Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም አንቀጽ: (160) ምዕራፍ: አል-አዕራፍ
وَقَطَّعْنٰهُمُ اثْنَتَیْ عَشْرَةَ اَسْبَاطًا اُمَمًا ؕ— وَاَوْحَیْنَاۤ اِلٰی مُوْسٰۤی اِذِ اسْتَسْقٰىهُ قَوْمُهٗۤ اَنِ اضْرِبْ بِّعَصَاكَ الْحَجَرَ ۚ— فَانْۢبَجَسَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَیْنًا ؕ— قَدْ عَلِمَ كُلُّ اُنَاسٍ مَّشْرَبَهُمْ ؕ— وَظَلَّلْنَا عَلَیْهِمُ الْغَمَامَ وَاَنْزَلْنَا عَلَیْهِمُ الْمَنَّ وَالسَّلْوٰی ؕ— كُلُوْا مِنْ طَیِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ ؕ— وَمَا ظَلَمُوْنَا وَلٰكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟
7.160. நாம் இஸ்ராயீலின் மக்களை பன்னிரண்டு குலங்களாகப் பிரித்தோம். மூஸாவின் சமூகத்தினர் அவரிடம் தண்ணீர் வேண்டிப் பிரார்த்தியுங்கள் எனக் கேட்டுக் கொண்ட பொழுது, “மூஸாவே! உம்முடைய கைத்தடியால் பாறையை அடிப்பீராக.” என நாம் அவருக்கு வஹி அறிவித்தோம். மூஸா தடியை அடித்தார். பன்னிரண்டு குலங்களுக்கேற்ப அதிலிருந்து பன்னிரண்டு நீருற்றுகள் பொங்கி வழிந்தன. ஒவ்வொரு குலத்தாரும் தாம் அருந்தும் பகுதியை அறிந்து கொண்டனர். ஒரு குலத்தார் அருந்தவேண்டிய பகுதியில் மற்றொரு குலத்தார் அருந்தவில்லை. நாம் அவர்களுக்கு மேகங்களைக் கொண்டு நிழலிடச் செய்தோம். அவை அவர்கள் செல்லும் இடமெல்லாம் சென்றன. அவர்கள் நிற்கும் இடத்தில் நின்றன. அவர்கள் மீது எங்களுடைய அருட்கொடையான தேன் போன்ற இனிப்புப் பானத்தையும், காடை போன்ற சுவையான மாமிசத்தையுடைய சிறு பறவையையும் இறக்கினோம். நாம் அவர்களிடம் கூறினோம்: “நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையான உணவுகளை உண்ணுங்கள்.” அநியாயம், அருட்கொடைகளுக்கு நன்றி கெட்டத்தனமாக நடந்து கொள்ளுதல், அல்லாஹ்வை மதிக்க வேண்டிய முறைப்படி மதிக்காமலிருத்தல் போன்ற அவர்கள் மூலம் நிகழ்ந்தவற்றினால் நமக்கு எவ்வித குறையும் ஏற்படவில்லை. மாறாக அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறாகச் செயல்பட்டு அவனது அருட்கொடைகளுக்கு நன்றி கெட்ட முறையில் நடந்து அழிவின் காரணங்களைத் தேடிய போது தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்டார்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• الجحود والكفران سبب في الحرمان من النعم.
1. மறுத்தலும் நன்றி கெட்டத்தனமாக நடந்துகொள்ளுதலும் அருட்கொடைகள் தடையாவதற்குக் காரணமாக அமைகின்றன.

• من أسباب حلول العقاب ونزول العذاب التحايل على الشرع؛ لأنه ظلم وتجاوز لحدود الله.
2. மார்க்கத்தில் தந்திரம் செய்வது தண்டனை இறங்குவதற்கான காரணங்களில் ஒன்றாகும். ஏனெனில் அவ்வாறு செய்வது அநியாயமாகும், அல்லாஹ்வின் வரம்பை மீறுவதாகும்.

 
የይዘት ትርጉም አንቀጽ: (160) ምዕራፍ: አል-አዕራፍ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት