የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ

external-link copy
4 : 48

هُوَ الَّذِیْۤ اَنْزَلَ السَّكِیْنَةَ فِیْ قُلُوْبِ الْمُؤْمِنِیْنَ لِیَزْدَادُوْۤا اِیْمَانًا مَّعَ اِیْمَانِهِمْ ؕ— وَلِلّٰهِ جُنُوْدُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— وَكَانَ اللّٰهُ عَلِیْمًا حَكِیْمًا ۟ۙ

48.4. அல்லாஹ்வே நம்பிக்கையாளர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்துவதற்காக அவர்களின் உள்ளங்களில் உறுதியையும் நிம்மதியையும் இறக்கினான். வானங்கள் மற்றும் பூமியிலுள்ள படைகள் அல்லாஹ்வுக்கே உரியன. அவன் அவற்றின் மூலம் தன் அடியார்களில் தான் நாடியோரை வலுப்படுத்துகிறான். அவன் தன் அடியார்களுக்கு நன்மை தரக்கூடியவற்றை நன்கறிந்தவன். அவன் நிகழ்த்தும் உதவியில் ஞானம் மிக்கவன். info
التفاسير: |
በዚህ ገፅ ያሉት አንቀፆች ከሚያስተላልፉት ጠቃሚ መልዕክት መካከል:
• صلح الحديبية بداية فتح عظيم على الإسلام والمسلمين.
1. ஹுதைபிய்யா உடன்படிக்கை இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் மாபெரும் வெற்றியின் தொடக்கமாகும். info

• السكينة أثر من آثار الإيمان تبعث على الطمأنينة والثبات.
2. நிம்மதி என்பது அமைதியையும் உறுதியையும் ஏற்படுத்தும் ஈமானின் நல்ல விளைவுகளில் ஒன்றாகும். info

• خطر ظن السوء بالله، فإن الله يعامل الناس حسب ظنهم به سبحانه.
3. அல்லாஹ்வைக் குறித்து தீய எண்ணம் கொள்வதன் விபரீதம் தெளிவாகிறது. ஏனெனில் மனிதர்கள் தன்னை எண்ணுவதற்கேற்பவே அல்லாஹ் அவர்களுடன் நடந்துகொள்வான். info

• وجوب تعظيم وتوقير رسول الله صلى الله عليه وسلم.
4. அல்லாஹ்வின் தூதரை மதிப்பதும் கௌரவப்படுத்துவதும் கட்டாயக் கடமையாகும். info