የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም አንቀጽ: (108) ምዕራፍ: ሱረቱ አል-ማኢዳህ
ذٰلِكَ اَدْنٰۤی اَنْ یَّاْتُوْا بِالشَّهَادَةِ عَلٰی وَجْهِهَاۤ اَوْ یَخَافُوْۤا اَنْ تُرَدَّ اَیْمَانٌ بَعْدَ اَیْمَانِهِمْ ؕ— وَاتَّقُوا اللّٰهَ وَاسْمَعُوْا ؕ— وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الْفٰسِقِیْنَ ۟۠
108. சாட்சியத்தில் சந்தேகம் ஏற்படும் போது தொழுகைக்குப் பிறகு இரு சாட்சிகளிடமும் சத்தியம் பெறுவது இருவரின் சாட்சியங்களை மறுப்பது ஆகியவையே அவ்விருவரும் மார்க்க முறைப்படி சாட்சியம் கூறுவதற்கு வழிவகுக்கும். எனவே அவர்கள் சாட்சியத்தை திரித்துவிடவோ மாற்றிவிடவோ அதில் துரோகமிழைத்துவிடவோ மாட்டார்கள். அனந்தரக்காரர்களின் சத்தியங்களினால் தங்களின் சத்தியங்கள் நிராகரிக்கப்பட்டுவிடுமோ தாங்கள் இழிவுபடுத்தப்பட்டுவிடுவோமோ என்று அவர்கள் அஞ்சுவதற்கும் இதுதான் சிறந்த வழிமுறையாகும். சாட்சியத்திலும் சத்தியத்திலும் பொய் கூறுவதையும் மோசடி செய்வதையும் தவிர்த்து அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏவப்பட்ட விஷயங்களைச் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் செவிசாய்த்துக் கேளுங்கள். தனக்குக் கட்டுப்பட மறுப்பவர்களுக்கு அல்லாஹ் நேர்வழிகாட்ட மாட்டான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• إذا ألزم العبد نفسه بطاعة الله، وأمر بالمعروف ونهى عن المنكر بحسب طاقته، فلا يضره بعد ذلك ضلال أحد، ولن يُسْأل عن غيره من الناس، وخاصة أهل الضلال منهم.
1. அடியான் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு தன்னால் இயன்றவரை நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் செயலில் ஈடுபட்டால் மற்றவர்களின் வழிகேடு அவனுக்கு எந்த தீங்கையும் அளிக்காது. அவனிடம் ஏனைய மனிதர்களைக் குறித்து குறிப்பாக வழிகேடர்களைக் குறித்து விசாரிக்கப்பட மாட்டாது.

• الترغيب في كتابة الوصية، مع صيانتها بإشهاد العدول عليها.
2. உயிலை எழுதுமாறும் அதற்கு நீதிமிக்க சாட்சிகளை ஏற்படுத்தி அதனைப் பாதுகாக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

• بيان الصورة الشرعية لسؤال الشهود عن الوصية.
3. உயிலைக் குறித்து சாட்சிகளிடம் விசாரிக்கும் முறை குறித்து மார்க்க வரையறை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

 
የይዘት ትርጉም አንቀጽ: (108) ምዕራፍ: ሱረቱ አል-ማኢዳህ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - የትርጉሞች ማዉጫ

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

መዝጋት