Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም አንቀጽ: (17) ምዕራፍ: አል-ማኢዳህ
لَقَدْ كَفَرَ الَّذِیْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ هُوَ الْمَسِیْحُ ابْنُ مَرْیَمَ ؕ— قُلْ فَمَنْ یَّمْلِكُ مِنَ اللّٰهِ شَیْـًٔا اِنْ اَرَادَ اَنْ یُّهْلِكَ الْمَسِیْحَ ابْنَ مَرْیَمَ وَاُمَّهٗ وَمَنْ فِی الْاَرْضِ جَمِیْعًا ؕ— وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا ؕ— یَخْلُقُ مَا یَشَآءُ ؕ— وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
5.17. ‘மர்யமின் மகன் ஈஸாதான் இறைவன்’ என்று கூறிய கிருஸ்தவர்கள் நிராகரித்துவிட்டார்கள். தூதரே! அவர்களிடம் நீர் கூறுவீராக: “ஈஸாவையும் அவருடைய அன்னையையும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடிவிட்டால் யாரால் அதனைத் தடுக்க முடியும்? அவனைத் தடுப்பவர் யாருமில்லை என்பதே அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை, மர்யமின் மகன் ஈஸாவும் அவரது தாய் மர்யமும் பூமியிலுள்ள அனைவரும் அல்லாஹ்வின் படைப்புகள்தாம் என்பதற்கான சான்றாகும். வானங்கள், பூமி மற்றும் அவையிரண்டிற்கும் இடையிலுள்ளவற்றின் ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் தான் நாடியதை படைக்கிறான், அவ்வாறு அவன் படைப்பதற்கு நாடியவற்றில் ஒருவரே ஈஸா (அலை) அவர்கள். அவர் அல்லாஹ்வின் தூதரும் அடியாரும் ஆவார். அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• تَرْك العمل بمواثيق الله وعهوده قد يوجب وقوع العداوة وإشاعة البغضاء والتنافر والتقاتل بين المخالفين لأمر الله تعالى.
1. அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தங்களின்படி செயல்படாமல் இருப்பது அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டவர்களிடையே பகைமையையும் வெறுப்பையும் சண்டையையும் சிலவேளை ஏற்படுத்திவிடுகின்றன.

• الرد على النصارى القائلين بأن الله تعالى تجسد في المسيح عليه السلام، وبيان كفرهم وضلال قولهم.
2. ‘ஈஸாவின் உருவில் இறைவனே இருக்கின்றான்’ என்று கூறும் கிறிஸ்தவர்களின் தீய கொள்கை மறுத்துரைக்கப்பட்டுள்ளது. அவர்களின் நிராகரிப்பும் வழிகேடும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

• من أدلة بطلان ألوهية المسيح أن الله تعالى إن أراد أن يهلك المسيح وأمه عليهما السلام وجميع أهل الأرض فلن يستطيع أحد رده، وهذا يثبت تفرده سبحانه بالأمر وأنه لا إله غيره.
3. அல்லாஹ் ஈஸாவையும் அவரது தாயாரையும் உலகிலுள்ள அனைவரையும் அழிக்க விரும்பினால் யாராலும் அதனைத் தடுக்க முடியாது என்பது ஈஸா இறைவனல்ல என்பதற்கான சான்றுகளில் ஒன்றாகும். இது அவன் தனித்தே காரியமாற்றுகிறான் என்பதையும் அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்பதையும் நிரூபிக்கின்றது.

• من أدلة بطلان ألوهية المسيح أن الله تعالى يُذَكِّر بكونه تعالى ﴿ يَخْلُقُ مَا يَشَاءُ﴾ (المائدة: 17)، فهو يخلق من الأبوين، ويخلق من أم بلا أب كعيسى عليه السلام، ويخلق من الجماد كحية موسى عليه السلام، ويخلق من رجل بلا أنثى كحواء من آدم عليهما السلام.
4. மஸீஹ் இறைவனல்ல என்பற்கான ஆதாரங்களில் ஒன்றுதான் “தான் நாடியதைப் படைப்பதாக அல்லாஹ் நினைவூட்டுவதாகும்.” அவன் தாய் தந்தையிலிருந்தும் படைப்பான். ஈஸாவைப் போன்று தந்தையின்றி தாயிலிருந்து மாத்திரமும் படைப்பான். மூஸா (அலை) அவர்களது பாம்பைப் போன்று உயிரற்ற ஜடப்பொருளிலிருந்தும் படைப்பான். ஹவ்வா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்களிலிருந்து படைத்ததைப் போன்று பெண் துணையின்றி ஆணிலிருந்து மாத்திரமும் படைப்பான்.

 
የይዘት ትርጉም አንቀጽ: (17) ምዕራፍ: አል-ማኢዳህ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት