Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም አንቀጽ: (146) ምዕራፍ: አል-አዕራፍ
سَاَصْرِفُ عَنْ اٰیٰتِیَ الَّذِیْنَ یَتَكَبَّرُوْنَ فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ ؕ— وَاِنْ یَّرَوْا كُلَّ اٰیَةٍ لَّا یُؤْمِنُوْا بِهَا ۚ— وَاِنْ یَّرَوْا سَبِیْلَ الرُّشْدِ لَا یَتَّخِذُوْهُ سَبِیْلًا ۚ— وَاِنْ یَّرَوْا سَبِیْلَ الْغَیِّ یَتَّخِذُوْهُ سَبِیْلًا ؕ— ذٰلِكَ بِاَنَّهُمْ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَكَانُوْا عَنْهَا غٰفِلِیْنَ ۟
7.146. அல்லாஹ்வின் அடியார்களுக்கு எதிராகவும் சத்தியத்திற்கு எதிராகவும் அநியாயமாக கர்வம் கொள்பவர்களை பிரபஞ்சத்திலும் அவர்களுக்குள்ளும் இருக்கும் என் சான்றுகளிலிருந்து படிப்பினை பெறுவதிலிருந்தும் என் வேத வசனங்களைப் புரிந்து கொள்வதிலிருந்தும் நான் திருப்பிவிடுவேன். சான்றுகள் அனைத்தையும் கண்டுவிட்டாலும் அவற்றைப் மறுப்பதனாலும் புறக்கணிப்பதனாலும் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் எதிர்ப்பதாலும் அவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள். அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத்தரும் சத்தியப் பாதையை அவர்கள் கண்டால் அதில் செல்லவோ செல்வதற்கு ஆர்வம் கொள்ளவோ மாட்டார்கள். அல்லாஹ்வின் கோபத்தைப் பெற்றுத் தரும் வழிகேட்டின் பாதையைக் கண்டால் அதில் அவர்கள் செல்கிறார்கள். தூதர்கள் கொண்டு வந்ததை உண்மையெனக்காட்டும் மகத்தான அல்லாஹ்வின் சான்றுகளை அவர்கள் மறுத்ததனாலும் அவற்றைக் குறித்து அலட்சியமாக இருந்ததனாலும் அவர்களுக்கு இந்நிலமை ஏற்பட்டது.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• على العبد أن يكون من المُظْهِرين لإحسان الله وفضله عليه، فإن الشكر مقرون بالمزيد.
1. அடியான் அவனுக்கு அல்லாஹ் செய்த உபகாரத்தையும் அருளையும் வெளிப்படுத்தக்கூடியவனாக இருக்க வேண்டும். ஏனெனில் நன்றி செலுத்துதல் மென்மேலும் அதிகரிப்பதுடன் இணைந்துள்ளது.

• على العبد الأخذ بالأحسن في الأقوال والأفعال.
2. அடியான் சொற்களிலும் செயல்களிலும் சிறந்தவற்றையே எடுத்துக்கொள்ள வேண்டும்.

• يجب تلقي الشريعة بحزم وجد وعزم على الطاعة وتنفيذ ما ورد فيها من الصلاح والإصلاح ومنع الفساد والإفساد.
3. வழிபடும் உறுதியுடன் மார்க்கத்தை கற்றுக் கொள்வது, சீர்திருந்துதல், சீர்திருத்தல், குழப்பத்தைத் தடுத்தல், குழப்பம் விளைவிப்பதைத் தடுத்தல் போன்ற ஷரீஆவில் உள்ளவற்றை நடைமுறைப்படுத்துவதும் கட்டாயமாகும்.

• على العبد إذا أخطأ أو قصَّر في حق ربه أن يعترف بعظيم الجُرْم الذي أقدم عليه، وأنه لا ملجأ من الله في إقالة عثرته إلا إليه.
4.தனது இறைவனின் உரிமையில் ஒரு அடியான் தவறிழைத்தால் அல்லது குறை செய்தால் தான் செய்த பெரும் தவறை ஏற்றுக்கொள்வதோடு தனது அத்தவறை மன்னிப்பதற்கு அல்லாஹ்வை விட்டால் வேறு புகலிடமில்லை எனவும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 
የይዘት ትርጉም አንቀጽ: (146) ምዕራፍ: አል-አዕራፍ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት