Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም አንቀጽ: (58) ምዕራፍ: አል-አዕራፍ
وَالْبَلَدُ الطَّیِّبُ یَخْرُجُ نَبَاتُهٗ بِاِذْنِ رَبِّهٖ ۚ— وَالَّذِیْ خَبُثَ لَا یَخْرُجُ اِلَّا نَكِدًا ؕ— كَذٰلِكَ نُصَرِّفُ الْاٰیٰتِ لِقَوْمٍ یَّشْكُرُوْنَ ۟۠
7.58. நல்ல நிலம் அல்லாஹ்வின் அனுமதியுடன் நல்ல, முழுமையான விளைச்சலை வெளிப்படுத்தும். இவ்வாறே நம்பிக்கையாளன் அறிவுரையைச் செவியேற்கிறான். அதனைக் கொண்டு பயனடைகிறான், நற்செயல்கள் புரிகிறான். உவர்ப்புத் தன்மையுடைய சதுப்பு நிலம் மோசமானவற்றைத் தவிர வேறு எதையும் வெளிப்படுத்தாது. அதில் எவ்வித நலவுமில்லை. இவ்வாறே நிராகரிப்பாளன் அறிவுரைகளைக் கொண்டு பயனடைவதில்லை. அவை அவனுக்குப் பயனளிக்கும் நற்செயல்களையும் அவனிடத்தில் உருவாக்கமாட்டா. இங்கு அற்புதமான பல்வேறு விடயங்கள் குறிப்பிடப்பட்டது போன்று, உண்மையை நிரூபிப்பதற்காக அத்தாட்சிகளையும் ஆதாரங்களையும் பல்வேறு விதங்களில் அல்லாஹ்வின் அருட்கொடைகளை நிராகரிக்காமல் நன்றி செலுத்தி தமது இறைவனுக்குக் கட்டுப்படும் மக்களுக்குத் தெளிவுபடுத்துகின்றோம்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• الأرض الطيبة مثال للقلوب الطيبة حين ينزل عليها الوحي الذي هو مادة الحياة، وكما أن الغيث مادة الحياة، فإن القلوب الطيبة حين يجيئها الوحي، تقبله وتعلمه وتنبت بحسب طيب أصلها، وحسن عنصرها، والعكس.
1. நல்ல நிலம் நல்ல உள்ளங்களுக்கு உதாரணமாகும். நிலம் மழையால் உயிர் பெறுவதைப் போல வஹியால் உள்ளங்கள் உயிர்பெறுகின்றன. அவை வஹியை ஏற்றுக் கொண்டு அதனடிப்படையில் செயல்பட்டு அதன் நல்ல அடிப்படைக்கேற்ப வளர்கின்றன. அடிப்படை தீயதாக இருந்தால் அதனை ஏற்றுக்கொள்ளாது.

• الأنبياء والمرسلون يشفقون على الخلق أعظم من شفقة آبائهم وأمهاتهم.
2. தாய் தந்தையர் அன்பு செலுத்துவதைவிட இறைத்தூதர்கள் மக்களின் மீது பேரன்பு உடையவர்களாக இருக்கின்றனர்.

• من سُنَّة الله إرسال كل رسول من قومه وبلسانهم؛ تأليفًا لقلوب الذين لم تفسد فطرتهم، وتيسيرًا على البشر.
3. சிதையாத இயல்புடையயோரின் உள்ளங்களை இணைப்பதற்காகவும் மக்கள் இலகுவாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் ஒவ்வொரு தூதரையும் அவர்களின் மொழியிலேயே அவர்களிலிருந்தே அனுப்புவது அல்லாஹ்வின் வழிமுறையாகும்.

• من أعظم السفهاء من قابل الحق بالرد والإنكار، وتكبر عن الانقياد للعلماء والنصحاء، وانقاد قلبه وقالبه لكل شيطان مريد.
4. சத்தியத்தை நிராகரிப்பால் எதிர்கொள்பவர்கள், அறிஞர்களுக்கும் நலம் நாடுபவர்களுக்கும் அடிபணியாமல் கர்வம் கொண்டு உள்ளமும் உடலும் ஷைதானுக்குக் கட்டுப்பட்டவர்கள் கடைந்தெடுத்த மூடர்களாவர்.

 
የይዘት ትርጉም አንቀጽ: (58) ምዕራፍ: አል-አዕራፍ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት