የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

የገፅ ቁጥር:close

external-link copy
62 : 2

اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَالَّذِیْنَ هَادُوْا وَالنَّصٰرٰی وَالصّٰبِـِٕیْنَ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ ۪ۚ— وَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟

நிச்சயமாக நம்பிக்கையாளர்கள், யூதர்கள், கிறித்துவர்கள், ஸாபியிகள் (இவர்களில்) எவர் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் (உண்மையாகவே) நம்பிக்கை கொண்டு நன்மை செய்தார்களோ, அவர்களுக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடத்தில் உண்டு; அவர்கள் மீது பயமுமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
63 : 2

وَاِذْ اَخَذْنَا مِیْثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّوْرَ ؕ— خُذُوْا مَاۤ اٰتَیْنٰكُمْ بِقُوَّةٍ وَّاذْكُرُوْا مَا فِیْهِ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ۟

உங்களுக்கு மேல் மலையை உயர்த்தி உங்கள் உறுதி மொழியை நாம் வாங்கிய சமயத்தை நினைவு கூருங்கள். நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக நாம் உங்களுக்குக் கொடுத்த (தவ்றாத்)தை பலமாகப் (பற்றிப்) பிடியுங்கள். அதில் உள்ளதை நினைவு கூருங்கள். info
التفاسير:

external-link copy
64 : 2

ثُمَّ تَوَلَّیْتُمْ مِّنْ بَعْدِ ذٰلِكَ ۚ— فَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَیْكُمْ وَرَحْمَتُهٗ لَكُنْتُمْ مِّنَ الْخٰسِرِیْنَ ۟

பிறகு, அதன் பின்னர் (வாக்கிலிருந்து புறக்கணித்து) திரும்பிவிட்டீர்கள். உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும் அவனின் கருணையும் இல்லையென்றால் நீங்கள் நஷ்டவாளிகளில் ஆகியிருப்பீர்கள். info
التفاسير:

external-link copy
65 : 2

وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِیْنَ اعْتَدَوْا مِنْكُمْ فِی السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُوْنُوْا قِرَدَةً خٰسِـِٕیْنَ ۟ۚ

சனிக்கிழமைகளில் உங்களில் (நமது கட்டளையை) மீறியவர்களையும் எனவே, "சிறுமைப்பட்ட குரங்குகளாகி விடுங்கள்!" என அவர்களுக்கு நாம் கூறியதையும் திட்டமாக அறிந்து கொண்டீர்கள். info
التفاسير:

external-link copy
66 : 2

فَجَعَلْنٰهَا نَكَالًا لِّمَا بَیْنَ یَدَیْهَا وَمَا خَلْفَهَا وَمَوْعِظَةً لِّلْمُتَّقِیْنَ ۟

அதை (-அந்த தண்டனையை-) அதற்கு முந்திய பாவங்களுக்கும் (அதுபோன்ற) அதற்குப் பிந்திய பாவங்களுக்கும் ஓர் எச்சரிக்கை மிகுந்த படிப்பினையாகவும், அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு ஓர் உபதேசமாகவும் ஆக்கினோம். info
التفاسير:

external-link copy
67 : 2

وَاِذْ قَالَ مُوْسٰی لِقَوْمِهٖۤ اِنَّ اللّٰهَ یَاْمُرُكُمْ اَنْ تَذْبَحُوْا بَقَرَةً ؕ— قَالُوْۤا اَتَتَّخِذُنَا هُزُوًا ؕ— قَالَ اَعُوْذُ بِاللّٰهِ اَنْ اَكُوْنَ مِنَ الْجٰهِلِیْنَ ۟

"ஒரு பசுவை நீங்கள் அறுப்பதற்கு நிச்சயமாக அல்லாஹ் உங்களை ஏவுகிறான்" என மூஸா தன் சமுதாயத்திற்கு கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். (அதற்கவர்கள் மூஸாவே!) "எங்களை பரிகாசமாக எடுத்துக் கொள்கிறீரா?" எனக் கூறினார்கள். "அறிவீனர்களில் நான் ஆகுவதை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" எனக் கூறினார் (மூஸா). info
التفاسير:

external-link copy
68 : 2

قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ یُبَیِّنْ لَّنَا مَا هِیَ ؕ— قَالَ اِنَّهٗ یَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ لَّا فَارِضٌ وَّلَا بِكْرٌ ؕ— عَوَانٌ بَیْنَ ذٰلِكَ ؕ— فَافْعَلُوْا مَا تُؤْمَرُوْنَ ۟

"எங்களுக்காக உம் இறைவனிடம் பிரார்த்திப்பீராக! அ(ந்த மாட்டின் வய)து என்னவென்று எங்களுக்கு அவன் விவரிப்பான்" எனக் கூறினார்கள். "நிச்சயமாக அது கிழடும் அல்ல; இளங்கன்றுமல்ல. அதற்கு மத்தியில் நடுத்தரமான ஒரு பசு என நிச்சயமாக அவன் கூறுகிறான். எனவே, நீங்கள் ஏவப்படுவதைச் செய்யுங்கள்" எனக் கூறினார். info
التفاسير:

external-link copy
69 : 2

قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ یُبَیِّنْ لَّنَا مَا لَوْنُهَا ؕ— قَالَ اِنَّهٗ یَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ صَفْرَآءُ ۙ— فَاقِعٌ لَّوْنُهَا تَسُرُّ النّٰظِرِیْنَ ۟

"எங்களுக்காக உம் இறைவனிடம் பிரார்த்திப்பீராக! அதன் நிறம் என்ன என்று விவரிப்பான்" எனக் கூறினார்கள். நிச்சயமாக அது மஞ்சள் நிறமான பசு; அதன் நிறம் தூய்மையானது (கலப்பற்றது); அது பார்ப்பவர்களை மகிழ்விக்கும் என நிச்சயமாக அவன் கூறுகிறான் என (மூஸா) கூறினார். info
التفاسير: