የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም አንቀጽ: (17) ምዕራፍ: ሱረቱ አል-አንፋል
فَلَمْ تَقْتُلُوْهُمْ وَلٰكِنَّ اللّٰهَ قَتَلَهُمْ ۪— وَمَا رَمَیْتَ اِذْ رَمَیْتَ وَلٰكِنَّ اللّٰهَ رَمٰی ۚ— وَلِیُبْلِیَ الْمُؤْمِنِیْنَ مِنْهُ بَلَآءً حَسَنًا ؕ— اِنَّ اللّٰهَ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
8.17. -நம்பிக்கையாளர்களே!- பத்ருப் போரில் இணைவைப்பாளர்களை உங்களுடைய பலத்தையும் ஆற்றலையும் கொண்டு நீங்கள் கொலை செய்யவில்லை. மாறாக அல்லாஹ்தான் உங்களுக்கு அதற்கு உதவி செய்தான். -தூதரே!- நீர் இணைவைப்பாளர்களை நோக்கி எறிந்த சமயத்தில் நீர் எறியவில்லை. மாறாக அல்லாஹ்தான் நீங்கள் எரிந்ததை அவர்களை அடையச் செய்து எரிந்தான். எண்ணிக்கையிலும் முன்னேற்பாட்டிலும் அவர்கள் குறைவானவர்களாக இருந்தும் அல்லாஹ் எதிரிகளுக்கு எதிராக நம்பிக்கையாளர்களுக்கு உதவி செய்து அருள் புரிந்து அவர்கள் நன்றி செலுத்துகிறார்களா என்பதை சோதிக்க விரும்புகிறான். அல்லாஹ் உங்களின் பிரார்த்தனைகளையும் சொற்களையும் செவியேற்கக்கூடியவன். உங்களின் செயல்களையும், எதில் உங்களுக்கு நன்மை அடங்கியுள்ளது என்பதையும் அவன் நன்கறிந்தவன்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• من كان الله معه فهو المنصور وإن كان ضعيفًا قليلًا عدده، وهذه المعية تكون بحسب ما قام به المؤمنون من أعمال الإيمان.
1. அல்லாஹ் யாருடன் இருக்கின்றானோ அவர்களே வெற்றியாளர்கள். அவர்கள் பலவீனர்களாக, குறைந்த எண்ணிக்கையினராக இருந்தாலும் சரியே. நம்பிக்கையாளர்கள் செய்யும் நற்செயல்களைப் பொறுத்தே இந்த தோழமை அமையும்.

• المؤمن مطالب بالأخذ بالأسباب المادية، والقيام بالتكليف الذي كلفه الله، ثم يتوكل على الله، ويفوض الأمر إليه، أما تحقيق النتائج والأهداف فهو متروك لله عز وجل.
2. ஒரு நம்பிக்கையாளன் முதலில் வெளிரங்கமான காரணகாரியங்களைச் செய்து அல்லாஹ் தன் மீது கடமையாக்கிய கடமைகளை செய்யுமாறு வேண்டப்பட்டுள்ளான். பின்னர் அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைக்க வேண்டும். தன் விவகாரத்தை அவனிடமே ஒப்படைத்துவிட வேண்டும். நோக்கங்களையும் விளைவுகளையும் அல்லாஹ்விடமே விட்டுவிட வேண்டும்.

• في الآيات دليل على أن الله تعالى لا يمنع الإيمان والخير إلا عمَّن لا خير فيه، وهو الذي لا يزكو لديه هذا الإيمان ولا يثمر عنده.
3. வசனங்களிலே, யாரிடம் எந்த நன்மையும் இல்லையோ அவர்களையே அல்லாஹ் ஈமானை விட்டும் தடுக்கிறான் என்ற விஷயம் தெளிவாகிறது.

• على العبد أن يكثر من الدعاء: يا مقلب القلوب ثبِّت قلبي على دينك، يا مُصرِّف القلوب اصرف قلبي إلى طاعتك.
4. அடியான் பின்வரும் பிராத்தனையைக் கொண்டு அதிகமதிகம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும்: “உள்ளங்களைப் புரட்டக்கூடியவனே! என் உள்ளத்தை உன் மார்க்கத்தின் மீது நிலைத்திருக்கச் செய்வாயாக. உள்ளங்களை திருப்பக்கூடியவனே உன்னை வழிப்படுவதன்பால் என்னுடைய உள்ளத்தை திருப்புவாயாக.

• أَمَرَ الله المؤمنين ألا يُقِرُّوا المنكر بين أظهرهم فيعُمَّهم العذاب.
5. தமக்கு மத்தியில் நிகழும் தவறான காரியத்தை அங்கீகரிக்கக் கூடாது என முஃமின்களுக்கு அல்லாஹ் ஏவியுள்ளான். அவ்வாறு அங்கீகரித்தால் தண்டனை அனைவருக்கும் ஏற்படும்.

 
የይዘት ትርጉም አንቀጽ: (17) ምዕራፍ: ሱረቱ አል-አንፋል
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - የትርጉሞች ማዉጫ

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

መዝጋት