Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም ምዕራፍ: አል-አንፋል   አንቀጽ:
وَاذْكُرُوْۤا اِذْ اَنْتُمْ قَلِیْلٌ مُّسْتَضْعَفُوْنَ فِی الْاَرْضِ تَخَافُوْنَ اَنْ یَّتَخَطَّفَكُمُ النَّاسُ فَاٰوٰىكُمْ وَاَیَّدَكُمْ بِنَصْرِهٖ وَرَزَقَكُمْ مِّنَ الطَّیِّبٰتِ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
8.26. -நம்பிக்கையாளர்களே!- நீங்கள் மக்காவில் குறைவான எண்ணிக்கையினராக, மக்காவாசிகள் உங்களை பலவீனர்களாகக் கருதி அடக்குமுறைக்குட்படுத்தி உங்கள் எதிரிகள் திடீரென உங்களைத் தாக்கலாம் என நீங்கள் அஞ்சுபவர்களாக இருந்த சந்தர்ப்பத்தை நினைத்துப் பாருங்கள். அப்போது அல்லாஹ் உங்களுக்கு மதீனாவில் அடைக்கலம் அளித்தான். பத்ருப் போர் போன்ற போர்களில் எதிரிகளுக்கு எதிராக உங்களுக்கு உதவி செய்து உங்களைப் பலப்படுத்தினான். தூய்மையானவற்றை உங்களுக்கு வழங்கினான். அவற்றில் நீங்கள் உங்கள் எதிரிகளிடமிருந்து கைப்பற்றிய போர்ச் செல்வங்களும் அடங்கும். அல்லாஹ் அருட்கொடைகளை உங்களுக்கு இன்னுமின்னும் அதிகரிப்பதற்காக அவைகளுக்காக அவனுக்கு நீங்கள் நன்றி செலுத்தி அவற்றுக்கு நன்றி கெட்டத்தனமாக நடக்கக் கூடாது என்பதற்காகவே மேற்கூறியவற்றை அல்லாஹ் உங்களுக்கு வழங்கினான். நன்றி கெட்டத்தனமாக நடந்துகொண்டால் உங்களுக்கு வழங்கிய அருட்கொடைகளைப் பறித்து உங்களை வேதனையில் ஆழ்த்திடுவான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَخُوْنُوا اللّٰهَ وَالرَّسُوْلَ وَتَخُوْنُوْۤا اَمٰنٰتِكُمْ وَاَنْتُمْ تَعْلَمُوْنَ ۟
8.27. அல்லாஹ்வை உண்மைப்படுத்தி அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தாமல் அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகாமல் அவனுக்கும் தூதருக்கும் துரோகமிழைத்துவிடாதீர்கள். நீங்கள் செய்வது மோசடி என்பதை அறிந்து கொண்டே உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட கடன்கள் மற்றும் ஏனையவற்றில் மோசடி செய்துவிடாதீர்கள். அவ்வாறு செய்தால் நீங்களும் மோசடிக்காரர்களாக ஆகிவிடுவீர்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَاعْلَمُوْۤا اَنَّمَاۤ اَمْوَالُكُمْ وَاَوْلَادُكُمْ فِتْنَةٌ ۙ— وَّاَنَّ اللّٰهَ عِنْدَهٗۤ اَجْرٌ عَظِیْمٌ ۟۠
8.28. -நம்பிக்கையாளர்களே!- உங்களுடைய செல்வங்களும் பிள்ளைகளும் அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய சோதனையே என்பதை அறிந்துகொள்ளுங்கள். அவைகள் மறுமைக்காக செயல்படுவதை விட்டும் உங்களைத் தடுக்கும். மோசடி செய்வதற்கும் உங்களைத் தூண்டும். அல்லாஹ்விடமே மகத்தான கூலி இருக்கின்றது என்பதை அறிந்துகொள்ளுங்கள். உங்களுடைய செல்வங்களையும் பிள்ளைகளையும் கருத்தில் கொண்டு அவர்களுக்காக மோசடி செய்து இந்தக் கூலியை இழந்துவிடாதீர்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنْ تَتَّقُوا اللّٰهَ یَجْعَلْ لَّكُمْ فُرْقَانًا وَّیُكَفِّرْ عَنْكُمْ سَیِّاٰتِكُمْ وَیَغْفِرْ لَكُمْ ؕ— وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِیْمِ ۟
8.29. அல்லாஹ்வை உண்மைப்படுத்தி, அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! அறிந்துகொள்ளுங்கள், அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை நீங்கள் அஞ்சினால் சத்தியத்தையும் அசத்தியத்தையும் வேறுபடுத்திக் காட்டக்கூடியதை அவன் உங்களுக்கு வழங்குவான். எனவே எது சத்தியம் எது அசத்தியம் என உங்களுக்கு குழப்பம் ஏற்படாது. நீங்கள் செய்த தீய செயல்களை அவன் போக்கிவிடுவான். உங்களின் பாவங்களை மன்னித்து விடுவான். அல்லாஹ் மகத்தான அருளாளனாவான். அவன் தன்னை அஞ்சக்கூடிய அடியார்களுக்காக தயார் படுத்திவைத்துள்ள சுவனங்களும் அவனுடைய அருளில் உள்ளவைதான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَاِذْ یَمْكُرُ بِكَ الَّذِیْنَ كَفَرُوْا لِیُثْبِتُوْكَ اَوْ یَقْتُلُوْكَ اَوْ یُخْرِجُوْكَ ؕ— وَیَمْكُرُوْنَ وَیَمْكُرُ اللّٰهُ ؕ— وَاللّٰهُ خَیْرُ الْمٰكِرِیْنَ ۟
8.30. -தூதரே!- உம்மைக் கொலை செய்ய வேண்டும் அல்லது கைதுசெய்ய வேண்டும் அல்லது நாடுகடத்த வேண்டும் என்பதற்காக இணைவைப்பாளர்கள் இரகசியமாக திட்டம் தீட்டிக் கொண்டிருந்ததை நினைவுகூர்வீராக. அவர்கள் உமக்கு சூழ்ச்சி செய்கின்றனர். அவர்களது சூழ்ச்சியை அல்லாஹ் அவர்கள் மீதே திருப்பி விட்டு அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். அல்லாஹ்வே மிகச் சிறந்த சூழ்ச்சியாளனாவான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَاِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیٰتُنَا قَالُوْا قَدْ سَمِعْنَا لَوْ نَشَآءُ لَقُلْنَا مِثْلَ هٰذَاۤ ۙ— اِنْ هٰذَاۤ اِلَّاۤ اَسَاطِیْرُ الْاَوَّلِیْنَ ۟
8.31. நம்முடைய வசனங்கள் அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டால் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாமல் பிடிவாதமாக, “நாங்கள் முன்னரே இதைப் போன்று செவியேற்றுவிட்டோம். நாங்கள் நினைத்தால் இது போன்று நாமும் கூறுவோம். நாங்கள் செவியேற்கும் இந்தக் குர்ஆன் முன்னோர்களின் கட்டுக் கதைகளே அன்றி வேறில்லை. ஒருபோதும் இதை நம்பமாட்டோம்” என்று கூறுகிறார்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَاِذْ قَالُوا اللّٰهُمَّ اِنْ كَانَ هٰذَا هُوَ الْحَقَّ مِنْ عِنْدِكَ فَاَمْطِرْ عَلَیْنَا حِجَارَةً مِّنَ السَّمَآءِ اَوِ ائْتِنَا بِعَذَابٍ اَلِیْمٍ ۟
8.32. -தூதரே!- இணைவைப்பாளர்கள் பின்வருமாறு கூறியதை நினைவுகூர்வீராக: “அல்லாஹ்வே! முஹம்மது கொண்டு வந்தது உண்மையாக இருக்குமானால் எங்கள் மீது வானத்திலிருந்து எம்மை அழிக்க கல்மழையைப் பொழியச் செய்வாயாக. அல்லது கடுமையான வேதனை ஏற்படுத்துவாயாக.” நிராகரிப்பு,பிடிவாதம் மிகைத்தே இவ்வாறு கூறினார்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَمَا كَانَ اللّٰهُ لِیُعَذِّبَهُمْ وَاَنْتَ فِیْهِمْ ؕ— وَمَا كَانَ اللّٰهُ مُعَذِّبَهُمْ وَهُمْ یَسْتَغْفِرُوْنَ ۟
8.33. -முஹம்மதே!- நீர் அவர்களிடையே இருக்கும் வரை அல்லாஹ், உமது அழைப்பை ஏற்றுகொண்ட அல்லது ஏற்றுக்கொள்ளாத உம் சமூகத்தை அடியோடு அழித்துவிடும் தண்டனையை வழங்கமாட்டான். அவர்களிடையே உம் இருப்பு அவர்களுக்குப் பாதுகாப்பாகும். அவர்கள் தங்களின் பாவங்களுக்கு பாவமன்னிப்புக் கோருபவர்களாக இருக்கும் வரை அல்லாஹ் அவர்களை அழித்துவிட மாட்டான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• الشكر نعمة عظيمة يزيد بها فضل الله تعالى، وينقص عند إغفالها.
1. நன்றி செலுத்துவது மிகப் பெரிய அருட்கொடையாகும். அது அல்லாஹ்வின் அருளை இன்னும் அதிகப்படுத்துகிறது. அவனது அருளை மறந்து வாழ்வது அதனைக் குறைத்துவிடுகிறது.

• للأمانة شأن عظيم في استقامة أحوال المسلمين، ما ثبتوا عليها وتخلقوا بها، وهي دليل نزاهة النفس واعتدال أعمالها.
2. முஸ்லிம் சமூகம் அமானிதப் பண்புமிக்கவர்களாகத் திகழ்வது அவர்களது நிலமைகள் சீராவதற்கான முக்கியமானதொரு விடயமாகும். இது ஆன்மாவின் நேர்மை, நீதிமிக்க அதன் செயற்பாடுகளுக்கான ஆதாரமாகும்.

• ما عند الله من الأجر على كَفِّ النفس عن المنهيات، خير من المنافع الحاصلة عن اقتحام المناهي لأجل الأموال والأولاد.
3. செல்வங்கள் மற்றும் பிள்ளைகளின் காரணமாக அல்லாஹ் தடுத்துள்ளவற்றைச் செய்து அதனால் கிடைக்கும் பலன்களை விட தடுக்கப்பட்டவற்றை விட்டும் ஆன்மாவைத் தடுத்துக்கொள்வதற்கு அல்லாஹ் வழங்கும் கூலி மிகச் சிறந்ததாகும்.

• في الآيات بيان سفه عقول المعرضين؛ لأنهم لم يقولوا: اللَّهُمَّ إن كان هذا هو الحق من عندك فاهدنا إليه.
4. இந்த வசனங்களிலே, புறக்கணிப்பவர்களின் அறிவீனம் வெளிப்படுகிறது. ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வே, இது சத்தியமாக இருந்தால் இதன்பால் எங்களுக்கு வழிகாட்டு என்று அவர்கள் பிரார்த்திக்கவில்லை.

• في الآيات فضيلة الاستغفار وبركته، وأنه من موانع وقوع العذاب.
5. வசனங்களில், -இஸ்திக்ஃபார்- பாவமன்னிப்புக் கோருதலின் சிறப்பும், அது வேதனையைத் தடுக்கும் காரணிகளில் ஒன்றாகும் என்பதும் தெளிவாகிறது.

 
የይዘት ትርጉም ምዕራፍ: አል-አንፋል
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት