Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም ምዕራፍ: አዝ ዛሪያት   አንቀጽ:
قَالَ فَمَا خَطْبُكُمْ اَیُّهَا الْمُرْسَلُوْنَ ۟
51.31. இப்ராஹீம் வானவர்களிடம் கேட்டார்: “உங்களின் விஷயம் என்ன? நீங்கள் என்ன நாடுகிறீர்கள்?”
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
قَالُوْۤا اِنَّاۤ اُرْسِلْنَاۤ اِلٰی قَوْمٍ مُّجْرِمِیْنَ ۟ۙ
51.32. வானவர்கள் அவரிடம் பதிலாக கூறினார்கள்: “மானக்கேடான பாவங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அநியாயக்கார சமூகத்தின்பால் நிச்சயமாக அல்லாஹ் எங்களை அனுப்பியுள்ளான்,
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
لِنُرْسِلَ عَلَیْهِمْ حِجَارَةً مِّنْ طِیْنٍ ۟ۙ
51.33. சுடப்பட்ட களிமண் கற்களை அவர்கள் மீது பொழிவதற்காக.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
مُّسَوَّمَةً عِنْدَ رَبِّكَ لِلْمُسْرِفِیْنَ ۟
51.34. -இப்ராஹீமே!- அவை உம் இறைவனிடம் அடையாளமிடப்பட்டதாகும். நிராகரிப்பிலும் பாவங்கள் புரிவதிலும் அல்லாஹ்வின் வரம்புகளை மீறி செயல்படக்கூடியவர்களின் மீது அவை பொழியப்படும்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
فَاَخْرَجْنَا مَنْ كَانَ فِیْهَا مِنَ الْمُؤْمِنِیْنَ ۟ۚ
51.35. குற்றவாளிகளுக்கு ஏற்படும் தண்டனை லூதின் சமூகத்தினர் வாழும் அந்த ஊரிலிருந்த நம்பிக்கையாளர்களை பாதிக்கக்கூடாது என்பதற்காக அவர்களை வெளியேற்றி விட்டோம்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
فَمَا وَجَدْنَا فِیْهَا غَیْرَ بَیْتٍ مِّنَ الْمُسْلِمِیْنَ ۟ۚ
51.36. நாம் அவர்களின் இந்த ஊரிலே லூத்தின் குடும்பத்தினரைத் தவிர வேறு எந்தவொரு முஸ்லிம்களின் வீட்டையும் காணவில்லை.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَتَرَكْنَا فِیْهَاۤ اٰیَةً لِّلَّذِیْنَ یَخَافُوْنَ الْعَذَابَ الْاَلِیْمَ ۟ؕ
51.37. லூத்தின் சமூகத்தினர் வாழ்ந்த அந்த ஊரில் அவர்களுக்கு வேதனை ஏற்பட்டதற்கான அடையாளங்களை விட்டுவைத்தோம். அவர்களுக்கு ஏற்பட்ட வேதனைமிக்க தண்டனையை அஞ்சுபவன் படிப்பினை பெற்று, அதிலிருந்து தப்புவதற்காக அவர்களின் செயலைப்போன்றதை அவன் செய்யக் கூடாது என்பதற்காக அவ்வாறு செய்தோம்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَفِیْ مُوْسٰۤی اِذْ اَرْسَلْنٰهُ اِلٰی فِرْعَوْنَ بِسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟
51.38. நாம் ஃபிர்அவ்னை நோக்கி தெளிவான ஆதாரங்களோடும் அற்புதங்களோடும் அனுப்பிய மூஸாவிலும் வேதனைமிக்க தண்டனையை அஞ்சக்கூடியவர்களுக்குச் சான்று இருக்கின்றது, .
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
فَتَوَلّٰی بِرُكْنِهٖ وَقَالَ سٰحِرٌ اَوْ مَجْنُوْنٌ ۟
51.39. ஃபிர்அவ்ன் தனது பலத்தையும் படையையும் நம்பி சத்தியத்தைப் புறக்கணித்தான். மூஸாவைக்குறித்து அவன் கூறினான்: “அவர் மக்களுக்கு சூனியம் செய்யும் சூனியக்காரர் அல்லது புரியாத விஷயங்களைப் பேசும் பைத்தியக்காரர்.”
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
فَاَخَذْنٰهُ وَجُنُوْدَهٗ فَنَبَذْنٰهُمْ فِی الْیَمِّ وَهُوَ مُلِیْمٌ ۟ؕ
51.40. நாம் அவனையும் அவனது படையினர் அனைவரையும் பிடித்து கடலில் வீசியெறிந்து விட்டோம். அவர்கள் மூழ்கி அழிந்தார்கள். ஃபிர்அவ்ன் பொய்ப்பிப்பு, நிச்சயமாக தானே இறைவன் என்று வாதாடி பழிப்பிற்குரியவற்றை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டிருந்தான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَفِیْ عَادٍ اِذْ اَرْسَلْنَا عَلَیْهِمُ الرِّیْحَ الْعَقِیْمَ ۟ۚ
51.41. ஹுத் உடைய சமூகமான ’ஆதி’டமும் வேதனைமிக்க தண்டனையை அஞ்சக்கூடியவர்களுக்கு சான்று இருக்கின்றது. நாம் அவர்களின்மீது மழையைச் சுமக்காத, மரங்களை சூல் கொள்ளச் செய்யாத, எவ்வித நன்மைகளுமற்ற காற்றை அனுப்பினோம்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
مَا تَذَرُ مِنْ شَیْءٍ اَتَتْ عَلَیْهِ اِلَّا جَعَلَتْهُ كَالرَّمِیْمِ ۟ؕ
51.42. அது கடந்து சென்ற உயிர்கள், செல்வங்கள் மற்றும் இன்னபிற அனைத்தையும் அடியோடு அழித்தது. அனைத்தையும் தூள்தூளாக்கிவிட்டது.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَفِیْ ثَمُوْدَ اِذْ قِیْلَ لَهُمْ تَمَتَّعُوْا حَتّٰی حِیْنٍ ۟
