِیْ بِضْعِ سِنِیْنَ ؕ۬— لِلّٰهِ الْاَمْرُ مِنْ قَبْلُ وَمِنْ بَعْدُ ؕ— وَیَوْمَىِٕذٍ یَّفْرَحُ الْمُؤْمِنُوْنَ ۟ۙ
30.4. அதன் காலம் மூன்று ஆண்டுகளை விட குறையவும் மாட்டாது, பத்து ஆண்டுகளை விட அதிகரிக்கவும் மாட்டாது. ரோமானியர்கள் வெற்றி பெறுவதற்கு முன்னரும் பின்னரும் அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. ரோமானியர்கள் பாரசீகர்களை வெல்லும் நாளில் நம்பிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
بِنَصْرِ اللّٰهِ ؕ— یَنْصُرُ مَنْ یَّشَآءُ ؕ— وَهُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟ۙ
30.5. அல்லாஹ்வின் உதவி ரோமானியர்களுக்குக் கிடைப்பதால் நம்பிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள். ஏனெனில் ரோமானியர்கள் வேதக்காரர்களாவர். அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு நாடியோருக்கெதிராக உதவுகிறான். அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. நம்பிக்கைகொண்ட தன் அடியார்களோடு அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• لجوء المشركين إلى الله في الشدة ونسيانهم لأصنامهم، وإشراكهم به في الرخاء؛ دليل على تخبطهم.
1. இணைவைப்பாளர்கள் கஷ்டமான சூழ்நிலைகளில் அல்லாஹ்விடம் மட்டுமே அடைக்கலம் தேடி தமது சிலைகளை மறந்து விடுவதும் மகிழ்ச்சியான சூழ்நிலைகளில் அவனுக்கு இணைகளை ஏற்படுத்துவதும் அவர்களின் தடுமாற்றத்திற்கான ஆதாரமாகும்.

• الجهاد في سبيل الله سبب للتوفيق إلى الحق.
2. அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது செய்வது சத்தியத்தை அடைவதற்கான பாக்கியமாக இருக்கின்றது.

• إخبار القرآن بالغيبيات دليل على أنه من عند الله.
3. மறைவானவற்றை குர்ஆன் அறிவிப்பது அது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது என்பதற்கான ஆதாரமாகும்.

 
የይዘት ትርጉም ምዕራፍ: አር ሩም
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት