የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም አንቀጽ: (17) ምዕራፍ: ሱረቱ አን-ኒሳዕ
اِنَّمَا التَّوْبَةُ عَلَی اللّٰهِ لِلَّذِیْنَ یَعْمَلُوْنَ السُّوْٓءَ بِجَهَالَةٍ ثُمَّ یَتُوْبُوْنَ مِنْ قَرِیْبٍ فَاُولٰٓىِٕكَ یَتُوْبُ اللّٰهُ عَلَیْهِمْ ؕ— وَكَانَ اللّٰهُ عَلِیْمًا حَكِیْمًا ۟
4.17. பாவங்கள் ஏற்படுத்தும் விளைவுகளை அறியாமல் பாவங்களில் ஈடுபட்டு - மனிதன் அறிந்தோ அறியாமலோ செய்யும் பாவங்கள் அனைத்தும் இந்த வகையைச் சார்ந்ததுதான் - பின்னர் தங்கள் இறைவனிடம் மரணவேளை வருவதற்கு முன்னரே திரும்பிவிடுபவர்களது பாவமன்னிப்புக் கோரிக்கையைத்தான் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான். இவர்களின் குற்றங்குறைகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவான். அல்லாஹ் தன் படைப்பினங்களின் நிலைகளைக் குறித்து நன்கறிந்தவன். தனது நிர்ணயத்தில், சட்டங்களில் ஞானம்மிக்கவன்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• ارتكاب فاحشة الزنى من أكثر المعاصي خطرًا على الفرد والمجتمع؛ ولهذا جاءت العقوبات عليها شديدة.
1. விபச்சாரம் தனிமனிதன்மீதும் சமூகத்தின்மீதும் கடுமையான பாதிப்புகளை உண்டாக்கக்கூடிய பாவங்களில் ஒன்றாகும். எனவேதான் அதற்கான தண்டனையும் கடுமையாக இருக்கின்றது.

• لطف الله ورحمته بعباده حيث فتح باب التوبة لكل مذنب، ويسر له أسبابها، وأعانه على سلوك سبيلها.
2. அல்லாஹ் தன் அடியார்களுக்காக பாவமன்னிப்பின் வாசலை திறந்தே வைத்துள்ளான். அதனுடைய காரணிகளையும் இலகுபடுத்தியுள்ளான். அந்த வழியில் செல்வதற்கு உதவியும் புரிந்துள்ளான். இது அல்லாஹ் தன் அடியார்கள்மீது பொழிந்த பெருங்கருணையாகும்.

• كل من عصى الله تعالى بعمد أو بغير عمد فهو جاهل بقدر من عصاه جل وعلا، وجاهل بآثار المعاصي وشؤمها عليه.
3. வேண்டுமென்றோ தற்செயலாகவோ பாவங்களில் ஈடுபடும் அனைவரும் தான் மாறுசெய்துகொண்டிருக்கும் அல்லாஹ்வின் தகுதியையும் பாவங்கள் ஏற்படுத்தும் விளைவுகளையும் அறியாதவரே.

• من أسباب استمرار الحياة الزوجية أن يكون نظر الزوج متوازنًا، فلا يحصر نظره فيما يكره، بل ينظر أيضا إلى ما فيه من خير، وقد يجعل الله فيه خيرًا كثيرًا.
4. மணவாழ்க்கை உறுதியாக நிலைத்திருக்க கணவன் சமநிலைப் பார்வையுடையவனாக இருக்கவேண்டும். அவன் தான் வெறுக்கும் விஷயத்தை மாத்திரம் கவனிக்காது. மனைவியின் நல்லவிடயங்களையும் கவனத்தில்கொள்ள வேண்டும். சிலவேளை அல்லாஹ் அதில் ஏராளமான நன்மைகளை வைத்திருக்கலாம்.

 
የይዘት ትርጉም አንቀጽ: (17) ምዕራፍ: ሱረቱ አን-ኒሳዕ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - የትርጉሞች ማዉጫ

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

መዝጋት