የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ

external-link copy
65 : 4

فَلَا وَرَبِّكَ لَا یُؤْمِنُوْنَ حَتّٰی یُحَكِّمُوْكَ فِیْمَا شَجَرَ بَیْنَهُمْ ثُمَّ لَا یَجِدُوْا فِیْۤ اَنْفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَیْتَ وَیُسَلِّمُوْا تَسْلِیْمًا ۟

4.65. ஆனால் உண்மையில் விடயம் நயவஞ்சகர்கள் கூறுவது போலல்ல. பின்னர் அல்லாஹ் தன்மீதே சத்தியமிட்டுக் கூறுகிறான், “அவர்கள் தங்களிடையே ஏற்படும் பிரச்சனைகளுக்கு தூதர் உயிரோடு இருக்கும்போது அவரிடமும் அவர் இறந்தபிறகு மார்க்க சட்டங்களிடமும் தீர்வு தேடி, அந்த தீர்வில் சந்தேகம்கொள்ளாமல் அதனை முழுமனதாக ஏற்றுக்கொண்டு அதற்குக் கட்டுப்படும்வரை உண்மையான நம்பிக்கையாளர்களாக ஆக மாட்டார்கள்.” info
التفاسير:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• الاحتكام إلى غير شرع الله والرضا به مناقض للإيمان بالله تعالى، ولا يكون الإيمان التام إلا بالاحتكام إلى الشرع، مع رضا القلب والتسليم الظاهر والباطن بما يحكم به الشرع.
1. அல்லாஹ்வின் சட்டங்களை விட்டுவிட்டு மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்களிடம் தீர்வுதேடி அதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வது அல்லாஹ்வின்மீது கொண்ட ஈமானை முறிக்கக்கூடியதாகும். அல்லாஹ்வின் சட்டத்தில் தீர்வுதேடி, அதன் தீர்ப்பை உளப்பூர்வமாக ஏற்று, அதற்கு முழுமையாக அடிபணிவதன் மூலமே இறைநம்பிக்கை பூரணமடைகிறது. info

• من أبرز صفات المنافقين عدم الرضا بشرع الله، وتقديم حكم الطواغيت على حكم الله تعالى.
2. அல்லாஹ்வின் சட்டங்களைக்கொண்டு திருப்தியடையாமல் அதனை விட ஷைத்தான்களின் தீர்ப்புக்கு முன்னுரிமை வழங்குவது நயவஞ்சகர்களின் பிரதான பண்புகளில் ஒன்றாகும். info

• النَّدْب إلى الإعراض عن أهل الجهل والضلالات، مع المبالغة في نصحهم وتخويفهم من الله تعالى.
3. மூடர்களுக்கும் வழிகேடர்களுக்கும் அதிகமதிகம் உபதேசம் செய்து, அல்லாஹ்வைப் பற்றி அச்சமூட்டுவதுடன் அவர்களைப் புறக்கணித்து நடக்குமாறும் வேண்டப்பட்டுள்ளது. info