51.43. ஸாலிஹின் சமூகமான ஸமூதிடமும் வேதனைமிக்க தண்டனையை அஞ்சக்கூடியவர்களுக்கு சான்று இருக்கின்றது. அவர்களிடம் கூறப்பட்டது: “உங்களுக்கான தவணை நிறைவடைவதற்கு முன்னரே உங்களின் வாழ்வை அனுபவித்துக் கொள்ளுங்கள்.”
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
فَعَتَوْا عَنْ اَمْرِ رَبِّهِمْ فَاَخَذَتْهُمُ الصّٰعِقَةُ وَهُمْ یَنْظُرُوْنَ ۟
51.44. அவர்கள் தம் இறைவனின் கட்டளையை விட்டும் பெருமைகொண்டு, நம்பிக்கைகொள்ளுதல், வழிப்படுதல் ஆகியவற்றுக்கெதிராக கர்வம் கொண்டார்கள். எனவே அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போதே பேரிடி அவர்களைத் தாக்கியது. ஏனெனில் அவர்கள் வேதனை இறங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தார்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
فَمَا اسْتَطَاعُوْا مِنْ قِیَامٍ وَّمَا كَانُوْا مُنْتَصِرِیْنَ ۟ۙ
51.45. தங்கள் மீது இறங்கிய வேதனையை அவர்களால் தடுக்க முடியவில்லை. அவர்களிடம் அதனைத் தடுத்துக்கொள்வதற்கான எந்த பலமும் இல்லை.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَقَوْمَ نُوْحٍ مِّنْ قَبْلُ ؕ— اِنَّهُمْ كَانُوْا قَوْمًا فٰسِقِیْنَ ۟۠
51.46. நாம் மேற்கூறப்பட்டவர்களுக்கு முன்னால் நூஹின் சமூகத்தாரை மூழ்கடித்து அழித்துள்ளோம். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாதவர்களாக இருந்தார்கள். எனவே அவனது தண்டனைக்கு உரியவர்களாகி விட்டார்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَالسَّمَآءَ بَنَیْنٰهَا بِاَیْىدٍ وَّاِنَّا لَمُوْسِعُوْنَ ۟
51.47. நாம் வானத்தை அமைத்துள்ளோம். அதன் அமைப்பை வல்லமையால் செம்மையாக்கினோம். நிச்சயமாக நாம் அதன் ஓரங்களை விசாலமாக்கிக் கொண்டே செல்கின்றோம்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَالْاَرْضَ فَرَشْنٰهَا فَنِعْمَ الْمٰهِدُوْنَ ۟
51.48. நாம் பூமியை வசிக்கக்கூடியவர்களுக்கு ஏற்றவாறு விரிப்பைப் போன்று அமைத்துள்ளோம். அவர்கள் வசிப்பதற்கு ஏற்றவாறு விரித்து அமைப்பதில் நாமே மிகச்சிறந்தவர்களாவோம்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَمِنْ كُلِّ شَیْءٍ خَلَقْنَا زَوْجَیْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ ۟
51.49. நீங்கள் ஒவ்வொன்றையும் இணைஇணையாக படைத்த அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் உணர்ந்துகொள்ளும்பொருட்டு ஒவ்வொன்றையும் நாம் இணைஇணையாகப் படைத்துள்ளோம். உதாரணமாக, ஆண்- பெண், வானம்- பூமி, நீர்- நிலம்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
فَفِرُّوْۤا اِلَی اللّٰهِ ؕ— اِنِّیْ لَكُمْ مِّنْهُ نَذِیْرٌ مُّبِیْنٌ ۟ۚ
51.50. அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு மாறுசெய்யாமல் இருப்பதன் மூலம் அவனின் தண்டனையிலிருந்து அவனுடைய நன்மையின் பக்கமும் விரையுங்கள். -மக்களே!- நிச்சயமாக நான் உங்களை அவனுடைய வேதனையைக் குறித்து தெளிவாக எச்சரிக்கை செய்யக்கூடியவன்தான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَلَا تَجْعَلُوْا مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ ؕ— اِنِّیْ لَكُمْ مِّنْهُ نَذِیْرٌ مُّبِیْنٌ ۟
51.51. அல்லாஹ்வுடன் அவனை விடுத்து நீங்கள் வணங்கும் வேறு இறைவனை ஏற்படுத்தி விடாதீர்கள். நிச்சயமாக நான் உங்களை அதிலிருந்து தெளிவாக எச்சரிப்பவன்தான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• الإيمان أعلى درجة من الإسلام.
1. இஸ்லாத்தைவிட ஈமான் மிக உயர்ந்தது.

• إهلاك الله للأمم المكذبة درس للناس جميعًا.
2. பொய்ப்பித்த சமூகங்களை அல்லாஹ் அழித்தது மனிதர்கள் அனைவருக்குமான பாடமாகும்.

• الخوف من الله يقتضي الفرار إليه سبحانه بالعمل الصالح، وليس الفرار منه.
3. அல்லாஹ்வின் மீதுள்ள அச்சம் நற்செயல்கள் புரிந்து அவன் பக்கம் விரைந்தோடத் தூண்டுகிறது, அவனைவிட்டும் விரண்டோட அல்ல.

 
የይዘት ትርጉም ምዕራፍ: አዝ ዛሪያት
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት