للإطلاع على الموقع بحلته الجديدة

ترجمة معاني القرآن الكريم - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - فهرس التراجم


ترجمة معاني سورة: البقرة   آية:
قُلْنَا اهْبِطُوْا مِنْهَا جَمِیْعًا ۚ— فَاِمَّا یَاْتِیَنَّكُمْ مِّنِّیْ هُدًی فَمَنْ تَبِعَ هُدَایَ فَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟
2.38. நாம் அவர்களிடம் கூறினோம்: நீங்கள் அனைவரும் சொர்க்கத்திலிருந்து பூமியில் இறங்கிவிடுங்கள். என் தூதர்களின் மூலமாக உங்களிடம் வழிகாட்டுதல் வரும்போது, யார் என் தூதர்களின்மீது நம்பிக்கைகொண்டு, அந்த வழிகாட்டுதலைப் பின்பற்றுவார்களோ அவர்கள் மறுமையில் அச்சப்பட மாட்டார்கள்; உலகில் இழந்த விஷயங்களை எண்ணி கவலைப்படவும் மாட்டார்கள்.
التفاسير العربية:
وَالَّذِیْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰیٰتِنَاۤ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ— هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟۠
2.39. நிராகரித்து நம்முடைய வசனங்களை பொய் எனக்கூறி மறுப்பவர்கள்தாம் நரகவாசிகள். அதிலிருந்து அவர்கள் ஒரு போதும் வெளியேற முடியாது.
التفاسير العربية:
یٰبَنِیْۤ اِسْرَآءِیْلَ اذْكُرُوْا نِعْمَتِیَ الَّتِیْۤ اَنْعَمْتُ عَلَیْكُمْ وَاَوْفُوْا بِعَهْدِیْۤ اُوْفِ بِعَهْدِكُمْ ۚ— وَاِیَّایَ فَارْهَبُوْنِ ۟
2.40. அல்லாஹ்வின் தூதர் யஅகூபின் மக்களே! அல்லாஹ் தொடர்ந்து உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளை நினைவுகூருங்கள். அவற்றிற்கு நன்றி செலுத்துங்கள். நீங்கள் எனக்கு அளித்த வாக்குறுதியை பேணிக்கொள்ளுங்கள். அது என்மீதும் என்னுடைய தூதர்கள் மீதும் நம்பிக்கை கொண்டு என்னுடைய மார்க்கத்தின்படி செயல்படுவதாகும். நீங்கள் உங்களின் வாக்குறுதியை நிறைவேற்றினால் இவ்வுலகில் நிம்மதியான வாழ்வையும் மறுவுலகில் சிறந்த கூலியையும் தருவேன் என்று நான் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன். எனக்கு மட்டுமே அஞ்சுங்கள். என்னிடம் செய்த ஒப்பந்தத்தை முறித்து விடாதீர்கள்.
التفاسير العربية:
وَاٰمِنُوْا بِمَاۤ اَنْزَلْتُ مُصَدِّقًا لِّمَا مَعَكُمْ وَلَا تَكُوْنُوْۤا اَوَّلَ كَافِرٍ بِهٖ ۪— وَلَا تَشْتَرُوْا بِاٰیٰتِیْ ثَمَنًا قَلِیْلًا ؗ— وَّاِیَّایَ فَاتَّقُوْنِ ۟
2.41. முஹம்மது மீது நான் இறக்கிய குர்ஆனின்மீது நம்பிக்கை கொள்ளுங்கள். அது தவ்ராத் திரிக்கப்படுவதற்கு முன்னர் அதிலிருந்த அல்லாஹ்வின் ஏகத்துவம் மற்றும் முஹம்மதின் தூதுத்துவம் குறித்து கூறப்பட்ட விஷயங்களை உண்மைப்படுத்துகிறது. அதனை நிராகரிக்கும் முதல் கூட்டமாக நீங்கள் ஆகிவிடாதீர்கள். நான் இறக்கிய வசனங்களை பதவி, பட்டம் போன்ற அற்ப ஆதாயத்திற்காக விற்றுவிடாதீர்கள். என் கோபத்தையும், தண்டனையையும் அஞ்சிக் கொள்ளுங்கள்.
التفاسير العربية:
وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَاَنْتُمْ تَعْلَمُوْنَ ۟
2.42. என் தூதர்களுக்கு நான் இறக்கிய சத்தியத்தை உங்களின் புனைந்துகூறும் பொய்களோடு கலந்துவிடாதீர்கள். உங்களின் வேதங்களில் முஹம்மதின் பண்புகளைக் குறித்து வந்துள்ள விஷயங்களை உறுதியாக அறிந்துகொண்டே அவற்றை மறைத்துவிடாதீர்கள்.
التفاسير العربية:
وَاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَارْكَعُوْا مَعَ الرّٰكِعِیْنَ ۟
2.43. தொழுகையை அதன் ருகுன்களோடும், கடமைகளோடும், சுன்னத்துகளோடும் முழுமையாக நிறைவேற்றுங்கள். அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய செல்வங்களிலிருந்து ஜகாத்தை அளியுங்கள். அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்த முஹம்மதுடைய சமூகத்தினரோடு சேர்ந்து நீங்களும் அவனுக்குக் கீழ்ப்படியுங்கள்.
التفاسير العربية:
اَتَاْمُرُوْنَ النَّاسَ بِالْبِرِّ وَتَنْسَوْنَ اَنْفُسَكُمْ وَاَنْتُمْ تَتْلُوْنَ الْكِتٰبَ ؕ— اَفَلَا تَعْقِلُوْنَ ۟
2.44. உங்களை நீங்கள் மறந்துவிட்டு மற்றவர்களை ஈமான் கொள்ளும்படியும், நற்செயல் புரியும்படியும் ஏவுவது எவ்வளவு மோசமானது! நீங்கள் தவ்ராத்தை படித்துக்கொண்டுதானே இருக்கிறீர்கள்? அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பின்பற்றுமாறு அதில்தானே கூறப்பட்டுள்ளது!? நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா என்ன?
التفاسير العربية:
وَاسْتَعِیْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ ؕ— وَاِنَّهَا لَكَبِیْرَةٌ اِلَّا عَلَی الْخٰشِعِیْنَ ۟ۙ
2.45. மார்க்க மற்றும் உலக விவகாரங்கள் அனைத்திலும் பொறுமையைக் கொண்டும் அல்லாஹ்வின் பக்கம் உங்களை நெருக்கி வைத்து அவனுடன் இணைக்கும் தொழுகையைக் கொண்டும் உதவிதேடுங்கள். அவன் உங்களுக்கு உதவிசெய்வான்; உங்களைப் பாதுகாப்பான்; உங்களைப் பீடித்திருக்கும் துன்பத்தையும் போக்குவான். நிச்சயமாக தொழுகை, தங்கள் இறைவனுக்குக் கீழ்ப்படிபவர்களுக்குத் தவிர மற்றவர்களுக்கு மிகவும் பாரமானது.
التفاسير العربية:
الَّذِیْنَ یَظُنُّوْنَ اَنَّهُمْ مُّلٰقُوْا رَبِّهِمْ وَاَنَّهُمْ اِلَیْهِ رٰجِعُوْنَ ۟۠
2.46. ஏனெனில் அவர்கள்தாம், மறுமைநாளில் தங்கள் இறைவனை சந்தித்தே தீர வேண்டும், தங்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்குவதற்காக அவன் பக்கமே திரும்ப வேண்டும் என்பதை உறுதியாக அறிந்தவர்கள்.
التفاسير العربية:
یٰبَنِیْۤ اِسْرَآءِیْلَ اذْكُرُوْا نِعْمَتِیَ الَّتِیْۤ اَنْعَمْتُ عَلَیْكُمْ وَاَنِّیْ فَضَّلْتُكُمْ عَلَی الْعٰلَمِیْنَ ۟
2.47. இஸ்ராயீலின் மக்களே! நான் உங்கள்மீது பொழிந்த மார்க்க மற்றும் உலகியல்ரீதியான அருட்கொடைகளை நினைவுகூருங்கள். நீங்கள் வாழ்ந்த காலத்தில் மற்ற எல்லா மக்களைவிடவும் தூதுத்துவம் மற்றும் அரசாட்சியைக் கொண்டு உங்களை சிறப்பித்ததை நினைத்துப் பாருங்கள்.
التفاسير العربية:
وَاتَّقُوْا یَوْمًا لَّا تَجْزِیْ نَفْسٌ عَنْ نَّفْسٍ شَیْـًٔا وَّلَا یُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَّلَا یُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَّلَا هُمْ یُنْصَرُوْنَ ۟
2.48. நான் கட்டளையிட்டவற்றை செயல்படுத்தி, தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி மறுமைநாளில் உங்களுக்கும் தண்டனைக்கும் இடையே தடுப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அந்த நாளில் எவரும் மற்றவருக்கு எந்தப் பயனையும் அளித்துவிட முடியாது. எவரிடமிருந்து தீங்கை அகற்றுதல் அல்லது நன்மையைக் பெற்றுக்கொள்வதற்கான எந்தப் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படாது, ஆயினும் அல்லாஹ்வின் அனுமதியுடன் தவிர. ஒருவர் பூமி நிறைய தங்கத்தை ஈடாகக் கொண்டு வந்தாலும் அது அவரிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்படாது. அந்நாளில் அவர்களுக்கு எந்தவொரு உதவியாளரும் கிடையாது. பரிந்துரையாளரோ ஈட்டுத்தொகையோ உதவியாளரோ பயனளிக்காத போது எங்கே ஓடமுடியும்?
التفاسير العربية:
من فوائد الآيات في هذه الصفحة:
• من أعظم الخذلان أن يأمر الإنسان غيره بالبر، وينسى نفسه.
1. மனிதன் தன்னை மறந்துவிட்டு மற்றவர்களை நன்மை செய்யத்தூண்டுவது பெரும் ஏமாற்றமாகும்.

• الصبر والصلاة من أعظم ما يعين العبد في شؤونه كلها.
2. பொறுமையும் தொழுகையும் அடியானின் அனைத்து விஷயங்களிலும் உதவிசெய்யக்கூடியவைகளில் மிகச் சிறந்தாகும்.

• في يوم القيامة لا يَدْفَعُ العذابَ عن المرء الشفعاءُ ولا الفداءُ، ولا ينفعه إلا عمله الصالح.
3. மறுமைநாளில் பரிந்துரை செய்பவர்களோ ஈட்டுத்தொகையோ அடியானை வேதனையிலிருந்து காப்பாற்றிவிடாது. நற்செயல்கள்தாம் அவனுக்குப் பயனளிக்கும்.

 
ترجمة معاني سورة: البقرة
فهرس السور رقم الصفحة
 
ترجمة معاني القرآن الكريم - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - فهرس التراجم

صادرة عن مركز تفسير للدراسات القرآنية.

إغلاق