Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም ምዕራፍ: አል ኢንሺቃቅ   አንቀጽ:

அல்இன்ஷிகாக்

ከመዕራፉ ዓላማዎች:
تذكير الإنسان برجوعه لربه، وبيان ضعفه، وتقلّب الأحوال به.
மனிதன் தன் இறைவனிடமே திரும்பவேண்டும் என்பதை அவனுக்கு ஞாபகமூட்டுதலும், அவனது பலவீனத்தையும் அவனது நிலமைகள் மாறிமாறி வருவதையும் தெளிவுபடுத்தலும்

اِذَا السَّمَآءُ انْشَقَّتْ ۟ۙ
84.1. வானவர்கள் இறங்குவதால் வானம் பிளந்துவிடும்போது,
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَاَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ۟ۙ
84.2. அது தன் இறைவனின் கட்டளையை செவியேற்று அடிபணியும். அதுதான் அதற்குப் பொருத்தமானதாகும்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَاِذَا الْاَرْضُ مُدَّتْ ۟ؕ
84.3. தோலை விரிப்பது போல் பூமியை அல்லாஹ் விரியச் செய்யும் போது
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَاَلْقَتْ مَا فِیْهَا وَتَخَلَّتْ ۟ۙ
84.4. அது தன்னுள் இருக்குள் பொக்கிஷங்களையும் இறந்தவர்களையும் எறிந்துவிட்டு வெறுமையாகிவிடும்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَاَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ۟ؕ
84.5. அது தன் இறைவனின் கட்டளையை செவியேற்று அடிபணியும். அதுதான் அதற்கு விதிக்கப்பட்டதாகும்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
یٰۤاَیُّهَا الْاِنْسَانُ اِنَّكَ كَادِحٌ اِلٰی رَبِّكَ كَدْحًا فَمُلٰقِیْهِ ۟ۚ
84.6. மனிதனே! நிச்சயமாக நீ நற்செயலோ, தீயசெயலோ செய்யக்கூடியவன். அதற்காக அல்லாஹ் உனக்குக் கூலி வழங்குவதற்காக அதனை நீ மறுமை நாளில் காண்பாய்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
فَاَمَّا مَنْ اُوْتِیَ كِتٰبَهٗ بِیَمِیْنِهٖ ۟ۙ
84.7. யாருடைய செயல்பதிவேடு அவரது வலக்கரத்தில் கொடுக்கப்படுமோ.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
فَسَوْفَ یُحَاسَبُ حِسَابًا یَّسِیْرًا ۟ۙ
84.8. அவரது செயல்களை குற்றம்பிடிக்காமல் அவருக்கு எடுத்துக்காட்டி அல்லாஹ் அவரை இலகுவான முறையில் விசாரணை செய்வான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَّیَنْقَلِبُ اِلٰۤی اَهْلِهٖ مَسْرُوْرًا ۟ؕ
84.9. அவர் தம் குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியாக திரும்புவார்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَاَمَّا مَنْ اُوْتِیَ كِتٰبَهٗ وَرَآءَ ظَهْرِهٖ ۟ۙ
84.10. யாருடைய செயல்பதிவேடு அவரது முதுகுக்குப் பின்னால் இடக்கரத்தில் கொடுக்கப்படுமோ.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
فَسَوْفَ یَدْعُوْا ثُبُوْرًا ۟ۙ
84.11. அவர் தனக்குத் தானே அழிவைக் கூவி அழைப்பார்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَّیَصْلٰی سَعِیْرًا ۟ؕ
84.12. அவர் நரக நெருப்பில் நுழைந்து அதன் வெப்பத்தை அனுபவிப்பார்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
اِنَّهٗ كَانَ فِیْۤ اَهْلِهٖ مَسْرُوْرًا ۟ؕ
84.13. நிச்சயமாக அவர் உலகில் தன் நிராகரிப்பு மற்றும் பாவங்கள் என்பவற்றில் ஈடுபட்டுக்கொண்டு தன் குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியாக இருந்தார்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
اِنَّهٗ ظَنَّ اَنْ لَّنْ یَّحُوْرَ ۟ۚۛ
84.14. நிச்சயமாக அவர் இறந்த பிறகு மீண்டும் உயிர்பெறமாட்டார் என்றே எண்ணியிருந்தார்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
بَلٰۤی ۛۚ— اِنَّ رَبَّهٗ كَانَ بِهٖ بَصِیْرًا ۟ؕ
84.15. ஏனில்லை. நிச்சயமாக அல்லாஹ் அவரை முதன்முறையாகப் படைத்ததுபோன்றே மீண்டும் அவரை வாழ்வின் பக்கம் திருப்புவான். நிச்சயமாக அவரது இறைவன் அவரது நிலையைப் பார்க்கக்கூடியவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. விரைவில் அவரது செயலுக்கேற்ப அவன் அவருக்குக் கூலி வழங்குவான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
فَلَاۤ اُقْسِمُ بِالشَّفَقِ ۟ۙ
84.16. சூரியன் மறைந்த பிறகு அடிவானத்தில் தோன்றும் செந்நிறத்தின் மீது அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَالَّیْلِ وَمَا وَسَقَ ۟ۙ
84.17. இரவின் மீதும் அது ஒன்று சேர்ப்பவற்றின் மீதும் அவன் சத்தியம் செய்கின்றான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَالْقَمَرِ اِذَا اتَّسَقَ ۟ۙ
84.18. சந்திரன் மீதும் அது ஒன்று சேர்ந்து பூரண சந்திரனாக ஆவதின் மீதும் அவன் சத்தியம் செய்கின்றான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
لَتَرْكَبُنَّ طَبَقًا عَنْ طَبَقٍ ۟ؕ
84.19. -மனிதர்களே!- விந்திலிருந்து இரத்தக்கட்டியாக, இரத்தக்கட்டியிலிருந்து சதைத்துண்டாக, வாழ்விலிருந்து மரணத்தை நோக்கி, மரணத்திலிருந்து மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை நோக்கி நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலையை நோக்கி நிச்சயம் ஏறிச்செல்வீர்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
فَمَا لَهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟ۙ
84.20. இந்த நிராகரிப்பாளர்களுக்கு என்னவாயிற்று? அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் அவர்கள் நம்பிக்கைகொள்வதில்லையே!
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَاِذَا قُرِئَ عَلَیْهِمُ الْقُرْاٰنُ لَا یَسْجُدُوْنَ ۟
84.21. அவர்களிடம் குர்ஆன் எடுத்துரைக்கப்பட்டால் தங்கள் இறைவனுக்காக சிரம்பணிவதுமில்லையே!
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
بَلِ الَّذِیْنَ كَفَرُوْا یُكَذِّبُوْنَ ۟ؗۖ
84.22. மாறாக நிராகரிப்பாளர்கள் தூதர் தங்களிடம் கொண்டுவந்ததை பொய்யாக்குகிறார்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَاللّٰهُ اَعْلَمُ بِمَا یُوْعُوْنَ ۟ؗۖ
84.23. அவர்களின் உள்ளங்கள் சேர்த்து வைத்திருப்பதை அவன் அறிவான். அவர்கள் செய்யும் செயல்கள் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِیْمٍ ۟ۙ
84.24. -தூதரே!- அவர்களுக்கு வேதனைமிக்க தண்டனை காத்திருக்கின்றது என்று அறிவித்துவிடுவீராக.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• خضوع السماء والأرض لربهما.
1. வானமும் பூமியும் தம் இறைவனுக்குக் கட்டுப்படுகின்றன.

• كل إنسان ساعٍ إما لخير وإما لشرّ.
2. ஒவ்வொரு மனிதனும் நன்மையை நோக்கியோ, தீமையை நோக்கியோ முயற்சி செய்யக்கூடியவன்தான்.

• علامة السعادة يوم القيامة أخذ الكتاب باليمين، وعلامة الشقاء أخذه بالشمال.
3. வலக்கரத்தால் செயல்பதிவேட்டை பெற்றுகொள்வது நற்பாக்கியத்தின் அடையாளமாகும். இடக்கரத்தால் செயல்பதிவேட்டை பெற்றுக்கொள்வது துர்பாக்கியத்தின் அடையாளமாகும்.

 
የይዘት ትርጉም ምዕራፍ: አል ኢንሺቃቅ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት