Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም አንቀጽ: (1) ምዕራፍ: አል-አንፋል

அல்அன்பால்

ከመዕራፉ ዓላማዎች:
الامتنان على المؤمنين بنصر الله لهم في بدر، وبيان سنن النصر والهزيمة.
அல்லாஹ் விசுவாசிகளுக்கு பத்ர் போரில் வழங்கிய வெற்றி எனும் அருளை எடுத்துக்கூறலும், வெற்றி தோல்வியின் விதிமுறைகளைத் தெளிவுபடுத்தலும்

یَسْـَٔلُوْنَكَ عَنِ الْاَنْفَالِ ؕ— قُلِ الْاَنْفَالُ لِلّٰهِ وَالرَّسُوْلِ ۚ— فَاتَّقُوا اللّٰهَ وَاَصْلِحُوْا ذَاتَ بَیْنِكُمْ ۪— وَاَطِیْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗۤ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟
8.1. -தூதரே!- உம்முடைய தோழர்கள் போர்ச் செல்வங்களைக் குறித்து - அவற்றை எவ்வாறு பங்கிட்டீர்கள்? யாருக்கெல்லாம் வழங்குவது? என்று கேட்கிறார்கள். -தூதரே!- நீர் அவர்களின் கேள்விக்கு பதிலாக கூறுவீராக: “போர்ச் செல்வங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியன. அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அவற்றை வழங்குவார்கள்; பங்கிடுவார்கள். முழுமையாக அடிபணிவதே உங்கள் மீதுள்ள கடமையாகும். நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். உங்களிடையே காணப்படும் பிரவினையையும் விரோதத்தையும் அன்பால், அழகிய பண்பால், மன்னிப்பால் சீர்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் உண்மையில் நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள். ஏனெனில் ஈமான் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதற்கும் பாவங்களை விட்டு விலகியிருப்பதற்கும் தூண்டுகிறது. இக்கேள்வி பத்ருப் போருக்குப் பின் கேட்கப்பட்டதாகும்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• ينبغي للعبد أن يتعاهد إيمانه ويُنمِّيه؛ لأن الإيمان يزيد وينقص، فيزيد بفعل الطاعة وينقص بضدها.
1. அடியான் தன் ஈமானில் கவனம் செலுத்தி அதனை வளர்க்க வேண்டும். ஏனெனில் அது அதிகரித்து குறையக் கூடியதாகும். அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதனால் அதிகரிக்கிறது. அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்படுவதனால் அது குறைகிறது.

• الجدال محله وفائدته عند اشتباه الحق والتباس الأمر، فأما إذا وضح وبان فليس إلا الانقياد والإذعان.
2. எது சரியென்ற குழப்ப நிலை இருக்கும் பட்சத்தில்தான் தர்க்கம் புரிவது பலனளிக்கும். அது தெளிவாகிவிட்டால் அடிபணிவதைத் தவிர வேறு வழியில்லை.

• أَمْر قسمة الغنائم متروك للرّسول صلى الله عليه وسلم، والأحكام مرجعها إلى الله تعالى ورسوله لا إلى غيرهما.
3. போர்ச் செல்வங்களை பங்கிடும் உரிமை அல்லாஹ்வின் தூதருக்கு விடப்பட்டுள்ளது. மார்க்க சட்டங்களின் அதிகாரம் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மட்டுமே உரியது. ஏனைய எவருக்கும் அவ்வதிகாரம் இல்லை.

• إرادة تحقيق النّصر الإلهي للمؤمنين؛ لإحقاق الحق وإبطال الباطل.
4. சத்தியத்தை சத்தியம் எனவும் அசத்தியத்தை அசத்தியம் என நிறுவுவதற்கு நம்பிக்கையாளர்களுக்கு இறை உதவி கிடைப்பதை விரும்புதல்.

 
የይዘት ትርጉም አንቀጽ: (1) ምዕራፍ: አል-አንፋል
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት