Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም ምዕራፍ: አል ጁሙዓህ   አንቀጽ:

அல்ஜும்ஆ

ከመዕራፉ ዓላማዎች:
الامتنان على الأمة وتفضيلها برسولها، وبيان فضل يوم الجمعة.
இச்சமுதாயத்துக்கு அதன் தூதரின் மூலம் அருள்புரிந்து சிறப்பித்தலும், வெள்ளிக்கிழமை தினத்தின் சிறப்பையும் தெளிவுபடுத்தல்

یُسَبِّحُ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ الْمَلِكِ الْقُدُّوْسِ الْعَزِیْزِ الْحَكِیْمِ ۟
62.1. வானங்களிலும் பூமியிலும் உள்ள படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வுக்குப் பொருத்தமில்லாத குறைபாடுடைய அனைத்துப் பண்புகளைவிட்டும் அவனை தூய்மைப்படுத்துகின்றன. அவனே ஆட்சி அதிகாரத்தைக்கொண்ட தனித்த ஏக அரசன்; அனைத்துக் குறைபாடுகளை விட்டும் தூய்மையானவன்; யாவற்றையும் மிகைத்தவன்; யாராலும் அவனை மிகைக்க முடியாது. தன் படைப்பிலும், சட்டத்திலும், நிர்ணயத்திலும் ஞானம் மிக்கவன்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
هُوَ الَّذِیْ بَعَثَ فِی الْاُمِّیّٖنَ رَسُوْلًا مِّنْهُمْ یَتْلُوْا عَلَیْهِمْ اٰیٰتِهٖ وَیُزَكِّیْهِمْ وَیُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ ۗ— وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟ۙ
62.2. அவனே படிக்கவும் எழுதவும் தெரியாத அரபுக்களிடையே அவர்களின் இனத்திலிருந்தே ஒரு தூதரை அனுப்பினான். அவர் மீது அவன் இறக்கிய அவனுடைய வசனங்களை அவர்களுக்கு எடுத்துரைக்கின்றார்; அவர்களை நிராகரிப்பிலிருந்தும் தீய பண்புகளிலிருந்தும் தூய்மைப்படுத்துகின்றார்; அவர்களுக்கு குர்ஆனையும் சுன்னாவையும் கற்றுக் கொடுக்கின்றார். அவர் அவர்களின்பால் அனுப்பப்படுவதற்கு முன்னர் நிச்சயமாக அவர்கள் சிலைகளை வணங்கிக்கொண்டும் கொலை செய்துகொண்டும் உறவுகளை முறித்துக்கொண்டும் தெளிவான வழிகேட்டில் இருந்தார்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَّاٰخَرِیْنَ مِنْهُمْ لَمَّا یَلْحَقُوْا بِهِمْ ؕ— وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
62.3. மேலும் இது வரை வராத பின்னால் வர இருக்கும் மற்ற அரபுக்களுக்கும் ஏனையோருக்கும் இந்தத் தூதர் அனுப்பப்பட்டுள்ளார். அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தான் படைப்பில், சட்டங்களில், நிர்ணயத்தில் அவன் ஞானம் மிக்கவன்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ذٰلِكَ فَضْلُ اللّٰهِ یُؤْتِیْهِ مَنْ یَّشَآءُ ؕ— وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِیْمِ ۟
62.4. மேற்கூறப்பட்ட (அரபுக்களுக்கும் அவர்கள் அல்லாதவர்களுக்கும் தூதராக அனுப்பிய)து அல்லாஹ்வின் அருளாகும். அதனை அவன் தான் நாடியவர்களுக்கு வழங்குகிறான். அல்லாஹ் பெரும் உபகாரியாக இருக்கின்றான். இந்த சமூகத்தின் தூதரை மனிதர்கள் அனைவருக்கும் அவன் அனுப்பியதும் அவனது பெரும் உபகாரங்களில் உள்ளவையாகும்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
مَثَلُ الَّذِیْنَ حُمِّلُوا التَّوْرٰىةَ ثُمَّ لَمْ یَحْمِلُوْهَا كَمَثَلِ الْحِمَارِ یَحْمِلُ اَسْفَارًا ؕ— بِئْسَ مَثَلُ الْقَوْمِ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِ اللّٰهِ ؕ— وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟
62.5. தவ்ராத்தின்படி செயல்படுமாறு கட்டளையிடப்பட்டு அதன்படி செயல்படுவதை விட்டுவிட்ட யூதர்களுக்கு உதாரணம் பெரும் புத்தகங்களைச் சுமக்கும் கழுதையாகும். அது தான் சுமப்பது புத்தகங்கள்தானா? வேறேதுமா? என்பதைக்கூட அறியாது. அல்லாஹ்வின் சான்றுகளை பொய்ப்பிக்கும் மக்களுக்கு உதாரணம் மிகவும் மோசமானதாகும். அவன் அநியாயக்கார மக்களுக்கு சத்தியத்தை அடைய உதவமாட்டான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
قُلْ یٰۤاَیُّهَا الَّذِیْنَ هَادُوْۤا اِنْ زَعَمْتُمْ اَنَّكُمْ اَوْلِیَآءُ لِلّٰهِ مِنْ دُوْنِ النَّاسِ فَتَمَنَّوُا الْمَوْتَ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
62.6. -தூதரே!- நீர் கூறுவீராக: “யூத மதம் திரிபுபடுத்தப்பட்ட பின்பும் அதில் நிலைத்திருப்பவர்களே! மற்ற மக்களை விடுத்து நீங்கள்தாம் அல்லாஹ்வின் நேசர்கள் என்று நீங்கள் என்னும் வாதத்தில் உண்மையாக இருந்தால், -நீங்கள் எண்ணுவது போல்- உங்களுக்குரிய பிரத்யேக மதிப்பை அவன் சீக்கிரம் வழங்குவதற்காக மரணத்தை விரும்புங்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَلَا یَتَمَنَّوْنَهٗۤ اَبَدًا بِمَا قَدَّمَتْ اَیْدِیْهِمْ ؕ— وَاللّٰهُ عَلِیْمٌۢ بِالظّٰلِمِیْنَ ۟
62.7. அவர்கள் மரணத்தை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். மாறாக அவர்களிடம் காணப்படும் நிராகரிப்பு, பாவங்கள், அநியாயம், மற்றும் தவ்ராத்தைத் திரிபுபடுத்தல், மாற்றுதல் ஆகியவற்றினால் உலகில் நிரந்தரமாக நிலைத்திருக்க வேண்டும் என்றே விரும்புவார்கள். அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிந்தவன். அவர்கள் செய்யும் செயல்கள் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் அவற்றிற்கேற்ப அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
قُلْ اِنَّ الْمَوْتَ الَّذِیْ تَفِرُّوْنَ مِنْهُ فَاِنَّهٗ مُلٰقِیْكُمْ ثُمَّ تُرَدُّوْنَ اِلٰی عٰلِمِ الْغَیْبِ وَالشَّهَادَةِ فَیُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟۠
62.8. -தூதரே!- இந்த யூதர்களிடம் நீர் கூறுவீராக: “நிச்சயமாக நீங்கள் வெருண்டோடும் மரணம் விரைவாகவோ, தாமதமாகவோ சந்தேகம் இல்லாமல் நிச்சயமாக உங்களை வந்தடைந்தே தீரும். பின்னர் மறுமை நாளில் மறைவானதையும் வெளிப்படையானதையும் நன்கறிந்த அல்லாஹ்விடமே நீங்கள் திரும்பிச் செல்வீர்கள். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அப்போது நீங்கள் உலகில் செய்துகொண்டிருந்த செயல்களைக்குறித்து அவன் உங்களுக்கு அறிவிப்பான். அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• عظم منة النبي صلى الله عليه وسلم على البشرية عامة وعلى العرب خصوصًا، حيث كانوا في جاهلية وضياع.
1. இஸ்லாத்திற்கு முன்னர் அரபுக்கள் அறியாமையிலும் வீணானவற்றிலும் மூழ்கிக் கிடந்தார்கள்.

• الهداية فضل من الله وحده، تطلب منه وتستجلب بطاعته.
2. நபியவர்களின் தூதுத்துவம் மனிதர்கள் மற்றும் ஜின்கள் அனைவருக்கும் பொதுவானது.

• تكذيب دعوى اليهود أنهم أولياء الله؛ بتحدّيهم أن يتمنوا الموت إن كانوا صادقين في دعواهم لأن الولي يشتاق لحبيبه.
3. “உங்களின் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் மரணத்தை விரும்புங்கள்” என்ற சவாலின் மூலம் “தாமே அல்லாஹ்வின் நேசர்கள்” என்ற யூதர்களின் வாதம் பொய்யென நிரூபிக்கப்பட்டது. ஏனெனில் நிச்சயமாக நேசன் தனது நேசனை சந்திப்பதை விரும்புவான்.

 
የይዘት ትርጉም ምዕራፍ: አል ጁሙዓህ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት