22.24. லாஇலாஹ இல்லல்லாஹ் என்று சாட்சி கூறுதல், அல்லாஹ்வைப் புகழ்தல், அவனுடைய பெருமையை எடுத்துரைத்தல் போன்ற நல்ல வார்த்தைகளின் பக்கமும் சிறப்பான இஸ்லாத்தின் பாதையின் பக்கமும் அல்லாஹ் அவர்களுக்கு உலக வாழ்வில் வழிகாட்டினான்.
22.25. நிச்சயமாக அல்லாஹ்வை நிராகரித்து மற்றவர்களையும் இஸ்லாத்தில் நுழைவதை விட்டும் தடுப்பவர்கள், இணைவைப்பாளர்கள் ஹுதைபிய்யாவின் போது நடந்துகொண்டதைப் போல மஸ்ஜிதுல் ஹராமைவிட்டும் மக்களைத் தடுப்பவர்கள் ஆகியோருக்கு கடுமையான தண்டனையைச் சுவைக்கச் செய்வோம். மக்கள் தங்களின் தொழுகையில் முன்னோக்கும் கிப்லாவாகவும் ஹஜ் மற்றும் உம்ராவின் கிரிகைகளில் ஒன்றாகவும் ஆக்கிய அந்தப் பள்ளிவாயிலில் மக்காவில் வசிப்போரும் அதற்கு வெளியிலிருந்து வருவோரும் சமமானவர்களே. அங்கு வேண்டுமென்றே யார் பாவமான காரியத்தை செய்து சத்தியத்தை விட்டும் நெறிபிறழ நாடுகிறாரோ நாம் அவருக்கு வேதனை மிக்க தண்டனையை அனுபவிக்கச் செய்வோம்.
22.26. -தூதரே!- நாம் இப்ராஹீமுக்கு அறியப்படாமல் இருந்த கஃபாவின் இடத்தையும் அதன் எல்லையையும் தெளிவுபடுத்தியதை நினைவு கூர்வீராக. நாம் அவருக்கு வஹி அறிவித்தோம்: “நீர் வணக்க வழிபாட்டில் என்னுடன் எதையும் இணையாக்கி விடாதீர். மாறாக என்னை மட்டுமே வணங்குவீராக. என்னுடைய வீட்டை -தவாஃப் செய்து- சுற்றி வரக்கூடியவர்களுக்காகவும் தொழக்கூடியவர்களுக்காகவும் உள்ரங்கமான, வெளிரங்கமான அனைத்து வகையான அழுக்குகளிலிருந்தும் தூய்மைப்படுத்துவீராக.
22.27. நாம் உமக்குக் கட்டுமாறு கட்டளையிட்ட இந்த இல்லத்தை ஹஜ் செய்ய வருமாறு மக்களுக்கு அறிவிப்புச் செய்வீராக. அவர்கள் நடந்தவாறும் பயணம் செய்து களைப்பை உணர்ந்தவாறு பலவீனமான ஒவ்வொரு ஒட்டகங்களிலும் உம்மிடம் வருவார்கள். தூரமான ஒவ்வொரு இடங்களிலிருந்தும் ஒட்டகம் அவர்களைக் சுமந்து வரும்.
22.28. அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பு, நன்மையைப் பெறல், ஒற்றுமை இன்னும் பல அவர்களுக்குப் பயனளிப்பவற்றைப் பெறுவதற்காகவும் குறிப்பிட்ட நாட்களில் - துல்ஹஜ் பத்து மற்றும் அய்யாமுத் தஷ்ரீக் எனப்படும் அதனை அடுத்து வரக்கூடிய மூன்று நாட்கள் - அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும்பொருட்டு அவன் வழங்கிய ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய பலிப்பிராணிகளை அவன் பெயர்கூறி அறுத்து அவனை நினைவுகூர்வதற்காகவும் அங்கு வருவார்கள். அறுக்கப்பட்ட அந்த பிராணிகளிலிருந்து உண்ணுங்கள். கடும் வறிய ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.
22.29. பின்னர் அவர்கள் மீதமிருக்கும் ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்றிவிட்டு, தலைமுடியை மழித்து, நகங்களை வெட்டி, இஹ்ராமின் காரணமாக தேங்கியிருக்கும் அழுக்குகளைக் களைந்து இஹ்ராமிலிருந்து வெளியேறட்டும். ஹஜ் அல்லது உம்ரா அல்லது பலிப்பிராணி ஆகியவற்றில் தங்கள் மீது கடமையாக்கிக் கொண்டதை நிறைவேற்றிவிடட்டும். அநியாக்காரர்களின் ஆதிக்கத்திலிருந்து அல்லாஹ் விடுவித்த இந்த வீட்டையும் அவர்கள் தவாஃப் இபாளா மூலம் சுற்றி வரட்டும்.
22.30. உங்களுக்குக் கட்டளையிப்பட்ட -தலைமுடியை மழித்தல், நகங்களை வெட்டுதல், அழுக்குகளைக் களைதல், நேர்ச்சைகளை நிறைவேற்றுதல், இறை இல்லத்தைத் தவாஃப் செய்தல் ஆகியவை- அல்லாஹ் உங்கள் மீது கடமையாக்கியவைகளாகும். அவன் உங்கள் மீது கடமையாக்கியதை கண்ணியப்படுத்துங்கள். யார் இஹ்ராம் அணிந்த நிலையில் அல்லாஹ் விதித்த வரம்புகளில் வீழ்ந்து விடக்கூடாது, தடுத்தவற்றை ஆகுமாக்கக் கூடாது என்ற கண்ணியத்தினால் அவன் தவிர்ந்து கொள்ளுமாறு ஏவிய விடயங்களை விட்டும் தவிர்ந்து இருக்கின்றாரோ அது அவரது இறைவனிடத்தில் அவருக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் சிறந்ததாகும். -மனிதர்களே!- ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகள் அனைத்தும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஹாமியா, பஹீரா, வஸீலா ஆகிய எந்த ஒன்றையும் அவன் தடை செய்யவில்லை. அவற்றில் குர்ஆனில் காணப்படும் இறந்தவை, இரத்தம், அது போன்றவற்றை மாத்திரமே தடைசெய்துள்ளான். சிலைகள் என்னும் அசுத்தத்தை விட்டும், அல்லாஹ்வின் மீதும் அவனது படைப்புகள் மீதும் அசத்தியமாக பொய் கூறுவதை விட்டும் விலகியிருங்கள்.
التفاسير:
من فوائد الآيات في هذه الصفحة:
• حرمة البيت الحرام تقتضي الاحتياط من المعاصي فيه أكثر من غيره.
1. புனித கஃபாவின் புனிதம், ஏனைய இடங்களை விட அந்த இடத்தில் பாவங்கள் செய்வதில் இருந்து அதிகம் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதை வேண்டி நிற்கின்றது.
• بيت الله الحرام مهوى أفئدة المؤمنين في كل زمان ومكان.
2. எல்லா காலகட்டங்களிலும் இடங்களிலும் நம்பிக்கையாளர்களின் உள்ளங்கள் ஆசைகொள்ளும் இடம் அல்லாஹ்வின் புனித ஆலயமேயாகும்.
• منافع الحج عائدة إلى الناس سواء الدنيوية أو الأخروية.
3. ஹஜ்ஜுடைய இவ்வுலக, மறுவுலக பயன்கள் அனைத்தும் மனிதர்களுக்கே வந்து சேரக்கூடியது.
• شكر النعم يقتضي العطف على الضعفاء.
4. அருள்களுக்கு நன்றிசெலுத்துவது என்பது பலவீனர்களுக்கு கருணை புரிவதை வேண்டுகின்றது.