Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የታሚልኛ ቋንቋ ትርጉም፤ በዑመር ሸሪፍ * - የትርጉሞች ማዉጫ

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

የይዘት ትርጉም ምዕራፍ: ዩኑስ   አንቀጽ:
اَلَاۤ اِنَّ اَوْلِیَآءَ اللّٰهِ لَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟ۚ
அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்வின் நண்பர்கள், - அவர்கள் மீது ஒரு பயமுமில்லை; இன்னும், அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
الَّذِیْنَ اٰمَنُوْا وَكَانُوْا یَتَّقُوْنَ ۟ؕ
அவர்கள் (அல்லாஹ்வை) நம்பிக்கை கொள்வார்கள். இன்னும், அவனை அஞ்சுபவர்களாக இருப்பார்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
لَهُمُ الْبُشْرٰی فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَفِی الْاٰخِرَةِ ؕ— لَا تَبْدِیْلَ لِكَلِمٰتِ اللّٰهِ ؕ— ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟ؕ
உலக வாழ்க்கையிலும், இன்னும் மறுமை வாழ்க்கையிலும் அவர்களுக்கே நற்செய்தி உண்டு. அல்லாஹ்வுடைய வாக்குகளில் மாற்றம் அறவே இல்லை. இதுதான் மகத்தான வெற்றியாகும்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَلَا یَحْزُنْكَ قَوْلُهُمْ ۘ— اِنَّ الْعِزَّةَ لِلّٰهِ جَمِیْعًا ؕ— هُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
(நபியே!) இன்னும், அவர்களுடைய (தீய) சொல் உம்மை கவலைக்குள்ளாக்க வேண்டாம். நிச்சயமாக கண்ணியம் அனைத்தும் அல்லாஹ்விற்கு உரியன! அவன் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
اَلَاۤ اِنَّ لِلّٰهِ مَنْ فِی السَّمٰوٰتِ وَمَنْ فِی الْاَرْضِ ؕ— وَمَا یَتَّبِعُ الَّذِیْنَ یَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ شُرَكَآءَ ؕ— اِنْ یَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَاِنْ هُمْ اِلَّا یَخْرُصُوْنَ ۟
அறிந்து கொள்ளுங்கள்! வானங்களில் உள்ளவர்களும்; இன்னும், பூமியில் உள்ளவர்களும் நிச்சயமாக அல்லாஹ்விற்குரியவர்களே. அல்லாஹ்வை அன்றி (அவனுக்கு இணையாக கற்பனை செய்யப்பட்ட) தெய்வங்களிடம் பிரார்த்திப்பவர்கள் எதைப் பின்பற்றுகிறார்கள்? சந்தேகத்தைத் தவிர அவர்கள் (உறுதியான உண்மையை) பின்பற்றுவதில்லை. இன்னும், அவர்கள் (வீணான) கற்பனை செய்பவர்களாகவே தவிர (உண்மையான ஆதாரங்களை ஏற்பவர்களாக) இல்லை!
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
هُوَ الَّذِیْ جَعَلَ لَكُمُ الَّیْلَ لِتَسْكُنُوْا فِیْهِ وَالنَّهَارَ مُبْصِرًا ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّسْمَعُوْنَ ۟
அவன்தான் உங்களுக்கு இரவை, நீங்கள் அதில் சுகம் பெறுவதற்காகவும்; இன்னும், பகலை பார்க்கக்கூடிய (வெளிச்சமுள்ள)தாகவும் ஆக்கினான். (அவனுடைய வசனங்களுக்கு) செவிசாய்க்கின்ற மக்களுக்கு நிச்சயமாக இதில் (ஏராளமான) அத்தாட்சிகள் உள்ளன.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
قَالُوا اتَّخَذَ اللّٰهُ وَلَدًا سُبْحٰنَهٗ ؕ— هُوَ الْغَنِیُّ ؕ— لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ— اِنْ عِنْدَكُمْ مِّنْ سُلْطٰنٍ بِهٰذَا ؕ— اَتَقُوْلُوْنَ عَلَی اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ۟
அல்லாஹ் (தனக்கு) ஒரு குழந்தையை ஏற்படுத்திக் கொண்டான் என்று (சிலர்) கூறுகிறார்கள். அவனோ மிகப் பரிசுத்தமானவன். அவன் (சந்ததிகளை விட்டு) மிகவும் தேவையற்றவன். வானங்களில் உள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன. இ(வ்வாறு கூறுவ)தற்கு உங்களிடம் எந்த ஓர் ஆதாரமும் இல்லை. நீங்கள் (ஆதாரத்துடன்) அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாக இட்டுகட்டி) கூறுகிறீர்களா?
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
قُلْ اِنَّ الَّذِیْنَ یَفْتَرُوْنَ عَلَی اللّٰهِ الْكَذِبَ لَا یُفْلِحُوْنَ ۟ؕ
(நபியே!) கூறுவீராக: “நிச்சயமாக அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.”
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
مَتَاعٌ فِی الدُّنْیَا ثُمَّ اِلَیْنَا مَرْجِعُهُمْ ثُمَّ نُذِیْقُهُمُ الْعَذَابَ الشَّدِیْدَ بِمَا كَانُوْا یَكْفُرُوْنَ ۟۠
இவ்வுலகில் (அவர்களுக்கு அற்ப) சுகம் (உண்டு). பிறகு, நம்மிடமே அவர்களுடைய மீளுமிடம் இருக்கிறது. பிறகு, அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக கடினமான தண்டனையை அவர்கள் சுவைக்கும்படி செய்வோம்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
 
የይዘት ትርጉም ምዕራፍ: ዩኑስ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የታሚልኛ ቋንቋ ትርጉም፤ በዑመር ሸሪፍ - የትርጉሞች ማዉጫ

ተርጓሚ ሸይኽ ዑመር ሸሪፍ ቢን ዐብዱሰላም

መዝጋት