Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም አንቀጽ: (6) ምዕራፍ: አን-ኒሳዕ
وَابْتَلُوا الْیَتٰمٰی حَتّٰۤی اِذَا بَلَغُوا النِّكَاحَ ۚ— فَاِنْ اٰنَسْتُمْ مِّنْهُمْ رُشْدًا فَادْفَعُوْۤا اِلَیْهِمْ اَمْوَالَهُمْ ۚ— وَلَا تَاْكُلُوْهَاۤ اِسْرَافًا وَّبِدَارًا اَنْ یَّكْبَرُوْا ؕ— وَمَنْ كَانَ غَنِیًّا فَلْیَسْتَعْفِفْ ۚ— وَمَنْ كَانَ فَقِیْرًا فَلْیَاْكُلْ بِالْمَعْرُوْفِ ؕ— فَاِذَا دَفَعْتُمْ اِلَیْهِمْ اَمْوَالَهُمْ فَاَشْهِدُوْا عَلَیْهِمْ ؕ— وَكَفٰی بِاللّٰهِ حَسِیْبًا ۟
4.6. பொறுப்பாளர்களே! அவர்கள் பருவ வயதை அடைந்துவிட்டால் அவர்களின் செல்வங்களிலிருந்து சிறிது வழங்கி அவர்களை சோதித்துப் பாருங்கள். அவர்கள் அதனை நல்லமுறையில் கையாண்டால், நீங்கள் அவர்களிடம் பக்குவத்தைக் கண்டால் அவர்களின் செல்வங்களை முழுமையாக அவர்களிடம் வழங்கிவிடுங்கள். உங்களுக்கு தேவை ஏற்பட்டால் அல்லாஹ் எடுத்துக்கொள்ள அனுமதித்த அளவை மீறி அவர்களின் செல்வங்களிலிருந்து உண்டுவிடாதீர்கள். அவர்கள் பருவ வயதை அடைந்து சொத்துக்களை எடுத்துக்கொள்வார்கள் என்ற பயத்தால் அவசர அவசரமாக விழுங்கிவிடாதீர்கள்.போதுமான அளவு செல்வத்தைப் பெற்றிருப்பவர் அவர்களின் செல்வங்களை எடுக்காது தவிர்ந்துகொள்ளட்டும். உங்களில் ஏழ்மைநிலையில் இருப்பவர் தேவைக்கேற்ப அவர்களின் செல்வங்களிலிருந்து உண்டுகொள்ளட்டும். அவர்கள் பருவ வயதை அடைந்து பக்குவத்தையும் பெற்ற பின் அவர்களின் செல்வத்தை அவர்களின் வசம் ஒப்படைக்கும்போது உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டும் கருத்து வேறுபாடுகளைக் களையும் பொருட்டும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லாஹ்வே இதற்கு சாட்சியாளனாக இருப்பதற்கும் அடியார்களின் செயல்களுக்குக் கணக்குத் தீர்ப்பதற்கும் போதுமானவன்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• الأصل الذي يرجع إليه البشر واحد، فالواجب عليهم أن يتقوا ربهم الذي خلقهم، وأن يرحم بعضهم بعضًا.
1. மனித இனத்தின் மூலம் ஒருவர்தான். எனவே அவர்கள் தங்களைப் படைத்த இறைவனான அல்லாஹ்வை அஞ்ச வேண்டும். ஒருவருக்கொருவர் கருணையோடு நடந்துகொள்ள வேண்டும்.

• أوصى الله تعالى بالإحسان إلى الضعفة من النساء واليتامى، بأن تكون المعاملة معهم بين العدل والفضل.
2. பலவீனமான பெண்கள், அநாதைகள் விஷயத்தில் நியாயமாகவும் நல்லமுறையிலும் நடந்துகொள்ளும்படி அல்லாஹ் அறிவுறுத்துகிறான்.

• جواز تعدد الزوجات إلى أربع نساء، بشرط العدل بينهن، والقدرة على القيام بما يجب لهن.
3. ஒரு ஆண் நான்கு பெண்கள்வரை மணமுடித்துக் கொள்ளலாம். ஆனால் அவன் அவர்களிடையே நியாயமாக நடந்துகொள்பவனாகவும் அவர்களைப் பராமரிக்கும் அளவு சக்தியுடையவனாகவும் இருக்க வேண்டும்.

• مشروعية الحَجْر على السفيه الذي لا يحسن التصرف، لمصلحته، وحفظًا للمال الذي تقوم به مصالح الدنيا من الضياع.
4. செல்வங்களைப் பராமரிக்கத் தெரியாதவரின் நலனை கருத்தில்கொண்டும் உலக நலவுகள் நிறைவேறுவதற்குத் தேவையான பணம் வீணாகுவதைத் தடுக்கும் பொருட்டும் அவர் மீது பணத்தைக் கையாள்வதற்குத் தடை விதிப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது.

 
የይዘት ትርጉም አንቀጽ: (6) ምዕራፍ: አን-ኒሳዕ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት