Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም ምዕራፍ: አል ፈጅር   አንቀጽ:
وَجِایْٓءَ یَوْمَىِٕذٍ بِجَهَنَّمَ ۙ۬— یَوْمَىِٕذٍ یَّتَذَكَّرُ الْاِنْسَانُ وَاَنّٰی لَهُ الذِّكْرٰی ۟ؕ
89.23. அந்த நாளில் நரகம் கொண்டுவரப்படும். அதற்கு எழுபதாயிரம் கடிவாளங்கள் இருக்கும். ஒவ்வொரு கயிற்றையும் எழுபதாயிரம் வானவர்கள் இழுத்துக் கொண்டு வருவார்கள். அந்ந நாளில் மனிதன் அல்லாஹ்வின் விஷயத்தில் தான் செய்த தவறுகளை நினைத்துப் பார்ப்பான். நிச்சயமாக அந்ந நாளில் நினைத்துப் பார்ப்பதால் என்ன பயன் ஏற்பட்டுவிடப் போகிறது. ஏனெனில் திட்டமாக அது கூலி வழங்கப்படும் நாளாகும். செயல்படும் நாளல்ல.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
یَقُوْلُ یٰلَیْتَنِیْ قَدَّمْتُ لِحَیَاتِیْ ۟ۚ
89.24. அப்போது அவன் கடும் வேதனையுடன் கூறுவான்: “அந்தோ! உண்மையான வாழ்க்கையான என் மறுமை வாழ்க்கைக்காக நான் நற்செயல்களை முற்படுத்தியிருக்க வேண்டுமே!”
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
فَیَوْمَىِٕذٍ لَّا یُعَذِّبُ عَذَابَهٗۤ اَحَدٌ ۟ۙ
89.25. அந்த நாளில் அல்லாஹ் தண்டிப்பதுபோன்று யாரும் தண்டிக்க முடியாது. ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ்வின் தண்டனை கடுமையானது, நிலையானது.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَّلَا یُوْثِقُ وَثَاقَهٗۤ اَحَدٌ ۟ؕ
89.26. அவன் நிராகரிப்பாளர்களை சங்கிலிகளால் கட்டுவதுபோன்று வேறு யாரும் கட்ட முடியாது.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
یٰۤاَیَّتُهَا النَّفْسُ الْمُطْمَىِٕنَّةُ ۟ۗۙ
89.27. நம்பிக்கைகொண்ட ஆன்மாவிடம் அது மரணிக்கும் போதும் மறுமை நாளிலும் கூறப்படும்: “நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரிந்து திருப்தியடைந்த ஆன்மாவே!
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ارْجِعِیْۤ اِلٰی رَبِّكِ رَاضِیَةً مَّرْضِیَّةً ۟ۚ
89.28. நீ உனது இறைவனிடமிருந்து பெறும் உயரிய நன்மையைக் கொண்டு திருப்தியடைந்த நிலையில், உன்னிடம் காணப்படும் நற்செயல்களினால் அவனது திருப்தியை அடைந்த நிலையிலும் உன் இறைவனின்பால் செல்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
فَادْخُلِیْ فِیْ عِبٰدِیْ ۟ۙ
89.29. என்னுடைய நல்லடியார்களின் அணியில் பிரவேசித்து விடுவாயாக.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَادْخُلِیْ جَنَّتِیْ ۟۠
89.30. அவர்களுடன் நான் அவர்களுக்காக தயார்படுத்தி வைத்துள்ள எனது சுவனத்தில் பிரவேசித்து விடுவாயாக.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• عتق الرقاب، وإطعام المحتاجين في وقت الشدة، والإيمان بالله، والتواصي بالصبر والرحمة: من أسباب دخول الجنة.
1. அடிமையை விடுதலை செய்வது, கஷ்டமான சமயங்களில் தேவையுடையோருக்கு உணவளிப்பது, அல்லாஹ்வின்மீது நம்பிக்கை கொள்வது, பொறுமையாக இருக்கும்படியும் கருணையோடு நடந்துகொள்ளும்படியும் ஒருவருக்கொருவர் அறிவுரை வழங்குவது சுவனத்தில் நுழைவிக்கும் காரணிகளாக இருக்கின்றன.

• من دلائل النبوة إخباره أن مكة ستكون حلالًا له ساعة من نهار.
2. நிச்சயமாக பகலின் சில மணி நேரங்கள் மக்கா நபியவர்களுக்கு ஹலாலாக மாறிவிடும் என்ற அறிவிப்பு நபித்துவத்தின் அடையாளங்களில் ஒன்றே.

• لما ضيق الله طرق الرق وسع طرق العتق، فجعل الإعتاق من القربات والكفارات.
3. அடிமைப்படுத்தலின் வழிகளை அல்லாஹ் குறைக்கும் அதேவேளை உரிமையிடுவதற்கான வழிகளை விரிவுபடுத்தியுள்ளான். அதனால்தான் உரிமையிடுதலை வணக்கங்கள் மற்றும் குற்றப்பரிகாரங்களில் ஒன்றாக ஆக்கியுள்ளான்.

 
የይዘት ትርጉም ምዕራፍ: አል ፈጅር
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት