Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም ምዕራፍ: አል ለይል   አንቀጽ:
فَسَنُیَسِّرُهٗ لِلْعُسْرٰی ۟ؕ
92.10. நாம் அவருக்குத் தீயதை இலகுபடுத்தி நலவு புரிவதை கடினமாக்கிவிடுவோம்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَمَا یُغْنِیْ عَنْهُ مَالُهٗۤ اِذَا تَرَدّٰی ۟ؕ
92.11. அவன் அழிந்து நரகத்தில் நுழைந்துவிட்டால் அவன் கஞ்சத்தனம் செய்தவை அவனுக்கு எந்தப் பயனையும் அளிக்காது.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
اِنَّ عَلَیْنَا لَلْهُدٰی ۟ؗۖ
92.12. நிச்சயமாக அசத்தியத்திலிருந்து சத்தியப் பாதையை தெளிவுபடுத்துவது நம்மீதுள்ள கடமையாகும்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَاِنَّ لَنَا لَلْاٰخِرَةَ وَالْاُوْلٰی ۟
92.13. நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கையும் மறுவுலக வாழ்க்கையும் நமக்கே உரியதாகும். அவற்றில் நாம் விரும்பியவாறு செயல்படுகின்றோம். நம்மைத்தவிர வேறு யாருக்கும் அது உரியதல்ல.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
فَاَنْذَرْتُكُمْ نَارًا تَلَظّٰی ۟ۚ
92.14. -மக்களே!- நீங்கள் அல்லாஹ்வுக்கு மாறாகச் செயல்பட்டால் எரியக்கூடிய நரகத்தைவிட்டும் நான் உங்களை எச்சரித்துவிட்டேன்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
لَا یَصْلٰىهَاۤ اِلَّا الْاَشْقَی ۟ۙ
92.15. துர்பாக்கியசாலியான நிராகரிப்பாளன்தான் இந்த நரகத்தின் வெப்பத்தை அனுபவிப்பான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
الَّذِیْ كَذَّبَ وَتَوَلّٰی ۟ؕ
92.16. அவன் தூதர் கொண்டுவந்ததை பொய் எனக் கூறினான். அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்தாமல் புறக்கணித்தான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَسَیُجَنَّبُهَا الْاَتْقَی ۟ۙ
92.17. அல்லாஹ்வை அதிகம் அஞ்சக்கூடியவரான அபூபக்கர் (ரலி) அதனைவிட்டும் தூரமாக்கப்பட்டுவிடுவார்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
الَّذِیْ یُؤْتِیْ مَالَهٗ یَتَزَكّٰی ۟ۚ
92.18. அவர் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக தம் செல்வங்களை நல்வழிகளில் செலவு செய்கிறார்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَمَا لِاَحَدٍ عِنْدَهٗ مِنْ نِّعْمَةٍ تُجْزٰۤی ۟ۙ
92.19. தன்மீது அருள்புரிந்த ஒருவருக்கு பிரதியுபகாரம் செய்வதற்காக அவர் தம் செல்வத்தை செலவுசெய்யவில்லை.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
اِلَّا ابْتِغَآءَ وَجْهِ رَبِّهِ الْاَعْلٰی ۟ۚ
92.20. தான் செலவழிக்கும் செல்வத்தின் மூலம் அவர் தனது படைப்பின் மேலே உயர்ந்துள்ள அல்லாஹ்வின் திருமுகத்தையே நாடுகின்றார்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَلَسَوْفَ یَرْضٰی ۟۠
92.21. அல்லாஹ் அவருக்கு அளிக்கும் கண்ணியமான கூலியைக் கொண்டு அவர் விரைவில் திருப்தியடைவார்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• منزلة النبي صلى الله عليه وسلم عند ربه لا تدانيها منزلة.
1. தனது இறைவனிடம் நபியவர்களுக்குள்ள ஈடு இணையற்ற அந்தஸ்து.

• شكر النعم حقّ لله على عبده.
2. அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்துவது அல்லாஹ்வுக்கு அடியான் செய்ய வேண்டிய கடமையாகும்.

• وجوب الرحمة بالمستضعفين واللين لهم.
3. பலவீனர்களுக்கு கருணை காட்டுதல் மற்றும் அவர்களுடன் மிருதுவாக நடப்பதன் அவசியம்.

 
የይዘት ትርጉም ምዕራፍ: አል ለይል
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት