Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም ምዕራፍ: አል-ማኢዳህ   አንቀጽ:
وَاِذَا نَادَیْتُمْ اِلَی الصَّلٰوةِ اتَّخَذُوْهَا هُزُوًا وَّلَعِبًا ؕ— ذٰلِكَ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا یَعْقِلُوْنَ ۟
5.58. இவ்வாறே, மிக முக்கியத்துவமிக்க வணக்கமான தொழுகைக்கு நீங்கள் பாங்கு சொன்னால் அவர்கள் பரிகாசம் செய்கிறார்கள். விளையாட்டில் ஈடுபடுகின்றனர். அல்லாஹ் தன்னை வணங்குவதிலும், அவன் மக்களுக்கு விதியாக்கிய சட்டதிட்டங்களின் தாப்பரியத்தையும் புரியாத கூட்டமாக அவர்கள் இருப்பதே இதற்கான காரணமாகும்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
قُلْ یٰۤاَهْلَ الْكِتٰبِ هَلْ تَنْقِمُوْنَ مِنَّاۤ اِلَّاۤ اَنْ اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ اِلَیْنَا وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلُ ۙ— وَاَنَّ اَكْثَرَكُمْ فٰسِقُوْنَ ۟
5.59. தூதரே! பரிகாசம் செய்யும் வேதக்காரர்களிடம் கூறுவீராக, “நாங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் எங்களுக்கு இறக்கியதன் மீதும் எங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது இறக்கப்பட்டதன் மீதும், உங்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்ளாமலும் கட்டளைகளைச் செயற்படுத்தாமலும் அல்லாஹ்வின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுப்பவர்கள் என்பதன் மீதும் நம்பிக்கை கொண்டதற்காகவா எங்களைக் குறைகூறுகிறீர்கள்? நீங்கள் எந்த காரணத்திற்காக எங்களைக் குறைகூறுகிறீர்களோ அது எங்களுக்குப் புகழேயன்றி இகழல்ல.”
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
قُلْ هَلْ اُنَبِّئُكُمْ بِشَرٍّ مِّنْ ذٰلِكَ مَثُوْبَةً عِنْدَ اللّٰهِ ؕ— مَنْ لَّعَنَهُ اللّٰهُ وَغَضِبَ عَلَیْهِ وَجَعَلَ مِنْهُمُ الْقِرَدَةَ وَالْخَنَازِیْرَ وَعَبَدَ الطَّاغُوْتَ ؕ— اُولٰٓىِٕكَ شَرٌّ مَّكَانًا وَّاَضَلُّ عَنْ سَوَآءِ السَّبِیْلِ ۟
5.60. தூதரே! நீர் கூறுவீராக: “இவர்களை விட குறை கூறுவதற்கு தகுதியானவர்களையும் கடுமையான வேதனைக்கு உரியவர்களையும் நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? அல்லாஹ் தனது அருளிலிருந்து தூரமாக்கி, குரங்குகளாவும் பன்றிகளாகவும் உருமாற்றிய உங்களின் முன்னோர்கள்தாம். அவர்களில் சிலரை அல்லாஹ் தாகூத்தை வணங்குபவர்களாகவும் மாற்றினான். அல்லாஹ்வைத் தவிர மனமுவந்து வணங்கப்படக்கூடியவை அனைத்தும் தாகூத்களே. இவர்கள்தாம் மறுமைநாளில் மோசமான இடத்தைப் பெற்றவர்களும் நேரான பாதையை விட்டும் மிகவும் வழிகெட்டவர்களும் ஆவார்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَاِذَا جَآءُوْكُمْ قَالُوْۤا اٰمَنَّا وَقَدْ دَّخَلُوْا بِالْكُفْرِ وَهُمْ قَدْ خَرَجُوْا بِهٖ ؕ— وَاللّٰهُ اَعْلَمُ بِمَا كَانُوْا یَكْتُمُوْنَ ۟
5.61. நம்பிக்கையாளர்களே! அவர்களிலுள்ள நயவஞ்சகர்கள் உங்களிடம் வந்தால் தமது நயவஞ்சகத்தனத்தின் காரணமாக உங்களிடம் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர். உண்மையில் அவர்கள் உங்களிடம் வந்தபோதும் உங்களைவிட்டுச் சென்றபோதும் நிராகரிப்பிலே உள்ளனர். அவர்கள் உங்களிடம் ஈமானை வெளிப்படுத்திய போதும் அவர்கள் மறைத்து வைத்திருந்த நிராகரிப்பை அல்லாஹ் நன்கறிந்தவன். அதற்கேற்ப அவன் அவர்களுக்குத் தண்டனை வழங்குவான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَتَرٰی كَثِیْرًا مِّنْهُمْ یُسَارِعُوْنَ فِی الْاِثْمِ وَالْعُدْوَانِ وَاَكْلِهِمُ السُّحْتَ ؕ— لَبِئْسَ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
5.62. தூதரே! யூதர்களிலும் நயவஞ்சகர்களிலும் பெரும்பாலானோர் பொய் கூறுதல், அநியாயம் இழைத்தல் தடுக்கப்பட்ட விதத்தில் மக்களின் சொத்துக்களை உண்ணுதல் ஆகிய செயல்களினால் மற்றவர்களின் மீது அத்துமீறல் போன்ற பெரும்பாவங்களைச் செய்வதற்கு விரைகிறார்கள். அவர்கள் செய்வது மிகவும் மோசமான செயலாகும்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
لَوْلَا یَنْهٰىهُمُ الرَّبّٰنِیُّوْنَ وَالْاَحْبَارُ عَنْ قَوْلِهِمُ الْاِثْمَ وَاَكْلِهِمُ السُّحْتَ ؕ— لَبِئْسَ مَا كَانُوْا یَصْنَعُوْنَ ۟
5.63. அவர்களின் தலைவர்களும், அறிஞர்களும், பொய், பொய்சாட்சி, மக்களின் செல்வங்களை தவறான முறையில் உண்ணுதல் ஆகிய அவர்கள் மும்முரமாகச் செய்யும் பாவங்களை விட்டும், அவர்களைத் தடுக்க வேண்டாமா? அவர்களின் தலைவர்களும், அறிஞர்களும் தீமைகளைத் தடுக்காமல் செய்துகொண்டிருப்பது மிகவும் மோசமான காரியமாகும்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَقَالَتِ الْیَهُوْدُ یَدُ اللّٰهِ مَغْلُوْلَةٌ ؕ— غُلَّتْ اَیْدِیْهِمْ وَلُعِنُوْا بِمَا قَالُوْا ۘ— بَلْ یَدٰهُ مَبْسُوْطَتٰنِ ۙ— یُنْفِقُ كَیْفَ یَشَآءُ ؕ— وَلَیَزِیْدَنَّ كَثِیْرًا مِّنْهُمْ مَّاۤ اُنْزِلَ اِلَیْكَ مِنْ رَّبِّكَ طُغْیَانًا وَّكُفْرًا ؕ— وَاَلْقَیْنَا بَیْنَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَآءَ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ ؕ— كُلَّمَاۤ اَوْقَدُوْا نَارًا لِّلْحَرْبِ اَطْفَاَهَا اللّٰهُ ۙ— وَیَسْعَوْنَ فِی الْاَرْضِ فَسَادًا ؕ— وَاللّٰهُ لَا یُحِبُّ الْمُفْسِدِیْنَ ۟
5.64. யூதர்கள் தங்களுக்கு பஞ்சமும் கஷ்டமும் ஏற்பட்டபோது, “நலவு மற்றும் நன்கொடையை விட்டும் அல்லாஹ்வின் கை தடுக்கப்பட்டுள்ளது. தன்னிடத்தில் இருப்பதை எம்மை விட்டும் அவன் தடுத்துக்கொண்டான்.” எனக் கூறினார்கள். அறிந்துகொள்ளுங்கள், அவர்களின் கைகள்தான் நற்காரியத்தையும், நன்கொடையையும் விட்டுத் தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறியதனால் அல்லாஹ்வின் அருளிலிருந்து விரட்டப்பட்டுவிட்டார்கள். அல்லாஹ்வின் கரங்கள் நலவையும் நன்கொடையையும் அள்ளிவழங்குபவை. அவன் தான் நாடியவாறு செலவு செய்கிறான். அவன் அள்ளியும் கொடுக்கிறான் குறைத்தும் கொடுக்கிறான். அவனைத் தடுப்பவரோ நிர்ப்பந்திப்பவரோ யாரும் இல்லை. தூதரே! அல்லாஹ் உம்மீது இறக்கியது யூதர்களுக்கு - அவர்களின் பொறாமையினால் - வரம்புமீறலையும் நிராகரிப்பையுமே அதிகப்படுத்தும். நாம் அவர்களிடையே பகைமையையும் குரோதத்தையும் ஏற்படுத்திவிட்டோம். அவர்கள் ஒன்றிணைந்து போருக்கான முன்னேற்பாடுகளை செய்யும் போதெல்லாம் அல்லது போர்மூட்டுவதற்கான சூழ்ச்சிகளில் ஈடுபடும் போதெல்லாம் நாம் அவர்களின் ஒன்றிணைவை சிதைத்து பலத்தைப் போக்கிவிடுகின்றோம். அவர்கள் இஸ்லாத்தை அழிப்பதற்கான பணிகளிலும் சூழ்ச்சிகளிலும் ஈடுபட்டு பூமியில் குழப்பம் விளைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டேயிருப்பார்கள். குழப்பக்காரர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• ذمُّ العالم على سكوته عن معاصي قومه وعدم بيانه لمنكراتهم وتحذيرهم منها.
1. ஒரு அறிஞன் தனது சமூகத்தில் நிலவும் பாவங்களைப் பற்றிப் பேசாமலும் அவர்களது வெறுக்கத்தக்க விடயங்களைத் தெளிவுபடுத்தாமலும் எச்சரிக்காமலும் இருப்பது கண்டிக்கப்பட்டுள்ளது.

