Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም አንቀጽ: (46) ምዕራፍ: አል-አዕራፍ
وَبَیْنَهُمَا حِجَابٌ ۚ— وَعَلَی الْاَعْرَافِ رِجَالٌ یَّعْرِفُوْنَ كُلًّا بِسِیْمٰىهُمْ ۚ— وَنَادَوْا اَصْحٰبَ الْجَنَّةِ اَنْ سَلٰمٌ عَلَیْكُمْ ۫— لَمْ یَدْخُلُوْهَا وَهُمْ یَطْمَعُوْنَ ۟
7.46. சுவனவாசிகள், நரகவாசிகள் என்ற இந்த இரு பிரிவினருக்குமிடையே அஃராஃப் என்று அழைக்கப்படும் உயரமான ஒரு தடுப்பு உண்டு. அதன் மீது நற்செயல்களும் தீயசெயல்களும் சமமான சில மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் சுவனவாசிகளை அவர்களின் பொலிவான முக அடையாளங்களைக் கொண்டும், நரகவாசிகளை அவர்களின் கருமையான முக அடையாளங்களைக் கொண்டும் அறிந்துகெள்வார்கள். இவர்கள் சுவனவாசிகளை கண்ணியப்படுத்தும் விதமாக அவர்களிடம், ‘உங்கள் மீது சாந்தி நிலவட்டும்’ என்று கூறுவார்கள். ஆனால் அஃராபில் உள்ள அவர்கள் இன்னும் சுவனத்தில் நுழையவேயில்லை. அல்லாஹ்வின் அருளினால் அதில் நுழைவதை எதிர்பார்த்த வண்ணமே இருப்பார்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• عدم الإيمان بالبعث سبب مباشر للإقبال على الشهوات.
1. மறுமை நாளின் மீது நம்பிக்கை கொள்ளாமல் இருப்பது இச்சைகளின் மீது மோகம் கொள்வதற்கான நேரடிக் காரணமாகும்.

• يتيقن الناس يوم القيامة تحقق وعد الله لأهل طاعته، وتحقق وعيده للكافرين.
2. அல்லாஹ் தன்னை வழிப்பட்டோருக்கு அளித்த வாக்குறுதியும் நிராகரிப்பாளர்களுக்கு வாக்களித்த எச்சரிக்கையும் உண்மையானதே என்பதை மக்கள் உறுதியாக மறுமை நாளில் அறிந்து கொள்வார்கள்.

• الناس يوم القيامة فريقان: فريق في الجنة وفريق في النار، وبينهما فريق في مكان وسط لتساوي حسناتهم وسيئاتهم، ومصيرهم إلى الجنة.
3. மறுமை நாளில் மனிதர்கள் சுவனவாசிகள், நரகவாசிகள் என்னும் இரு பிரிவினராக இருப்பார்கள். அவையிரண்டுக்குமிடையில் ஒரு மத்திய பகுதியில் நன்மைகளும் தீமைகளும் சமமாகிவிட்ட மூன்றாவது பிரிவினரும் இருப்பார்கள். அவர்களது முடிவு சுவர்க்கமே.

• على الذين يملكون المال والجاه وكثرة الأتباع أن يعلموا أن هذا كله لن يغني عنهم من الله شيئًا، ولن ينجيهم من عذاب الله.
4. பணம், பதவி மற்றும் தன்னைப் பின்பற்றும் பெரும் கூட்டத்தினரைப் பெற்றவர்கள், அவையனைத்தும் அல்லாஹ்விடம் எந்தப் பயனையும் அளிக்காது என்பதையும் அவை நரக வேதனையிலிருந்து அவர்களைக் காப்பாற்றாது என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும்.

 
የይዘት ትርጉም አንቀጽ: (46) ምዕራፍ: አል-አዕራፍ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት