የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ

external-link copy
15 : 46

وَوَصَّیْنَا الْاِنْسَانَ بِوَالِدَیْهِ اِحْسٰنًا ؕ— حَمَلَتْهُ اُمُّهٗ كُرْهًا وَّوَضَعَتْهُ كُرْهًا ؕ— وَحَمْلُهٗ وَفِصٰلُهٗ ثَلٰثُوْنَ شَهْرًا ؕ— حَتّٰۤی اِذَا بَلَغَ اَشُدَّهٗ وَبَلَغَ اَرْبَعِیْنَ سَنَةً ۙ— قَالَ رَبِّ اَوْزِعْنِیْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِیْۤ اَنْعَمْتَ عَلَیَّ وَعَلٰی وَالِدَیَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًا تَرْضٰىهُ وَاَصْلِحْ لِیْ فِیْ ذُرِّیَّتِیْ ؕۚ— اِنِّیْ تُبْتُ اِلَیْكَ وَاِنِّیْ مِنَ الْمُسْلِمِیْنَ ۟

46.15. தன் பெற்றோர் வாழும் போதும் மரணித்த பின்பும் மார்க்கத்திற்கு முரணில்லாத வகையில் அவர்களுடன் நல்ல முறையில் நடந்து அவர்களுக்கு உபகாரம் செய்யுமாறு நாம் மனிதனுக்கு கடுமையான முறையில் ஏவினோம். குறிப்பாக அவனை சிரமத்துடன் சுமந்து பெற்றெடுத்த அவனது தாயுடன். அவள் அவனை சுமந்த காலமும் பால்குடி மறக்கடிக்கும் காலமும் முப்பது மாதங்களாகும். அவன் தன்னுடைய அறிவு மற்றும் உடல் ரீதியான முழுமையான பலத்தைப் பெற நாற்பது வருடங்கள் ஆகிறது. அவன் கூறுகிறான்: “என் இறைவா! நீ என்மீதும் என் தாய், தந்தையர் மீதும் பொழிந்த அருட்கொடைகளுக்கு நான் நன்றிசெலுத்துவதற்கும் நீ விரும்பும் நற்செயல்களைச் செய்வதற்கும் எனக்கு அருள்புரிவாயாக. என்னிடமிருந்து அதனை ஏற்றுக்கொள்வாயாக! என் பிள்ளைகளைச் சீர்படுத்துவாயாக. நிச்சயமாக நான் என் பாவங்களிலிருந்து உன் பக்கம் மீண்டு விட்டேன். உனக்கு வழிப்பட்டு உனது கட்டளைகளுக்கு அடிபணிந்தவர்களில் ஒருவனாகிவிட்டேன். info
التفاسير:
በዚህ ገፅ ያሉት አንቀፆች ከሚያስተላልፉት ጠቃሚ መልዕክት መካከል:
• بيان مكانة بِرِّ الوالدين في الإسلام، بخاصة في حق الأم، والتحذير من العقوق.
1. தாய், தந்தையருடன் குறிப்பாக தாயின் உரிமைகளில் நல்ல முறையில் நடந்துகொள்வதன் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்தலும் நோவினை செய்வதை விட்டும் எச்சரித்தலும். info

• بيان خطر التوسع في ملاذّ الدنيا؛ لأنها تشغل عن الآخرة.
2. உலக இன்பங்களில் மூழ்குவதன் விபரீதத்தை விளக்குதல். ஏனெனில் அது மறுமையை விட்டும் பராமுகமாக்கிவிடும். info

• بيان الوعيد الشديد لأصحاب الكبر والفسوق.
3. கர்வம் கொள்பவர்கள் மற்றும் பாவிகளுக்கான கடுமையான எச்சரிக்கையை விளக்குதல். info