• سوء أدب اليهود مع الله تعالى، وذلك لأنهم وصفوه سبحانه بأنه مغلول اليد، حابس للخير.
2. யூதர்கள் அல்லாஹ்வுடைய விடயத்தில் மோசமாக நடந்து கொண்டனர். அதுதான், அல்லாஹ்வை நற்காரியங்கள் செய்யாமல் தடுத்து வைத்துக் கொள்பவன் என அவர்கள் வர்ணித்தமையாகும்.

• إثبات صفة اليدين، على وجه يليق بذاته وجلاله وعظيم سلطانه.
3. அல்லாஹ்வின் தகுதிக்கும் அந்தஸ்திற்கும் அதிகாரத்திற்கும் ஏற்ற இரு கரங்கள் அவனுக்கு உள்ளன.

• الإشارة لما وقع فيه بعض طوائف اليهود من الشقاق والاختلاف والعداوة بينهم نتيجة لكفرهم وميلهم عن الحق.
4. யூதர்கள் நிராகரிப்பு மற்றும் சத்தியத்தை விட்டும் நெறிபிறழ்ந்ததனால் அவர்களில் பல்வேறு பிரிவினர்களுக்கிடையில் ஏற்பட்ட பிளவு, முரண்பாடு ஆகியவற்றைச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 
የይዘት ትርጉም ምዕራፍ: አል-ማኢዳህ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት