21.25. -தூதரே!- உமக்கு முன்னால் அனுப்பிய தூதர்கள் அனைவருக்கும், “நிச்சயமாக என்னைத் தவிர உண்மையாக வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. எனவே என்னை மட்டுமே வணங்குங்கள். எனக்கு யாரையும் இணையாக்காதீர்கள்” என்றுதான் வஹி அறிவித்தோம்.
21.27. அவர்கள் தங்கள் இறைவனை முந்திப் பேச மாட்டார்கள். அவன் கட்டளையிடும்வரை எதுவும் பேச மாட்டார்கள். அவர்கள் அவனுடைய கட்டளைப்படியே செயல்படுகிறார்கள். அவனது கட்டளைக்கு மாறுசெய்யமாட்டார்கள்.
21.28. அவன் அவர்களின் முந்தைய மற்றும் பிந்தைய செயல்கள் அனைத்தையும் அறிவான். யாருக்குப் பரிந்துரை கிடைக்க வேண்டுமென விரும்புகிறானோ அவனுக்கு அவனுடைய அனுமதியின்றி அவர்கள் பரிந்து பேச மாட்டார்கள். அவர்கள் அவன் மீதுள்ள அச்சத்தால் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். அதனால் அவனுடைய கட்டளைக்கும், விலக்கல்களுக்கும் மாறாகச் செயல்படுவதில்லை.
21.29. வானவர்களில் யாரேனும், “அல்லாஹ்வை விடுத்து நான்தான் இறைவனாவேன்” என்று கூறியதாக வைத்துக்கொண்டால் நிச்சயமாக நாம் அதற்குத் தண்டனையாக மறுமை நாளில் நிரந்தரமான நரக வேதனையை அளிப்போம். இவ்வாறே நாம் அல்லாஹ்வை நிராகரித்து இணைவைக்கும் அநியாயக்காரர்களுக்கு தண்டனை வழங்குகிறோம்.
21.30. நிச்சயமாக வானங்களும் பூமியும் இணைந்திருந்தன. மழை இறங்குவதற்கு அவற்றிற்கிடையே எந்த இடைவெளியும் இருக்கவில்லை. எனவே நாம்தாம் அவற்றைப் பிரித்தோம் என்பதையும் நாம் விலங்கு அல்லது தாவரம் ஆகிய ஒவ்வொரு பொருளையும் வானத்திலிருந்து இறங்கும் நீரால் படைத்துள்ளோம் என்பதையும் அல்லாஹ்வை நிராகரிப்பவர்கள் அறியவில்லையா? அவற்றைக் கொண்டு அவர்கள் படிப்பினை பெற்று, அல்லாஹ் ஒருவன் மீது நம்பிக்கைகொள்ளமாட்டார்களா?
21.31. பூமி அதிலுள்ளவர்களினால் ஆட்டம் காணாமல் இருப்பதற்காக நாம் அதில் உறுதியான மலைகளை உருவாக்கியுள்ளோம். அவர்கள் தமது பயணங்களில் தாங்கள் விரும்பும் இடங்களுக்கான வழிகாட்டலைப் பெறும் பொருட்டு அதில் விசாலமான பாதைகளையும் ஏற்படுத்தியுள்ளோம்.
21.32. தூண்களின்றி விழுந்துவிடுவதிலிருந்தும், திருட்டுத்தனமாக ஒட்டுக்கேட்பதிலிருந்தும் பாதுகாக்கப்பட்ட கூரையாக நாம் வானத்தை அமைத்துள்ளோம். இணைவைப்பாளர்கள் வானத்தில் இருக்கும் சூரியன், சந்திரன் போன்ற சான்றுகளைப் புறக்கணித்து படிப்பினை பெறாமல் இருக்கிறார்கள்.
21.33. அல்லாஹ்தான் இரவை ஓய்வெடுப்பதற்காகவும் பகலை சம்பாதிப்பதற்காகவும் அமைத்துள்ளான். அவன் சூரியனை பகலுக்கு ஆதாரமாகவும் சந்திரனை இரவுக்கு ஆதாரமாகவும் அமைத்துள்ளான். சூரியன், சந்திரன் என ஒவ்வொன்றும் தன் குறிப்பிட்ட வட்டப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அதைவிட்டு நகர்ந்துவிடுவதுமில்லை, சாய்ந்துவிடுவதுமில்லை.
21.34. -தூதரே!- உமக்கு முன்னால் எந்த மனிதருக்கும் நாம் இந்த வாழ்க்கையில் நிரந்தரத்தை ஏற்படுத்தவில்லை. இந்த வாழ்க்கையில் உமக்கு வழங்கப்பட்ட தவணை நிறைவடைந்து நீர் மரணித்துவிட்டால் அவர்கள் மட்டும் உமக்குப் பிறகு நிரந்தரமாக நிலைத்திருப்பார்களா என்ன? ஒருபோதும் இல்லை.
21.35. நம்பிக்கைகொண்ட ஆன்மா, நிராகரித்த ஆன்மா என ஒவ்வொரு ஆன்மாவும் இவ்வுலகில் மரணித்தை சுவைத்தே தீர வேண்டும். -மனிதர்களே!- இவ்வுலக வாழ்வில் உங்களுக்கு கடமைகளையும் அருட்கொடைகளையும் வேதனைகளையும் அளித்து சோதிக்கின்றோம். பின்னர் நீங்கள் மரணித்த பிறகு நம்மிடமே திரும்பிவர வேண்டும். ஏனையவர்களிடம் அல்ல. நாம் உங்களின் செயல்களுக்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவோம்.
التفاسير:
|
من فوائد الآيات في هذه الصفحة:
• تنزيه الله عن الولد.
1. பிள்ளை ஏற்படுத்திக்கொள்வதைவிட்டு அல்லாஹ்வைத் தூய்மைப்படுத்தல்.
• منزلة الملائكة عند الله أنهم عباد خلقهم لطاعته، لا يوصفون بالذكورة ولا الأنوثة، بل عباد مكرمون.
2. வானவர்கள் அல்லாஹ்வை வணஹ்கி வழிபடுவதற்காகப் படைக்கபட்ட அடியார்கள் என்பதே அல்லாஹ்விடம் அவர்களுக்குள்ள மதிப்பாகும். அவர்கள் ஆண்கள் என்றோ பெண்கள் என்றோ வர்ணிக்கப்பட முடியாதவர்கள். மாறாக அல்லாஹ்வின் கண்ணியமான அடியார்களாவர்.
• خُلِقت السماوات والأرض وفق سُنَّة التدرج، فقد خُلِقتا مُلْتزِقتين، ثم فُصِل بينهما.
3. படிப்படியாகவே வானங்களும் பூமியும் படைக்கப்பட்டுள்ளன. அவை இரண்டும் சேர்ந்ததாக படைக்கப்பட்டு பின்பு பிரிக்கப்பட்டன.
• الابتلاء كما يكون بالشر يكون بالخير.
4. தீங்கின் மூலம் சோதனை ஏற்படுவது போன்று நலவின் மூலமும் அது ஏற்படும்.